Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 7th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் காவிரி காப்பாளன் என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
நரேந்திர மோடி
பன்வாரிலால் புரோஹித்
எடப்பாடி பழனிச்சாமி
M.S ஸ்வாமிநாதன்
Answer & Explanation
Answer: எடப்பாடி பழனிச்சாமி
Explanation:
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் விவசாய சங்க பிரதி நிதிகள் சார்பில் வழங்கப்பட்டது.
2. நெல் ஜெயராமன் பெயரில் எங்கு நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது?
நீடாமங்கலம்
குடவாசல்
பருத்தியூர்
திருத்துறைப்பூண்டி
Answer & Explanation
Answer: நீடாமங்கலம்
Explanation:
மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 7 அன்று அறிவித்துள்ளார்.
மேலும்., கடந்த ஆண்டு ஜெயராமன் பெயரில் திருவாரூர் மாவட்டம் பருத்தியூரில், நெல் ஜெயராமன் இயற்கை வேளாண்மை மற்றும் பாரம்பர்ய நெல் விதை ஆராய்ச்சி நிலையம் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3.சமீபத்தில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் விமான நிலையம் என்று புதிய பெயர் சூட்டப்பட்ட விமானநிலையம்?
அகோலா விமான நிலையம்
அவுரங்காபாத் விமான நிலையம்
புனே சர்வதேச விமான நிலையம்
கோலாப்பூர் விமான நிலையம்
Answer & Explanation
Answer: அவுரங்காபாத் விமான நிலையம்
Explanation:
மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சம்பாஜி மகாராஜ் என்பவர் சத்ரபதி சிவாஜி அவர்களின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக அறிவிக்கபட்டுள்ள நகரம்?
ஜோஷிமத் (Joshimath)
ரிஷிகேஷ் (Rishikesh)
நைனிடால் (Nainital)
கைர்ஷைன் (Gairsain)
Answer & Explanation
Answer: கைர்ஷைன் (Gairsain)
Explanation:
உத்தரகாண்ட் மாநிலத்தின் கோடைகால தலைநகராக கெய்சைன்/ கைர்ஷைன் (Gairsain) என்ற நகரத்தை முதல்வர் ராவத் அறிவித்துள்ளார்.
மேலும் மற்ற நேரங்களில் டெஹ்ராடூன் (Dehradun) தலைநகரமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5. நமஸ்தே ஓர்ச்சா (Namaste Orchha) திருவிழா எங்கு நடைபெறுகிறது?
மத்தியப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்
ஒரிசா
குஜராத்
Answer & Explanation
Answer: மத்தியப்பிரதேசம்
Explanation:
மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா என்ற ஊரில் சுற்றுலாத்துறை மேம்பாட்டை நோக்கமாக கொண்ட ”நமஸ்தே ஓர்ச்சா” என்ற விழா மார்ச் 6 – 8 நாட்களில் நடைபெறுகிறது.
ஓர்ச்சா என்பது மத்திய பிரதேசத்தின் வரலாற்று புராதன சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட வங்கி?
IndusInd Bank
RBL Bank
Yes Bank
IDBI Bank
Answer & Explanation
Answer: Yes Bank
Explanation:
நிதி நெருக்கடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 5 அன்று யெஸ் வங்கியை (Yes Bank ) கையகப்படுத்தியுள்ளது.
7. வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதிகபட்சமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் எத்தனை சதவீத பங்குகளை வாங்க மத்திய அரசு வழிவகைசெய்துள்ளது?
49 %
72 %
91 %
100 %
Answer & Explanation
Answer: 100%
Explanation:
ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
8. ஜன் அவுஷாதி திவாஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
5 மார்ச்
6 மார்ச்
7 மார்ச்
8 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் – 7
Explanation:
ஜெனரிக் மருந்துகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஜன் அவுஷாதி திவாஸ் என்ற பெயரில் விழிப்புணர்வு தினம் மார்ச் 7 அனுசரிக்கப்படுகிறது.