Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 3rd and 4th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. ‘சக்ஷம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக செயல் படுத்தியதற்கான அகில இந்திய செயல் திறன் விருதை பெற்றுள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
தெலுங்கானா
Answer & Explanation
Answer: தமிழ்நாடு
Explanation:
‘SAKSHAM’ Campaign
‘சக்ஷம்’ என்றபெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்து ஒரு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை அதிகஅளவில் நடத்தியதற்காக, தமிழக அரசுக்கு அகில இந்திய அளவிலான சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை எண்ணெய் நிறுவனங்கள் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
2. டெஸர்ட் ஃப்ளாக் (Desert Flag-VI) என்ற விமான போர்ப்பயிற்சி பின்வரும் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
பஹ்ரைன்
தென்கொரியா
ஃபிரான்ஸ்
ஐக்கிய அரபு அமீரகம்
Answer & Explanation
Answer: ஐக்கிய அரபு அமீரகம்
Explanation:
Desert Flag என்ற பெயரில் ஐக்கிய அரபு அமீரகம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் விமான போர்ப்பயிற்சியில் முதன் முறையாக இந்திய விமானப் படை கலந்துகொள்கிறது.
ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஃபிரான்ஸ், பஹ்ரைன், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 10 நாடுகள் இந்த பயிற்சில் பங்கேற்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தில் (Al Dhafra Air Base) மார்ச் 3 தொடங்கி மார்ச் 27 நடைபெற உள்ளது.
3. சிமிலிபால் தேசிய பூங்கா பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஒடிசா
குஜராத்
பீகார்
உத்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer: ஒடிசா
Explanation:
Similipal National Park
ஒடிசாவில் உள்ள புலிகள் சரணாலயமான சிமிலிபால் தேசிய பூங்கா காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உள்ள மேலும் சில
பிதர்கனிகா தேசியப் பூங்கா
நந்தன்கன்னன் விலங்கியல் பூங்கா
இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா 1936ல் ஹெய்லி தேசியப் பூங்கா (ஜிம் கார்பெட்) என்ற பெயரில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. சுகம்யா பாரத் அபியான் திட்டம் (Sugamya Bharat Abhiyan) தொடங்கப்பட்ட ஆண்டு?
2015
2017
2019
2021
Answer & Explanation
Answer: 2015
Explanation:
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் குறித்து ஐ.நா. சபை மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதன் அடிப்படையில், மத்திய அரசு 3 டிசம்பர் 2015-ம் ஆண்டு சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்படி அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுப்பதே அடிப்படையாக கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது, இத்திட்டத்தின் ஒருபகுதியாக சுகம்யா பாரத் ஆப் (Sugamya Bharat App) என்ற மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.
5. இலங்கையின் கொழும்புவில் பின்வரும் எந்த நாடுகளின் பங்களிப்பில் புதிய சரக்கு பெட்டக முனையகம் அமைக்கப்பட உள்ளது?
இந்தியா & சீனா
சீனா & பாகிஸ்தான்
இந்தியா & ஜப்பான்
ஜப்பான் & தென் கொரியா
Answer & Explanation
Answer:இந்தியா & ஜப்பான்
Explanation:
WCT of Colombo Port with India & Japan
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை (West Container Terminal), இந்தியாவின் அதானி நிறுவனம், ஜப்பான் முதலீட்டாளர், ஜோன் கீல்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை (Sri Lanka Port Authority) ஆகியன இணைந்து இலங்கை அமைச்சரவை மார்ச்-1 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
6. சமீபத்தில் ஆர்டிகா-எம் (Arktika-M) என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு?
அமெரிக்கா
கனடா
ரஷ்யா
இங்கிலாந்து
Answer & Explanation
Answer:ரஷ்யா
Explanation:
ஆர்ட்டிக் பகுதியில் நிலவும் பருவநிலை மாற்றத்தைக் கண்காணிப்பதற்காக, ரஷ்யா ஆர்டிகா-எம் (Arktika-M) என்ற செயற்கைக்கோளை பிப்ரவரி 28 அன்று செலுத்தியுள்ளது.
இதனை ரஷ்ய விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ், Soyuz-2.1b என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
7. சமீபத்தில் பின்வரும் எந்த இந்தியருக்கு, சிறந்த சமையல் கலைஞர்களுக்கான மிச்செலின் ஸ்டார் விருது வழங்கப்பட்டது?
மஜு வர்க்கீஸ்
நீரா டாண்டன்
கரிமா அரோரா
புனித் தேவராஜ்
Answer & Explanation
Answer:கரிமா அரோரா
8. சமீபத்தில் இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அகமது அல் பன்னா
முகமது அல் காஜா
இப்ராஹிமி அல்சாபி
யூசெப் அல் ஒடாய்பா
Answer & Explanation
Answer: முகமது அல் காஜா
Explanation:
இஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதராக முகமது அல் காஜா மார்ச் 1 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே முழுமையான ராஜீய உறவுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
9. தேசிய தொழிலாளர் பாதுகாப்பு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 4
மார்ச் 5
மார்ச் 7
மார்ச் 15
Answer & Explanation
Answer:மார்ச் 4
Explanation:
பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பணிபுரியும் சூழல் ஆகியவற்றை கவனத்தோடு செயல்படுவதை குறிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4-ஆம் நாள் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
Theme: Sadak Suraksha (Road Safety)
மார்ச் 15 – உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
ஒரு வரி செய்திகள்
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புதிய இனங்களைச் சாா்ந்த 5 புதா் தவளைகளை, தில்லி பல்கலைக்கழகம், கேரள வன ஆராய்ச்சி மையம், அமெரிக்காவின் மின்னசோடா பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
கடற்படை கிழக்கு மண்டல புதிய தலைமை அதிகாரியாக வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் மார்ச் 1 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு முந்தய அதிகாரி வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயினி.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டார் ஷிப்’ ராக்கெட் சோதனையை நிறைவு செய்த சில நொடிகளில் வெடித்து சிதறியது.
it was useful