Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 1st and 2nd March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில், கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை சாதனை படைத்த சிறுமி ரித்விகா ஸ்ரீ பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
Answer & Explanation
Answer:ஆந்திரா
Explanation:
ஆந்திராவைச் சேர்ந்த 9 வயது சிறுமி ரித்விகா ஸ்ரீ, தான்சானியா நாட்டில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
அதாவது, கடல் மட்டத்தில் இருந்து 5,681 மீட்டர்கள் உயரதில் உள்ள கில்மன் சிகரத்தில் ஏறி உள்ளார்.
இதன்மூலம், கிளிமஞ்சாரோ மலை சிகரம் மீது ஏறிய உலகின் இரண்டாவது இளைய மற்றும் ஆசியாவின் இளைய பெண் என்ற பெருமையை பெறுள்ளார்.
2. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட் 19 தடுப்பூசி போடும் பணிகள் சமீபத்தில் எப்போது தொடங்கியது?
பிப்ரவரி 27
பிப்ரவரி 28
மார்ச் 01
மார்ச் 02
Answer & Explanation
Answer: மார்ச் 01
Explanation:
இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் மார்ச்-1 அன்று தொடங்கின.
இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பிரதமர் மோடி அவர்கள் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் (COVAXIN) தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
மேலும், துணை குடியரசு தலைவர் வெங்கையாநாயுடு மற்றும் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் ஆகியோரும் கோவேக்ஸின் தடுப்பூசியையே போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிஷீல்டு – சீரம் (ஆக்ஸ்போர்டு + அஸ்ட்ரா ஜெனேகா)
கோவாக்சின் – பாரத் பயோடெக் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் + பாரத் பயோடெக்)
முதல்கட்ட கோவிட்-19 தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 தொடங்கி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
3. ராஜ்யசபா டிவி, லோக்சபா டிவி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய தொலைக்காட்சி சேனல்?
காஸ்ப்ரோம்
இந்தியா 24X7
சன்சாத்
சபா 360
Answer & Explanation
Answer:சன்சாத் (Sansad TV)
Explanation:
நாடாளுமன்ற நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிகளை இணைத்து சன்சாத் டிவியில் என்ற புதிய சேனல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொலைக்காட்சி சேனலுக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. மார்ச்-2 அன்று, பின்வரும் எந்த நாட்டின் விமானப்படை தனது 70வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளது?
இலங்கை
பாகிஸ்தான்
இந்தோனேசியா
பங்களாதேஷ்
Answer & Explanation
Answer:இலங்கை
Explanation:
இலங்கை விமானப்படையின் 70-வது ஆண்டு விழா மார்ச் -2 அன்று கொண்டப்பட உள்ளது. இதில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையை சேர்ந்த 23 விமானங்கள் பங்கேற்க உள்ளன.
5. பின்வரும் எந்த நாட்டுடன் இணைந்து (Partner) இந்தியா கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2021– ஐ நடத்துகிறது?
கிரீஸ்
இந்தோனேசியா
பங்களாதேஷ்
டென்மார்க்
Answer & Explanation
Answer:டென்மார்க்
Explanation:
Maritime India Summit 2021
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில், 2வது கடல்சார் இந்தியா உச்சி மாநாடு’ மார்ச் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது.
துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
6. இரண்டாவது குளோபல் பயோ இந்தியா 2021 -நிகழ்ச்சியின் கருப்பொருள் என்ன?
Biosciences to Bioeconomy
Transforming Lives
Connecting People to Nature
Powering with Plant Bio-Gas
Answer & Explanation
Answer:Transforming Lives
Explanation:
Global Bio-India 2021
மார்ச் 1 முதல் 3 வரை 2வது “குளோபல் பயோ இந்தியா 2021” நிகழ்ச்சி இணையவழியில் நடைபெறுகிறது. இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
Tag Line: Biosciences to Bioeconomy
Theme: Transforming Lives
இதன் முதல் பதிப்பு 2019 ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
7. சமீபத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – வின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டவர் ?
பல்லவ் மகாபத்ரா
மடம் வெங்கட ராவ்
டி.என்.மனோகரன்
லிங்கம் வெங்கட் பிரபாகர்
Answer & Explanation
Answer:மடம் வெங்கட ராவ்
Explanation:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – வின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த பல்லவ் மகாபத்ரா ஓய்வு பெற்றதை தொடந்து புதிய தலைவராக மடம் வெங்கட ராவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, முழுவதும் இந்தியர்களால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் வணிக வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
8. ஆஸ்திரேலியா நாட்டுக்கான இந்திய தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
மன்பிரீத் வோரா
மாரிஸ் பெய்ன்
மோனிகா கபில் மோஹ்தா
மகேந்திர சிங் கன்யால்
Answer & Explanation
Answer:மன்பிரீத் வோரா
Explanation:
ஆஸ்திரேலிய நாட்டுக்கான இந்தியத் தூதராக மூத்த ஐஎஃப்எஸ் அதிகாரி மன்பிரீத் சிங் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மெக்ஸிகோ நாட்டுக்கான தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் கன்யால் – சிரியா
9. சமீபத்தில் உக்ரைனில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியின் பெண்கள் பிரிவில் தங்க பதக்கம் வென்றவர்?
சாக்ஷி மாலிக்
வினேஷ் போகத்
யூலியா கால்வாட்ஜை
கலாட்ஜின்ஸ்கா
Answer & Explanation
Answer: வினேஷ் போகத்
Explanation:
Outstanding Ukrainian Wrestlers and Coaches Memorial Tournament
உக்ரைனில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த வினேஷ் போகத், 53 கிலோ எடைப்பிரிவில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கலாட்ஜின்ஸ்காவை (Kaladzinskay) தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
10. பூஜ்ஜிய பாகுபாடு நாள் / பாகுபாடுகள் ஒழிப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
பிப்ரவரி 28
பிப்ரவரி 29
மார்ச் 01
மார்ச் 02
Answer & Explanation
Answer: மார்ச் 01
Explanation:
அனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 1ஆம் தேதி பூஜ்ஜிய பாகுபாடு நாள் (Zero Discrimination Day) அனுசரிக்கப்படுகிறது.
Theme: Zero Discrimination against Women and Girls
ஒரு வரி செய்திகள்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஆயுஷ் குமார் என்ற சிறுவன், பிலகா ராமாயணா என்ற சிறுவர்களுக்கான ராமாயணத்தை எழுதியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007 முதல் 2012 வரை பதவி வகித்து வந்த நீகோலா சர்கோஸீக்கு சமீபத்தில் ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கீட்டோபுரோபின் (Ketoprofen) என்ற கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பங்களாதேஷ் நாடு தடை விதித்துள்ளது.
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றயர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரின் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.