Current Affairs in Tamil 1st March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st March 2020.
Take the quiz and improve your Current Affairs Knowledge. If it is useful for your preparation share it with your friends. All the Best!!!

1. ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது?
- பிப்ரவரி 28
- பிப்ரவரி 29
- மார்ச் 01
- மார்ச் 02
Answer & Explanation
Answer: மார்ச் 01
Explanation:
ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில், புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மார்ச்-1 அன்று அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசின் 60% நிதி மற்றும் மாநில அரசின் 40% நிதியில் இந்த கல்லூரிகள் தலா ரூ.325 கோடியில் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், உதகை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Model Papers – Download
2. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதல் இடம் வகிக்கும் இந்திய நகரம்?
- டெல்லி
- மும்பை
- பெங்களூர்
- சென்னை
Answer & Explanation
Answer: பெங்களூர்
Explanation:
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மாநகரங்களை பொறுத்தவரை பெங்களூரு முதலிடத்திலும், 2-ம் இடத்தில் சென்னையும், 3-ம்இடத்தில் மும்பையும், 6-ம் இடத்தில் டெல்லியும், 8-ம் இடத்தில் கோயம்புத்துரும் உள்ளன.
மாநிலங்கள் பட்டியலில் முதலில் மகாராஷ்டிராவும், 2-ம் இடத்தில் கர்நாடகாவும், 3-ம் இடத்தில் தமிழகமும் இருப்பதாக, வேர்ல்டு லைன் பணப் பரிவர்த்தனை நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது
3. சமீபத்தில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- நரேந்திர மோடி
- சர்பானந்தா சோனோவால்
- அஜித் டோவல்
- நிருபேந்திர மிஸ்ரா
Answer & Explanation
Answer: சர்பானந்தா சோனோவால்
Explanation:
2020ஆம் ஆண்டுக்கான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி விருது, அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவாலுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதானது இந்தியா அறக்கட்டளையால் (India Foundation) சிறந்த அரசியல்வாதிக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தா துறைமுகத்தின் பெயர் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் எனவும்,
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனானி நஷ்ரி சுரங்கப் பாதைக்கு சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் மிளகாய் திருவிழா நடைப்பெறும் மாநிலம்?
- ஆந்திரப்ரதேஷ்
- தெலுங்கானா
- மத்தியப்பிரதேசம்
- உத்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer: மத்தியப்பிரதேசம்
Explanation:
மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் காஸ்ராவாட்டில் (Kasrawad) 2020ஆம் ஆண்டுக்கான மிளகாய் திருவிழா (Chilli Festival) நடைபெறுகிறது.
5. உலக உற்பத்தித்திறன் கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
- பெங்களூர்
Answer & Explanation
Answer: பெங்களூர்
Explanation:
உலக உற்பத்தித்திறன் அறிவியல் கூட்டமைப்பினால் 19வது உலக உற்பத்தித்திறன் கூட்டம் (World Productivity Congress) மே 6 முதல் மே 8 வரை பெங்களூரில் நடத்தப்பட உள்ளது.
45 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் கருப்பொருள்: Industry 4.0 – Innovation and Productivity
6. சமீபத்தில் அமெரிக்கா, தலிபான் இடையே எங்கு வைத்து அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது?
- காபூல்
- பாக்தாத்
- தெஹ்ரான்
- தோஹா
Answer & Explanation
Answer: தோஹா
Explanation:
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் வண்ணம் அமெரிக்கா, தலிபான் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் பிப்ரவரி 29 அன்று அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது.
இதன்படி அமெரிக்கப் படைகள் அடுத்த 14 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளன.
7. ஏடிபி மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர்?
- ரோஜர் பெடரர்
- ரபேல் நடால்
- ஸ்டான் வாவ்ரிங்கா
- டெய்லர் ஃபிரிட்ஸ்
Answer & Explanation
Answer: ரபேல் நடால்
Explanation:
டெய்லர் ஃபிரிட்ஸை தோற்கடித்து ரபேல் நடால் ஏடிபி மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மகளிர் பிரிவில் ஹீதர் வாட்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
8. பூஜ்ஜிய பாகுபாடு நாள் / பாகுபாடுகள் ஒழிப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- பிப்ரவரி 28
- பிப்ரவரி 29
- மார்ச் 01
- மார்ச் 02
Answer & Explanation
Answer: மார்ச் 01
Explanation:
அனைத்து நாடுகளிலும் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2014ஆம் ஆண்டு முதல் மார்ச் 1ஆம் தேதி பூஜ்ஜிய பாகுபாடு நாள் (Zero Discrimination Day) அனுசரிக்கப்படுகிறது.
Theme : Zero Discrimination aganist Women & Girls
9. சமீபத்தில் காலமான ஜோகிந்தர் சிங் சைனி பின்வரும் எந்த விளையாட்டை சேர்ந்தவர்?
- கிரிக்கெட்
- கபடி
- ஹாக்கி
- தடகளம்
Answer & Explanation
Answer: தடகளம்
Explanation:
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தடகள பயிற்சியாளர் ஜோகிந்தர் சிங் சைனி சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
1978ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் எட்டு தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்ற இந்திய தடகள அணிக்கு இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருக்கு மத்திய அரசு 1997 ஆம் ஆண்டு துரோணாச்சார்யா விருது வழங்கி சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related
SUPER