Current Affairs in Tamil 4th March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 4th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் இடம்?
- தமிழ்நாடு
- மகாராஷ்டிரா
- தெலுங்கானா
- குஜராத்
Answer & Explanation
Answer: மகாராஷ்டிரா
Explanation:
உடல் உறுப்பு தானத்தில் மகாராஷ்டிரா மாநிலம் தமிழகம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை முந்திக்கொண்டு சிறந்த மாநிலமாக விருது பெற்றுள்ளது
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் எந்த மாநிலம் கால்நடைகளை பராமரிக்க மாதம் ரூபாய் 900 வழங்க உள்ளது?
- உத்திரப்பிரதேசம்
- மத்தியப்பிரதேசம்
- குஜராத்
- பஞ்சாப்
Answer & Explanation
Answer: உத்திரப்பிரதேசம்
3. 35வது AAHAR உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
- மும்பை
- கொச்சின்
- புனே
- புது டெல்லி
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
35வது AAHAR உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சி (The International Food & Hospitality Fair) மார்ச் 3 முதல் மார்ச் 7வரை புதுடெல்லியில் நடைபெறுகிறது.
4. சமீபத்தில் மத்திய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- ராஜிவ் குமார்
- அஜய் நாராயண்
- ஹஸ்முக் ஆதியா
- அஜய் பூஷண் பாண்டே
Answer & Explanation
Answer: அஜய் பூஷண் பாண்டே
Explanation:
நிதித்துறை செயலராக இருந்த ராஜீவ் குமாா் கடந்த மாதம் ஓய்வு பெற்றதையடுத்து, மத்திய வருவாய் துறை செயலராக உள்ள அஜய் பூஷண் பாண்டே, மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. வீடுதேடி வந்து டீசல் வழங்கும் வகையில் மத்திய தொழிலாளர்நலத்துறை அமைச்சர் தொடங்கிவைத்துள்ள மொபைல் அப்ளிகேஷன் பெயர் என்ன?
- யோனோ
- ஹம்ஸஃபர்
- பியூஎல் 24
- பியூஎல் 24×7
Answer & Explanation
Answer: ஹம்ஸஃபர்
Explanation:
வீடுதேடி வந்து டீசல் வழங்கும் வகையில் மத்திய தொழிலாளர்நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் ஹம்ஸஃபர்(Humsafar) என்ற மொபைல் அப்ளிகேஷனை சமீபத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
6. இந்திய பேஸ்புக் தகவல் தொடர்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- சூரியகலா
- அஜித் மோகன்
- ஷஃபாலி வர்மா
- பிபாஷா சக்ரபர்த்தி
Answer & Explanation
Answer: பிபாஷா சக்ரபர்த்தி
Explanation:
சிஸ்கோ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி பிபாஷா சக்ரபர்த்தியை புதிய தகவல் தொடர்புத்துறை தலைவராக பிபாஷா சக்ரபர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
7. உலகில் முதன்முறையாக பொது போக்குவரத்து இலவசம் என அறிவித்துள்ள நாடு எது?
- லக்சம்பர்க்
- லிச்சென்ஸ்டீன்
- மால்டா
- மொனாக்கோ
Answer & Explanation
Answer: லக்சம்பர்க்
Explanation:
சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொது போக்குவரத்து அனைத்தையும் இலவசமாக வழங்க உள்ளது லக்சம்பர்க்.
8. தேசிய பாதுகாப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 01 மார்ச்
- 02 மார்ச்
- 03 மார்ச்
- 04 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 04
Explanation:
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Enhance Health & Safety Performance by Use of Advanced Technology
More TNPSC Current Affairs
Related
உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கும் இடம் தமிழ்நாடு தானே ஐயா விளக்கம் தாருங்கள் ஐயா
சமீபத்திய அறிக்கையின் படி முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. Read this: https://tamil.indianexpress.com/india/maharashtra-overtakes-tamil-nadu-in-organ-donation-transplants-173555/