Current Affairs in Tamil 31st January 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 31st January 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியல் 2019-2020 – இல் தமிழகம் வகிக்கும் இடம்?
- 1
- 2
- 3
- 4
Answer & Explanation
Answer: 3
Explanation:
நிதி அயோக் வெளியிட்டுள்ள ’நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியல் 2019-2020’ (Sustainable Development Goals (SDGs)) இல் 70 மதிப்பீடுகளுடன் முதலிடத்தை கேரளா பிடித்துள்ளது
69 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தை ஹிமாச்சல் பிரதேச பிடித்துள்ளது
67 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தை தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் கூட்டாகவும் பெற்றுள்ளன.
நான்காம் இடத்தை கர்நாடகா ( 66 ) மற்றும் ஐந்தாமிடத்தை கோவா (65) & சிக்கிம் (65) மாநிலங்க கூட்டாக பெற்றுள்ளன.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் தொழில் 4.0 மற்றும் தொழிலாளர் உறவுமுறை வடிவமைப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் எங்கு நடைபெற்றது?
- சென்னை
- கோவை
- கொச்சின்
- திருவனந்தபுரம்
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
தி மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி’ (MCCI) சார்பில் ‘தொழில் 4.0 மற்றும் தொழிலாளர் உறவுமுறை வடிவமைப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் ஜனவரி 30 அன்று நடைபெற்றது.
3. உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில், முதலிடம் வகிக்கும் நகரம்?
- மும்பை
- மணிலா
- போகோடா
- பெங்களூர்
Answer & Explanation
Answer: பெங்களூர்
Explanation:
‘டாம்டாம்’ டிராஃபிக் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூர் பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவும், மூன்றாம் இடத்தை கொலம்பியா நாட்டின் போகோடா நகரமும் பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்தியாவில் பெங்களூர், மும்பை, புனே,டெல்லி ஆகிய 4 நகரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. சம்பிரிதி IX என்பது எந்த இருநாடுகளுக்கு இடேயேயான கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?
- இந்தியா – பங்களாதேஷ்
- இந்தியா – தாய்லாந்து
- இலங்கை – சீனா
- இலங்கை – பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: இந்தியா – பங்களாதேஷ்
Explanation:
இந்தியா – பங்களாதேஷ் நாடுகளுக்கு இடேயே, மேகாலயாவிலுள்ள உம்ரோய் எனுமிடத்தில் வரும் பிப்ரவரி 3 முதல் 16 வரை சம்பிரிதி IX என்ற கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற உள்ளது.
5. இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) 125-வது ஆண்டு விழா சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
- டெல்லி
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
Confederation of Indian Industry (CII) தொடங்கப்பட்ட ஆண்டு 1895
- தலைமையகம் உள்ள இடம்: புது டெல்லி
- அதன் தலைவர்: விக்ரம் ஸ்ரீகாந்த் கிர்லோஸ்கர்
- தென்மண்டலத் தலைவர்: சஞ்சய் ஜெயவர்தனவேலு
6. சமீபத்தில் யாருக்கு ஆயுர் வேதா ரத்னா விருது-2020 வழங்கப்பட்டது?
- ராமன் குட்டி
- வாசுதேவன் நம்பூதிரி
- ரோஷ்ணி அனிருத்தன்
- பிரதாப் சவுகான்
Answer & Explanation
Answer: பிரதாப் சவுகான்
7. சுற்றுசூழல் ஆரவலர்களுக்கான நோபல் பரிசு என அழைக்கபடும் டைலர் பரிசு – 2020 – ஐ பெற்ற இந்தியர்?
- பவன் சுக்தேவ்
- முகிலன்
- பிரமிளா கிருஷ்ணன்
- ராஜீவ் மேனன்
Answer & Explanation
Answer: பவன் சுக்தேவ்
Explanation:
2020 ஆம் ஆண்டுக்கான Tyler Prize இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் பவன் சுக்தேவ் மற்றும் மெரிக்க சுற்றுசூழல் பேராசிரியர் கிரெட்சன் டெய்லி (Gretchen C. Daily) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பவன் சுக்தேவ், ஐ.நா. சுற்றுசூழல் திட்டத்தின் (United Nations Environment Programme (UNEP) ) நல்லெண்ண தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. 2019ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த தடகள விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது?
- ஸ்டானிஸ்லாவ் ஹொருனா
- ராணி ராம்பால்
- ரியா ஸ்டின்
- மரியா செர்னோவா
Answer & Explanation
Answer: ராணி ராம்பால்
Explanation:
2019ஆம் ஆண்டுக்கான World Games Athlete of the Year இந்திய மகளிா் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த விருதை பெறும் முதல் ஹாக்கி வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. உலக தொழுநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 29 ஜனவரி
- 30 ஜனவரி
- 31 ஜனவரி
- 01 பிப்ரவரி
Answer & Explanation
Answer: ஜனவரி 30
Explanation:
உலக சுகாதார நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதியை உலக தொழுநோய் தினமாக அனுசரித்து வருகிறது.
ஹேன்சென் நோய் என அழைக்கப்படும் தொழுநோய், மைக்கோபேக்டீரியம் லெப்ரேயாவால் ஏற்படும் ஒரு நீடித்தத் தொற்று நோயாகும்.
10. The Assassination of Mahatma Gandhi – Trial & Verdict 1948-49 என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள அமைப்பு?
- தினமணி நாளிதழ்
- இந்து நாளிதழ்
- பொதிகை தொலைக்காட்சி
- RSS
Answer & Explanation
Answer: இந்து நாளிதழ்
More TNPSC Current Affairs
Related