Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 7th to 9th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. பின்வரும் எந்த மாநிலம், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என சமீபத்தில் அறிவித்துள்ளது?
தமிழ்நாடு
ஆந்திரா
பஞ்சாப்
குஜராத்
Answer & Explanation
Answer: பஞ்சாப்
Explanation:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே டெல்லி மாநில அரசு இதைப்போன்ற ஒரு திட்டத்தை 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
2. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் இரும்பு கரண்டி கண்டுபிடிக்கப்பட்டது?
கொந்தகை
ஆதிச்சநல்லூர்
சிவகளை
கொடுமணல்
Answer & Explanation
Answer:கொடுமணல்
Explanation:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ளது கொடுமணல் கிராமத்தில் நடைபெற்ற 9ஆம் கட்ட அகழ்வாய்வில் இரும்பு கரண்டி, பல வகை கல்மணிகள், அதற்கான மூல பொருள்கள்,
கண்ணாடித் துண்டுகள், சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் வடிவமைப்பதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் வடிகால் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
3. பின்வரும் எந்த நதியின் குறுக்கே மைத்ரி சேது (Maitri Setu) பாலம் கட்டப்பட்டுள்ளது?
தலேஷ்வரி
புரிகங்கா
ஃபெனி
கர்ணபுலி
Answer & Explanation
Answer: ஃபெனி
Explanation:
இந்தியா வங்காளதேசம் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள மைத்ரி சேது பாலத்தை இன்று (9-3-2021) பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்
இந்த பாலமானது, இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள சப்ரூம் (Sabroom) பகுதியில் இருந்து வங்காள தேசத்தின் ராம்கர் (Ramgarh) பகுதி வரை 1.9 KM நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ரூபாய் 133 கோடியில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த உதவி எண்?
1100
139
182
14417
Answer & Explanation
Answer: 139
Explanation:
இந்திய ரயில்வேயில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 182 என்ற எண், ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ள நிலையில்,139 என்ற புதிய ‘உதவி மைய தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க ‘14417’ என்ற இலவச செல்போன் எண்ணை அறிமுகபடுத்தியது குறிப்பிடத்தக்கது.
5. ”பொருளாதார சுதந்திர குறியீடு 2021” – இல் இந்தியா வகிக்கும் இடம்?
101
108
117
121
Answer & Explanation
Answer: 121
Explanation:
Economic Freedom Index 2021
‘Heritage Foundation’ எனும் நிறுவனம் வெளியிட்ட பொருளாதார சுதந்திர குறியீடு பட்டியலில் இந்தியா 121 வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து நாடுகள் பிடித்துள்ளன.
கடந்த ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் 120 வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
6. GISAT – 1 என்ற செயற்கைக்கோள் பின்வரும் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
GSLV F10
GSLV Mk. III
GSLV F12
PSLC C52
Answer & Explanation
Answer: GSLV F10
Explanation:
பூமி கண்காணிப்புக்கான ஜிசாட்-1 செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி-எப்10 (GSLV F10) ராக்கெட் மூலம் மார்ச் 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த செயற்கைகோள், கடந்த ஆண்டு மார்ச் 5 தேதி விண்ணில் ஏவப்பட திட்டமிடப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செயற்கைகோள் பற்றி.,
GISAT – 1 : Geo Imaging Satellite
எடை: 2268 KG
ஆயுட்காலம்: 7 ஆண்டுகள்
7. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் பிராந்தியத் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ளவர்?
