TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th March 2020

Current Affairs in Tamil 5th March 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 5th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 5th March 2020

1. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் 100 அடி உயர உலக அமைதி புத்த கோபுரம் திறக்கப்பட்டுள்ளது?

  1. வீரிருப்பு
  2. காசியாபட்டி
  3. நல்லூர்
  4. குறிச்சங்குளம்
Answer & Explanation
Answer: வீரிருப்பு

Explanation:

தென்னிந்தியாவில் முதலாவதாக தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் 100 அடி உயர உலக அமைதி புத்த கோபுரம் மார்ச் 4 அன்று திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 18 அன்று, 110 விதியின் கீழ் தென்காசி தனிமாவட்டமாக உருவாக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டு,

நவம்பர் 22 அன்று தமிழகத்தின் 33வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 1 Model Papers – Download

2. ICONSAT என்ற சர்வதேச தொழில்நுட்ப மாநாடு எங்கு நடைபெறுகிறது?

  1. டெல்லி
  2. மும்பை
  3. கொல்கத்தா
  4. பெங்களூர்
Answer & Explanation
Answer: கொல்கத்தா

Explanation:

ICONSAT (International Conference on Nano Science and Technology) என்ற நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு கொல்கத்தாவில் மார்ச் 5 முதல் 7 வரை நடைபெறுகிறது.

3. சமீபத்தில் ராஜினாமா செய்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்?

  1. விரல் ஆச்சார்யா
  2. என்.எஸ். விஸ்வநாதன்
  3. பி.பி. ஆச்சார்யா
  4. ஹெச் ஆர் கான்
Answer & Explanation
Answer: என்.எஸ். விஸ்வநாதன்

Explanation:

மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்களில் ஒருவரான, என் எஸ் விஸ்வநாதன்  சமீபத்தில்  ராஜினாமா செய்துள்ளார்.

இவர் இன்னும் 3 மாத காலத்தில் முறையாக ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சமீபத்தில் மாணவர் சுகாதார அட்டை திட்டம் என்ற புதிய திட்டத்தை துவங்கியுள்ள இந்திய மாநிலம்?

  1. டெல்லி
  2. ஜம்மு & காஷ்மீர்
  3. புதுச்சேரி
  4. ஒரிசா
Answer & Explanation
Answer: ஜம்மு & காஷ்மீர்

Explanation:

சமீபத்தில் ஜம்மு & காஷ்மீர் அரசு பள்ளி மாணவர்களின் உடல் நலத்தை பேணும் பொருட்டு மாணவர் சுகாதார அட்டை திட்டம் (Student Health Card scheme) என்ற புதிய திட்டத்தை  ஜம்மு & காஷ்மீர் துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்மு (G. C. Murmu) துவங்கி வைத்துள்ளார்.

இத்திட்டமானது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை உறுதி செய்யும் பொருட்டு துவங்கப்பட்டுள்ளது.

மேலும்,

கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் தூதுவர் அடையாள அட்டை என்ற திட்டத்தை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.




5. சமீபத்தில் அமெரிக்க உளவுப்படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஜான் ராட்கிளிப்
  2. டான் கோட்ஸ்
  3. ரிச்சர்ட் கிரேனல்
  4. டேவிட் பிட்ராயூஸ்
Answer & Explanation
Answer: ஜான் ராட்கிளிப்

Explanation:

அமெரிக்க உளவுப்படையின் தலைவராக இருந்துவந்த டான் கோட்ஸ் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்த பதவியை ஜெர்மனிக்கான முன்னாள் தூதர் ரிச்சர்ட் கிரேனல் வகித்து வந்தார்.

தற்போது அந்த பதவிக்கு நிரந்தர தலைவராக குடியரசு கட்சி எம்.பி. ஜான் ராட்கிளிப்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

6. சமீபத்தில் ஸ்லோவேனியா-வின் புதிய பிரதமரா பதவியேற்றுள்ளவர்?

  1. Janez Janša
  2. Viktor Orban
  3. Manfred Weber
  4. Marjan Šarec
Answer & Explanation
Answer: Janez Janša

7. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?

  1. எம்.எஸ்.கே.பிரசாத்
  2. ககன் கோடா
  3. ஹர்விந்தர்சிங்
  4. சுனில் ஜோஷி
Answer & Explanation
Answer: சுனில் ஜோஷி

Explanation:

இந்திய முன்னாள் இடக்கை சுழற்பந்து வீச்சாளரான கர்நாடகாவைச் சேர்ந் சுனில் ஜோஷி இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அணிக்காக 1996-ல் இருந்து 2001-ம் ஆண்டு வரை விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. 2020ஆம் ஆண்டுக்கான அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது?

  1. இந்தியா
  2. பாகிஸ்தான்
  3. சிங்கப்பூர்
  4. மலேசியா
Answer & Explanation
Answer: மலேசியா

Explanation:

கொரோனா வைரஸ் (கோவைட்-19) காரணமாக மலேசியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற இருந்த அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் செப்டம்பர் 2020க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஷாங்காயில் நடைபெற இருந்த ஃபார்முலா ஒன் சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

9. ஷஃபாலி வர்மா பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. பேட்மிட்டன்
  2. டென்னிஸ்
  3. ஹாக்கி
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

T20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 16 வயதான இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் 18 T20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More TNPSC Current Affairs



Leave a Comment