Current Affairs in Tamil 30th January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 30th January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. தமிழகத்தில் எங்கு 12-வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்வு நடைபெற உள்ளது?
- வேலூர்
- சென்னை
- கோவை
- சேலம்
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
புதுச்சேரியை தொடர்ந்து தமிழகத்தில் 12-வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற நிகழ்வு சென்னை அடையாரில் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பழங்குடியினருக்கு நல்ல கல்வியை அளித்து மற்ற மக்களோடு வாழவும், பழக்க வழக்கங்களில் உள்ள குறைகளைக் களையவும் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்துகிறது.
TNPSC Group 1 Model Papers – Download
2. 35-வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது?
- சென்னை
- டெல்லி
- மும்பை
- நொய்டா
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
India leather week 2020 – இன் ஒரு பகுதியாக, 35வது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
3. சமீபத்தில் 12வது டேன் கேர் மருத்துவ மாநாடு எங்கு நடைபெற்றது?
- மும்பை
- லக்னோ
- போபால்
- சென்னை
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
வருமுன் காப்பதற்கான மருத்துவம் என்ற மையக்கருத்துடன் 12வது டேன் கேர் மருத்துவ மாநாடு சென்னையில் ஜனவரி 29 அன்று நடைபெற்றது.
4. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எந்த நாட்டில் இருந்து சிறுத்தைகளை கொண்டுவர அனுமதி அளித்துள்ளது?
- நமீபியா
- ஆஸ்திரேலியா
- பிரேசில்
- இந்தோனேசியா
Answer & Explanation
Answer: நமீபியா
Explanation:
இந்திய சிறுத்தைகள் கிட்டதட்ட அழிந்துவிட்டதால் நமீபியாவில் இருந்து ஆப்பிரிக்க சிறுத்தைகளை கொண்டுவர, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NTCA) உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
5. தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டம் 1971 -இன் படி எத்தனை வாரங்கள் வரையிலான கருவை கலைக்க முடியும்?
- 20 வாரங்கள்
- 22 வாரங்கள்
- 24 வாரங்கள்
- 26 வாரங்கள்
Answer & Explanation
Answer: 20 வாரங்கள்
Explanation:
கருக்கலைப்புச் சட்டம் 1971 -இல் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டம், 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க அனுமதிக்கிறது.
ஆனால், புதிய சட்ட திருத்தம், தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத் தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க வழிவகை செய்கிறது
இந்த கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதாவை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
6. சமீபத்தில் காலமான என்.கிருஷ்ணசாமி பின்வரும் எந்த துறையை சார்ந்தவர்?
- பத்திரிகை
- பொருளாதாரம்
- விளையாட்டு
- சினிமா
Answer & Explanation
Answer: சினிமா
Explanation:
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், சின்னத்திரை இயக்கு நர், ‘கும்பகோணம் டைம்ஸ்’ பத்திரிகை ஆசிரியர் என பன் முகம் கொண்ட இயக்குநர் என்.கிருஷ்ணசாமி மாரடைப்பால் காலமானார்.
ஒன்றே குலம், படிக்காத மேதை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
7. சமீபத்தில் யாருக்கு டைகான் அமைப்பின் விருது வழங்கப்பட்டது?
- ரத்தன் டாடா
- என்.ஆர். நாராயணமூர்த்தி
- சைரஸ் மிஸ்திரி
- கௌதம் அதானி
Answer & Explanation
Answer: ரத்தன் டாடா
Explanation:
டைகான் அமைப்பின் 11-ம் ஆண்டு விழாவில் ரத்தன் டாடா வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
8. நீரஜ் சோப்ரா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- துப்பாக்கி சுடுதல்
- ஈட்டி எறிதல்
- மல்யுத்தம்
- பில்லியட்ஸ்
Answer & Explanation
Answer: ஈட்டி எறிதல்
Explanation:
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வேண்டுமென்றால் 85 மீட்டருக்கு குறையாமல் ஈட்டி எறிதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 2018-இல் காமன்வெல்த், ஜகார்த்தா ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. 2020ஆம் ஆண்டுக்கான இந்திய தோல் வாரம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜனவரி 20 – ஜனவரி 27
- ஜனவரி 27 – பிப்ரவரி 3
- பிப்ரவரி 3 – பிப்ரவரி 10
- பிப்ரவரி 10 – பிப்ரவரி 17
Answer & Explanation
Answer: ஜனவரி 27 – பிப்ரவரி 3
10. Relentless என்ற புத்தகம் பின்வரும் யாருடைய வாழ்கை பற்றிய புத்தகம்?
- சந்திர சேகர்
- பி.ஆர் அம்பேத்கர்
- நரேந்திர மோடி
- யஷ்வந்த் சிங்கா
Answer & Explanation
Answer: யஷ்வந்த் சிங்கா
Explanation:
யஷ்வந்த் சிங்கா பாஜகவின் முன்னாள் நிதியமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related