TNPSC Current Affairs Question and Answer in Tamil 29th January 2020

Current Affairs in Tamil 29th January 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 29th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 29th January 2020
1. 33-வது தென்னிந்திய அறிவியல் கண்காட்சி (SISF) நடைபெறும் இடம்?

  1. பெங்களூர்
  2. ஹைதராபாத்
  3. சென்னை
  4. கொச்சின்
Answer & Explanation
Answer: சென்னை

Explanation:

தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் ஆகியவை இணைந்து நடத்தும் 33-வது தென்னிந்திய அறிவியல் கண்காட்சி சென்னையில் உள்ள சத்யபாமா தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் எந்த தமிழக மருத்துவமனையில் புதிய புற்றுநோயியல் துறை வளாகம் திறக்கப்பட்டுள்ளது?

  1. அடையாறு புற்றுநோய் மையம்
  2. அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
  3. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
  4. ராயப்பேட்டை அரசு மருத் துவமனை
Answer & Explanation
Answer: b & d

Explanation:

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.29 கோடியே 50 லட்சம் மதிப்பிலும் ராயப்பேட்டை அரசு மருத் துவமனையில் ரூ.22 கோடியே 21 லட்சம் மதிப்பில் திய புற்றுநோயியல் துறை வளாகம் திறக்கப்பட்டுள்ளது

3. 11-வது இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி  எங்கு நடைபெறுகிறது?

  1. தஞ்சாவூர்
  2. சென்னை
  3. மைசூர்
  4. அமராவதி
Answer & Explanation
Answer: சென்னை

Explanation:

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 11-வது இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது.

4. சமீபத்தில் ராணுவ துணைத் தளபதியாக பதவியேற்றவர்?

  1. எஸ்.கே.சைனி
  2. முகுந்த் நரவேன்
  3. தேவராஜ்
  4. பிபின் ராவத்
Answer & Explanation
Answer:

Explanation:

ராணுவ துணைத் தளபதியாக எஸ்.கே.சைனி ஜனவரி 28 அன்று டெல்லியில் பதவியேற்றுக் கொண்டார்.

இவர் 1981-ம் ஆண்டு ஜாட் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




5. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா
  2. தரன்ஜித் சிங் சந்து
  3. நிருபமா மேனன் ராவ்
  4. நவ்தேஜ் சர்னா
Answer & Explanation
Answer: தரன்ஜித் சிங் சந்து

Explanation:

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா, இந்திய வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து,

புதிய தூதராக மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளாா்.

6. இந்திய செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?

  1. 1919
  2. 1920
  3. 1921
  4. 1918
Answer & Explanation
Answer: 1920

Explanation:

1920ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் (தமிழகப் பிரிவு) நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

1920-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய செஞ்சிலுவை சங்கம் தொடங்கப்பட்டது.

இதன் தமிழக பிரிவு அதே ஆண்டு நவம்பா் மாதம் முதல் செயல்படத் தொடங்கியது.

செஞ்சிலுவை சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆளுநா் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. டெல்லி
  2. பஞ்சாப்
  3. குஜராத்
  4. கர்நாடகா
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’ நடத்தப்படுகிறது.

1998 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளை தொடர்ந்து 3வது சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு குஜராத்தின் காந்திநகரில் ஜனவரி-28 தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

உருளைக்கிழங்கு உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது

8. சமீபத்தில் பெர்லின் சைக்கிள் பந்தய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. ஜெம்ஷ் சிங்
  2. மார்க் மார்குயிஸ்
  3. ஃபேபியோ குவார்டராரோ
  4. எஸ்சோ ஆல்பன்
Answer & Explanation
Answer: எஸ்சோ ஆல்பன்

Explanation:

ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் சைக்கிள் பந்தய தொடரில் இந்தியாவின் எஸ்சோ ஆல்பன் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

9. சர்வதேச தொழுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 27 ஜனவரி
  2. 28 ஜனவரி
  3. 29 ஜனவரி
  4. 30 ஜனவரி
Answer & Explanation
Answer: 30 ஜனவரி

Explanation:

10. “Human Dignity – A purpose in perpetuity” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. அஸ்வனி குமார்
  2. மஜும்தார்-ஷா
  3. பி.என். சோப்ரா
  4. நிக் அம்ப்ரோஸ்
Answer & Explanation
Answer: அஸ்வனி குமார்

Explanation:

முன்னாள் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அஸ்வனி குமார் “Human Dignity – A purpose in perpetuity” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

More TNPSC Current Affairs



We collect most of the current affairs questions from Dinamani and Tamil Hindu News Papers. All the Best!!!

3 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 29th January 2020”

  1. respected team,
    i am having doubt on 2nd question u have mentioned that TN recently has opened cancer dept in two govt hospitals in explanation u have mentioned it was royapettah hosptial but answer was rajiv gandhi govt hospital which one is correct sir can u pls response

    Reply

Leave a Comment