TNPSC Current Affairs Question and Answer in Tamil 28th January 2020

Current Affairs in Tamil 28th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 28th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 28th January 2020
1. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை  திட்டம் முதற்கட்டமாக தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

  1. செங்கல்பட்டு
  2. கள்ளக்குறிச்சி
  3. திருநெல்வேலி
  4. தூத்துக்குடி
Answer & Explanation
Answer: திருநெல்வேலி & தூத்துக்குடி

Explanation:

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் (One Nation One Ration Card) முதற்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

TNPSC Group 1 Model Papers – Download

2. உலக திருக்குறள் மாநாட்டின் இரண்டாம் பதிப்பு எங்கு நடைபெற உள்ளது?

  1. இங்கிலாந்து
  2. இந்தியா
  3. இலங்கை
  4. மலேசியா
Answer & Explanation
Answer: இலங்கை

Explanation:

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 21 முதல் 23 வரை நடைபெறவிருக்கும் உலகத் திருக்குறள் 2ஆவது மாநாட்டை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து இரண்டு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறை, இதய நிறைவு தியான அமைப்பு ஆகியவை இணைந்து மாநாட்டை நடத்துகின்றன.

3. தமிழகத்தின் எந்த மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன?

  1. அரியலூர் & கள்ளக்குறிச்சி
  2. தென்காசி & கள்ளக்குறிச்சி
  3. ராணிப்பேட்டை & அரியலூர்
  4. தென்காசி & ராணிப்பேட்டை
Answer & Explanation
Answer: அரியலூர் & கள்ளக்குறிச்சி

Explanation:

அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

4. ஏற்றுமதியாளா்களுக்கு ஜி.எஸ்.டி.யை திருப்பி அளிப்பதில் முதலிடம் பிடித்துள்ள மண்டலம்?

  1. மும்பை மண்டலம்
  2. சென்னை மண்டலம்
  3. பெங்களூர் மண்டலம்
  4. கொல்கத்தா மண்டலம்
Answer & Explanation
Answer: சென்னை மண்டலம்

Explanation:

ஏற்றுமதியாளா்களுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரியை சுங்கத்துறையின் சென்னை மண்டலம் 98 சதவீதம் வரை திருப்பி அளித்து நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.




5. போடோலேண்ட் என்பது பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?

  1. அசாம்
  2. பீகார்
  3. நாகலாந்து
  4. லடாக்
Answer & Explanation
Answer: அசாம்

Explanation:

போடோலேண்ட் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டெல்லியில் வைத்து கையெழுத்தாகியுள்ளது.

மத்திய அரசு, அசாம் மாநிலம் மற்றும் போடோ அமைப்பினர் இடேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

போடோ அமைப்பு என்பது அசாமில் தனி மாநிலம் கோரி ஆயுதம் தாங்கி போராடிய குழு ஆகும்.

6. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கடலோர காவல் படைக்கு தலைமை வகித்த பெண்?

  1. பாவனா கஸ்தூரி
  2. மீனா கோட்வால்
  3. பாத்திமாதான்
  4. தேவிகா
Answer & Explanation
Answer: தேவிகா

Explanation:

டில்லியில் நடந்த, குடியரசு தின அணிவகுப்பில், கடலோர காவல் படைக்கு, தாராபுரத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா தலைமை வகித்தார்.

7. தேசிய சீனியர் பில்லியர்ட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?

  1. சவுரவ் கோத்தாரி
  2. பங்கஜ் அத்வானி
  3. பிரேம் பிரகாஷ்
  4. வருண் குமார்
Answer & Explanation
Answer: பங்கஜ் அத்வானி

Explanation:

புனேயில் நடைபெற்ற தேசிய சீனியர் பில்லியர்ட்ஸ் போட்டியில் சவுரவ் கோத்தாரியை தோற்கடித்து பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இது தேசிய அளவில் அவர் பெறும் 33வது பட்டம் ஆகும்.

8. ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர் என்ற பள்ளி எங்கு துவங்கப்பட உள்ளது?

  1. உத்திரப் பிரதேசம்
  2. மத்தியப் பிரதேசம்
  3. கர்நாடகா
  4. கேரளா
Answer & Explanation
Answer: உத்திரப் பிரதேசம்

Explanation:

ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த ராஜு பையாவின் பெயரில், “ராஜூ பையா சைனிக் வித்யா மந்திர்” என்ற ராணுவ பள்ளி உத்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட உள்ளது.

இந்த பள்ளியானது ஆர்.எஸ்.எஸ்(RSS) அமைப்பினால் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

9. The Gateway: A Social Commentary on Safety of Senior Citizens என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. ஜகதீஷ் முகீ
  2. சர்பானந்த சோனாவால்
  3. ஹரிஹரன் பல்கோபால்
  4. அஸ்வனி குமார்
Answer & Explanation
Answer:ஹரிஹரன் பல்கோபால்

10. உலக புலிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜனவரி 29
  2. ஜூலை 29
  3. டிசம்பர் 29
  4. ஜூன் 29
Answer & Explanation
Answer: ஜூலை 29

Explanation:

புலிகளை காக்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும்  ஜூலை 29 உலக புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2012 முதல் 2018 வரையிலான 6 ஆண்டுகளில் 750 புலிகள் இறந்ததுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 11 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

புலிகள் பாதுகாப்புத் திட்டமான Project Tiger தொடங்கப்பட்ட ஆண்டு – 1972

More TNPSC Current Affairs



6 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 28th January 2020”

  1. respected admin team,

    i have read in one of the website that tiger protection act was 1973,i dont know whether its right or wrong if its wrong i ll correct can u pls update

    Reply

Leave a Comment