Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 5th and 6th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. மகளிர் தினத்தில் பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
தெலுங்கானா
Answer & Explanation
Answer:ஆந்திரா
Explanation:
மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆந்திர அரசு பெண் காவலர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
மேலும், பெண்கள் பாதுகாப்பிற்காக ஆந்திர அரசு செயல்படுத்தி வரும் திஷா (Disha) செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும் பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுகந்திர தின கொண்டாட்டத்தை திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?
நரேந்திர மோடி
பிரதீபா பாட்டீல்
எஸ்.ஏ.போப்டே
அமா்த்தியா சென்
Answer & Explanation
Answer:நரேந்திர மோடி
Explanation:
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை திட்டமிடுவதற்காக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 259 உறுப்பினா்களுடன் தேசிய அளவில் ஓா் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும்., 75-வது சுகந்திர தினத்தை வரும் மாா்ச் 12-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை 75 வாரங்களுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் கொண்டாடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3. சமீபத்திய செய்திகளில் இடம்பெற்ற அபோபீஸ் (Apophis) என்பது ஒரு _ _ _ _ _ _ _ _ ?
தாதுப்பொருள்
குறுங்கோள்
வால்நட்சத்திரம்
செயற்கைக்கோள்
Answer & Explanation
Answer: குறுங்கோள்
Explanation:
மார்ச் 5 அன்று அபோபீஸ் என்ற குறுங்கோள் பூமியை கடந்து சென்றுள்ளது.
கடந்த ஜூன் 19, 2004ம் ஆண்டு அரிசோனாவில் உள்ள கிட் பீக் (Kitt Peak) தேசிய ஆய்வகத்தாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் குறுங்கோள், அடிக்கடி சூரியனைச் சுற்றி வருவதும் பூமிக்கு அருகே வந்து செல்வதுமாக உள்ளது.
அபோபீஸ் குறுங்கோள் ஏப்ரல் 13, 2029ம் ஆண்டு பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரும் என்றும் 2068ம் ஆண்டில் பூமி மீது மோதுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
4. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழகப் பிரிவு தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளவர்?
விஜய் கணேஷ்
எஸ்.சந்திரகுமாா்
சத்யகம் ஆா்யா
உதய் கோடக்
Answer & Explanation
Answer: எஸ்.சந்திரகுமாா்
Explanation:
Confederation of Indian Industry
2021-22ம் ஆண்டுக்கான இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழகப் பிரிவு தலைவராக டாக்டா் எஸ்.சந்திரகுமாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மேலும் துணைத்தலைவராக சத்யகம் ஆா்யா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
1895ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட CII – இன் தற்போதைய தலைவர் உதய் கோடக் (Uday Kotak) என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஐ.நா சபை பின்வரும் எந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது?
2021
2022
2023
2024
Answer & Explanation
Answer:2023
Explanation:
International Year Of Millets 2023
‘சர்வதேச தினை 2023’ என்ற தலைப்பில் இந்தியா உட்பட 70 நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளும் ஏற்றுக்கொண்டதை தொடந்து,
ஐக்கிய நாடுகள் சபை 2023-ம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டாக கொண்டாடப்பட்டது.
இந்தியா 2018ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு – 2021
2019 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 10 உலக பருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
6. பின்வரும் எந்த நகரில் இந்திய ராணுவ கமாண்டர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது?
புதுடெல்லி
டெஹ்ராடூன்
ஜோத்பூர்
கெவாடியா
Answer & Explanation
Answer:கெவாடியா
Explanation:
Combined Commanders’ conference 2021
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் (ஒற்றுமையின் சிலை) ராணுவக் கமாண்டர்கள் மாநாடு மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ராணுவ வீரர்களும், இளநிலை அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். ராணுவக் கமாண்டர்கள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.
7. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ சுலபமான நகரங்கள் பட்டியல் 2020 இல் முதலிடம் வகிக்கும் நகரம்?
