Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 6th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவப்பட உள்ளன?
5
8
13
21
Answer & Explanation
Answer: 8
Explanation:
2020-21-ம் நிதியாண்டில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் (PMKSY) கீழ், 218 கோடி ரூபாய் செலவில்,
தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2. கலப்பு திருமணம் செய்பவர்களுக்காக காப்பகங்களை தொடங்க முடிவு செய்துள்ள மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
ஆந்திரா
கர்நாடகா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
3. சமீபத்தில் மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
பிமால் ஜுல்கா
சுதிர் பார்கவா
R.K. மாத்தூர்
விஜய் சர்மா
Answer & Explanation
Answer: பிமால் ஜுல்கா
Explanation:
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த சுதிர் பார்கவா கடந்த ஜனவரி 11ம் தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய தலைமை தகவல் ஆணையராக பிமால் ஜுல்கா (Bimal Julka) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் துவங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் 10வது தலைமை ஆணையர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (CVC) தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சமீபத்தில் துருக்கி நாட்டிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
சஞ்சய் பட்டாச்சாரியா
விகாஸ் ஸ்வரூப்
ரவி தாபர்
சஞ்சய் குமார் பாண்டா
Answer & Explanation
Answer: சஞ்சய் குமார் பாண்டா (Sanjay Kumar Panda)
5. சாப்சர் குட் (Chapchar Kut) திருவிழா பின்வரும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
பஞ்சாப்
அசாம்
மிசோரம்
மேற்குவங்காளம்
Answer & Explanation
Answer: மிசோரம்
Explanation:
மிஸோரமின் அறுவடை திருவிழா சாப்சர் குட் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் 6 அன்று கொண்டாடப்பட்டது.
6. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% இல் இருந்து எவ்வளவு சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது?
8.55 %
8.5 %
8.25 %
8 %
Answer & Explanation
Answer: 8.5 %
Explanation:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% லிருந்து 8.50% ஆக குறைத்து மத்திய அரசு மார்ச் 5 அன்று அறிவித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் கடந்த 2015- 2016 ஆம் நிதியாண்டில் 8.8 விழுக்காடாக இருந்தது. இதற்கடுத்த இரண்டு நிதியாண்டுகளும் 8.55 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் 2018 – 2019 ஆம் நிதியாண்டில் 8.65 விழுக்காடாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
7. சமீபத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY – NULM) எந்த மின் வணிக நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?
அமேசான்
பிளிப்கார்ட்
ஸ்னாப்டீல்
அலி எக்ஸ்பிரஸ்
Answer & Explanation
Answer: அமேசான்
Explanation:
DAY – NULM (Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission) திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை அமேசானில் விற்பனை செய்ய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
8. உலகளாவிய ஆயுர்வேத விழா (GAF) எங்கு நடைபெற உள்ளது?
நீலகிரி
மைசூர்
தேனி
கொச்சின்
Answer & Explanation
Answer: கொச்சின்
Explanation:
நான்காவது உலகளாவிய ஆயுர்வேத விழா (Global Ayurveda Festival) “Ayurveda Medical Tourism: Actualizing India’s credibility” என்ற கருப்பொருளுடன் வரும் மே 6 முதல் 20 வரை கேரளாவின் கொச்சியில் நடைபெற உள்ளது.
9. சமீபத்தில் Chronicles of Change Champions என்ற புத்தகத்தை வெளியிட்டவர்?
நரேந்திர மோடி
ஸ்மிருதி இரானி
நிர்மலா சீதாராமன்
நிதின் கட்கரி
Answer & Explanation
Answer: ஸ்மிருதி இரானி
Explanation:
பிரதமரின் முதன்மை திட்டங்களின் ஒன்றான பேட்டி பச்சாவ் பேட்டி பதாவோவின் (Beti Bachao Beti Padhao ) கீழ் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் எடுக்கப்பட்ட 25 புதுமையான முயற்சிகளின் தொகுப்பாக இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.