Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 2nd March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் (CII) தமிழகப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
2. இந்திய பருத்திகழகம் தரமான பருத்திக்கு வழங்கியுள்ள புதிய பெயர்?
A-1
ஹீரா
கிங்
Pure-C
Answer & Explanation
Answer: ஹீரா
Explanation:
இந்திய பருத்தியைத் தர நிா்ணயம் செய்யும் வகையில் இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) முதல் முறையாக தர அடையாளம் (பிராண்ட்) வழங்கியுள்ளது.
அதன்படி, இந்திய பருத்தி கழகத்தின் தரமான பருத்தி ‘ஹீரா’ என அழைக்கப்பட உள்ளது.
சா்வதேச அளவில் கடந்த 2014 – 15-ஆம் ஆண்டு முதல் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில் சுபோஷித் மா அபியான் (Suposhit Maa Abhiyan) திட்டம் எந்த மாநிலத்தில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது?
பஞ்சாப்
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப்பிரதேசம்
Answer & Explanation
Answer: ராஜஸ்தான்
Explanation:
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழக்கும் திட்டமான சுபோஷித் மா அபியான் என்ற திட்டமானது ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா (Kota) பகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களால் மார்ச் 1 அன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ஒருபகுதியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. ஈகம் திருவிழா(EKAM Fest) எங்கு நடைபெறுகிறது?
புது டெல்லி
சென்னை
கொச்சின்
கொல்கத்தா
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
மாற்றுத் திறன் கொண்ட நுண்கலை நிபுணர்கள் மற்றும் தொழில் முனைவோரின் கைவினைப் பொருட்கள் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான ஒரு வார கண்காட்சி ஈகம் திருவிழா(EKAM Fest) என்ற பெயரில் புது டெல்லியில் ஒருவாரம் நடைபெறுகிறது.
5. 2020-ஆம் ஆண்டுக்கான சுவாமி விவேகானந்த கர்மயோகி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
ஜாதவ் பயேங்
பி.எஸ் ராஜூவ் மேனன்
நிருபேந்திர மிஸ்ரா
ஜெகதீஷ் மோடி
Answer & Explanation
Answer: ஜாதவ் பயேங்
Explanation:
6-வது Vivekananda Karmayogi Award, அஸ்ஸாமை சேர்ந்த இந்திய வன நாயகன் & சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மஸ்ரீ ஜாதவ் பயேங் (Jadav Payeng) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முலாய் என்ற பெயரில் பிரம்மபுத்திரா நதி அருகே ஒரு வனத்தையே உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் ஸ்பிரிங் ஷீல்டு ஆபரேஷன் என்ற தாக்குதலை மேற்கொண்ட நாடு?
துருக்கி
சிரியா
ஈராக்
ஜார்ஜியா
Answer & Explanation
Answer: துருக்கி
Explanation:
சிரியாவுக்கு எதிராக துருக்கி “ஸ்பிரிங் ஷீல்டு” என்ற பெயரில் ராணுவ தாக்குதலை சமீபத்தில் நடத்தியது.
7. சமீபத்தில் எந்தநாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது?
மலேசியா
ஈரான்
இலங்கை
மியான்மர்
Answer & Explanation
Answer: இலங்கை
Explanation:
இலங்கை நாடாளுமன்றத்தை ஆறு மாதத்துக்கு முன்னரே அந்நாடு அதிபர் கோத்தபய ராஜபக்சே 2-3-202 அன்று கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஏப்ரல் 25-ம் தேதி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது.
8. உலக தற்காப்பு தினம் (World Civil Defence Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?