Current Affairs in Tamil 3rd March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

TNPSC Group 1 Model Papers – Download
1. சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் உ.வே.சா உலக தமிழ் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- ப.முத்துக்குமாரசுவாமி
- லியாகத் அலிகான்
- தி.மு.அப்துல்காதா்
- வெ.மகாதேவன்
Answer & Explanation
Answer: தி.மு.அப்துல்காதா்
Explanation:
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் உ.வே.சா உலக தமிழ் விருதுக்கு வாணியம்பாடியை சேர்ந்த பேராசிரியா் தி.மு.அப்துல்காதா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
‘சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு’ எனும் தலைப்பில் நடைபெற்ற ஆய்வுரைப் போட்டியில் வென்றதன்மூலம் இவ்விருது வழங்கப்படுகிறது.
மேலும்.,
தமிழக அரசின் உ.வே.சா விருது வெ.மகாதேவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2. சமீபத்தில் தேசிய கிருஷி விஜியன் கேந்திரா மாநாடு-2020 எங்கு நடைபெற்றது?
- புதுதில்லி
- மும்பை
- சென்னை
- கொல்கத்தா
Answer & Explanation
Answer: புதுதில்லி
3. 108 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
- பெங்களூர்
- புனே
- கொச்சின்
- நாசிக்
Answer & Explanation
Answer: புனே
Explanation:
108 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு 2021 ல் புனேவில் நடைபெறவுள்ளது. இதன் கருப்பொருள் “Science and Technology for Sustainable Development with Women Empowerment“
107வது மாநாடு Science and Technology: Rural Development என்ற கருப்பொருளுடன் கடந்த ஜனவரி 3 லிருந்து 7வரை பெங்களூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்.,
- 106வது – ஜலந்தர் (பஞ்சாப்)
- 105வது – இம்பால் (மணிப்பூர்)
4. சமீபத்தில் ஈராக் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவர்?
- பர்ஹாம் சாலி
- அடில் அப்துல் மஹ்தி
- முகமது தவுபிக் அலாவி
- அமீர்-அப்பாஸ் ஹோவெய்டா
Answer & Explanation
Answer: முகமது தவுபிக் அலாவி
Explanation:
ஈராக் பிரதமராக பதவியேற்ற முகமது தவுபிக் அலாவி ஒரு மாதத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈராக் அதிபர்- பர்ஹாம் சாலி
5. சமீபத்தில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பூமியை ஒத்த கிரகம்?
- டாய் 700டி
- கேஐசி-7340288
- ஹெச்.டி.21749பி
- பி.எல்.ஜி-1190 எல்.பி
Answer & Explanation
Answer: கேஐசி-7340288
Explanation:
பால்வெளி அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசாவினால் கடந்த 2009-ஆம் ஆண்டு கெப்ளா் விண்கல நுண்ணோக்கி செலுத்தப்பட்டது.
பல்வேறு விவரங்களை சேகரித்து பூமிக்கு அனுப்பிய கெப்ளா் விண்கலம், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றது.
கெப்ளா் விண்கலம் பதிவு செய்திருந்த தகவல்களை சமீபத்தில் ஆய்வு செய்த பொது 17 புதிய கோள்கள் பற்றி தெரியவந்தது அதில் ஒன்று பூமியை ஒத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு KIC-7340288 என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்.,
கடந்த ஜனவரி மாதம் நாசாவின் டெஸ்(TESS) செயற்கைகோள் பூமியை ஒத்த டாய் 700டி (TOI 700d) என்று பெயரிடப்பட்ட கிரகத்தை கண்டுபித்தது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் மலேசியாவின் முதல் பெண் மேஜர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அருணகிரி
- சூரியகலா
- சுஸானி கிடி
- மாதுரி கனித்கர்
Answer & Explanation
Answer: சூரியகலா
Explanation:
தமிழரான சூரியகலா சூரியபகவான் அவர்கள் மலேசிய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் பெண் மேஜர் ஜெனரல் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மலேசிய ராணுவத்தில் மலாய் அல்லாத ஒருக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்.,
மலேசிய மன்னர்: சுல்தான் அப்துல்லா
மலேசிய பிரதமர்: முஹையதீன் யாசின்
7. சமீபத்தில் நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பெக்கா லண்ட்மார்க்
- ராஜீவ் சூரி
- ரென் ஜெங்ஃபை
- ஜோசப் கால்வின்
Answer & Explanation
Answer: பெக்கா லண்ட்மார்க்
Explanation:
தற்போதைய நோக்கியாவின் தலைமை நிர்வாகி திரு. ராஜீவ் சூரி வரும் ஆகஸ்ட் 31 க்கு பிறகு நோக்கியா குழுமத்திற்கு ஆலோசராக செல்ல இருப்பதால்,
செப்டம்பர்-2020 முதல் நோக்கியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பெக்கா லண்ட்மார்க் செயல்படவுள்ளார்.
8. கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பல்கலைக்கழகம்?
- கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
- சென்னை பல்கலைக்கழகம்
- சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம்
- பஞ்சாப் பல்கலைக்கழகம்
Answer & Explanation
Answer: பஞ்சாப் பல்கலைக்கழகம்
Explanation:
ஒடிஸா தலைநகரம் புவனேசுவரத்தில் நடைபெற்ற முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பஞ்சாப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
மேலும் இரண்டாவது இடத்தை சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் பெற்றது.
9. உலக வன உயிரின தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 01-மார்ச்
- 02-மார்ச்
- 03-மார்ச்
- 04-மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் – 3
Explanation:
Theme – Sustaining all life on Earth
மேலும் இதே நாள் உலக செவித்திறன் தினமும் அனுசரிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related