பெங்களூரு
பூனே
ஆமதாபாத்
சென்னை
Answer & Explanation
Answer: பெங்களூரு
Explanation:
Ease of Living Index 2020
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ சுலபமான நகரங்கள் பட்டியல் 2020 இல்
பெரிய நகரங்கள் வரிசையில்., (10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் )
பெங்களூரு, பூனே, ஆமதாபாத், சென்னை மற்றும் சூரத், நவி மும்பை, கோவை, வதோதரா. இந்தூர் மற்றும் மும்பை ஆகியன முதல் பத்து இடங்களையும், (கடேசி – ஸ்ரீநகர் )
சிறிய நகரங்கள் வரிசையில்., (10 இலட்சத்திற்கு குறைவான மக்கள் )
சிம்லா, புவனேஸ்வர், சில்வாசா, காக்கி நாடா, சேலம், வேலூர்,காந்திநகர், குருகிராம், தேவங்ரே மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியன முதல் பத்து இடங்களையும் பிடித்துள்ளன. (கடேசி முசாபர்பூர்)
8. நகராட்சி செயல்திறன் பட்டியல் 2020 முதலிடம் வகிக்கும் நகராட்சி (10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் )?
இந்தூர்
சூரத்
போபால்
பிப்ரி சிஞ்ச்வாட்
Answer & Explanation
Answer:இந்தூர்
Explanation:
Municipal Performance Index (MPI) 2020
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள நகராட்சி செயல்திறன் பட்டியல் 2020 இல்
பெரிய நகராட்சிகள் வரிசையில்., (10 இலட்சத்திற்கு அதிகமான மக்கள்)
இந்தூர், சூரத், போபால், பிப்ரி சிஞ்ச்வாட், பூனே, அகமதாபாத், ராய்ப்பூர், கிரேட்டர் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகியன முதல் பத்து இடங்களையும், (கடேசி – குவஹாத்தி)
சிறிய நகராட்சிகள் வரிசையில்., (10 இலட்சத்திற்கு குறைவான மக்கள்)
புது தில்லி, திருப்பதி, காந்திநகர், கர்னால், சேலம், திருப்பூர், பிலாஸ்பூர், உதய்பூர், ஜான்சி, மற்றும் திருநெல்வேலி ஆகியன முதல் பத்து இடங்களையும் பெறுள்ளன. (கடேசி – ஷில்லாங்)
9. “நீரஜ் சோப்ரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
கிரிக்கெட்
நீளம் தாண்டுதல்
ஈட்டி எறிதல்
கூடை பந்து
Answer & Explanation
Answer:ஈட்டி எறிதல்
Explanation:
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் நடைபெற்று வரும் 3-ஆவது இந்திய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 88.07 மீ. தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளாா்.
தனது முந்தைய சாதனையான 88.06 மீ. தூரத்தை தானை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. ஜன் அவுசாதி திவாஸ் (மரபுசார் மருத்துவ தினம்) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மார்ச் 5
மார்ச் 6
மார்ச் 7
மார்ச் 8
Answer & Explanation
Answer: மார்ச் 7
Explanation:
பிரதான் மந்திரி பாரதிய ஜன் அவுசாதி பரியோஜனா (PMBJY – Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana) திட்டம் பற்றி மக்களிடே விழிப்புணர்வை ஏற்படுத்த 2019ஆம் ஆண்டுமுதல் மார்ச் 7 ஆம் தேதி ஜன் அவுசாதி திவாஸ் – ஆக அனுசரிக்கப்படுகிறது.
7500 வது மருந்தகம் – ஷில்லாங்
Theme: Seva bhi – Rozgar bhi
PMBJY திட்டமானது 2015 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று தொடங்கப்பட்டது.
ஒரு வரி செய்திகள்
தமிழ்நாடு உருது அகாடமி துணை தலைவராக முஹம்மத் நயீமுர் ரஹ்மான் நியமிக்கப் பட்டுள்ளார் (தலைவர் – உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்)
சீன அரசு, ராணுவத்துக்கு ரூ.15.22 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 6.8% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.