சுதித்ரா கே.எல்லா
எஸ்.சந்திரகுமாா்
சத்யகம் ஆா்யா
சி.கே.ரங்கநாதன்
Answer & Explanation
Answer: சி.கே.ரங்கநாதன்
Explanation:
இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் பிராந்தியத் தலைவராக கெவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சி.கே.ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிறுவனரான சுதித்ரா கே.எல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8. 2020 ஆம் ஆண்டுக்கான பிஹாரி புரஸ்கார் விருது பின்வரும் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
சிதன்சூ யஸஸ்சந்திரா
மோகன்கிருஷ்ணா போஹாரா
மனிஷா குல்ஷிரேஷ்டா
ஓம் தன்வி
Answer & Explanation
Answer: மோகன்கிருஷ்ணா போஹாரா
Explanation:
Bihari Puraskar
2020 ஆம் ஆண்டுக்கான பிஹாரி புரஸ்கார் விருது ராஜஸ்தானை சேர்ந்த மோகன்கிருஷ்ணா போஹாரா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இவர் எழுதிய Taslima: Sangharsh aur Sahitya என்ற புத்தகத்திற்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருதானது சிறந்த ராஜஸ்தானி ழுத்தாளர்களுக்கு K. பிர்லா அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.
9. கன்ஹா தேசிய பூங்கா பின்வரும் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
ஒடிசா
அசாம்
மத்தியப்பிரதேசம்
உத்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer: மத்தியப்பிரதேசம்
Explanation:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கன்ஹா தேசிய பூங்கா (Kanha National Park), பந்தவ்கர் தேசிய பூங்கா (Bandhavgarh National Park), மற்றும் பெஞ்ச் தேசிய பூங்கா (Pench National Park) ஆகிய மூன்று தேசிய பூங்காக்களில் இரவு நேர சஃபாரி தொடங்கப்பட்டுள்ளது.
10. சமீபத்தில் இந்திய தூதரகத்தின் புதிய கலாச்சார மையம் பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
துஷன்பே
டாக்கா
சட்டோகிராம்
கராச்சி
Answer & Explanation
Answer: டாக்கா
Explanation:
இந்திரா காந்தி கலாச்சார மையத்தை தொடர்ந்து பங்களாதேஷின் டாக்கா நகரில் இரண்டாவது கலாச்சார மையம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 4 அன்று திறந்து வைத்தார்.
11. மனிஷ் கவுசிக் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர் ?
குத்துசண்டை
மல்யுத்தம்
நீளம் தாண்டுதல்
குண்டு எறிதல்
Answer & Explanation
Answer:குத்துசண்டை
Explanation:
Boxam International Tournament
ஸ்பெயினில் நடைபெற்ற பாக்சம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக், டென்மார்க்கின் நிகோலாய் தெர்ட்யானை (Nikolai Terteryan) தோற்கடித்து தங்க பதக்கத்தை வென்றார்.
மேலும் இதே போட்டியில்,
69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் வெள்ளி பதக்கத்தை வென்றார். (தங்கம் – ஸ்பெயினின் டியாட் சிசோகா)
12. உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியலில் (53 கிலோகிராம் பிரிவு) முதலிடம் வகிப்பவர்?
வினேஷ் போகாட்
டயானா மேரி
சரிதா மோர்
நந்தினி சலோகே
Answer & Explanation
Answer:வினேஷ் போகாட்
Explanation:
இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற Matteo Pellicone Ranking Series போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை தொடந்து உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியலில், 53 KG எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாட் முதலிடம் பிடித்துள்ளார்.
Matteo Pellicone Ranking Series போட்டியில் கனடாவின் டயானா மேரியை வீழ்த்திய தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவின் பஜ்ரங் புனியா 65-கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் துல்கா துமுர் ஆச்சிரை(Tulga Tumur Ochir) தோற்கடித்து தங்கம் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலகதரவரிசையில் அவர் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், அதை போட்டியில் 57 KG எடைப்பிரின் இறுதி போட்டியில் இந்தியாவின் சரிதா மோர் (Sarita Mor), பல்கேரியாவின் ஜியூலியா பெனால்பெரிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
13. “மக்கள் தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் அரசியல்” என்ற புத்தகத்தை எழுதியவர்?
சுனில் அரோரா
ஓம் பிரகாஷ் ராவத்
அச்சல் குமார் ஜோதி
எஸ். ஒய். குரேஷி
Answer & Explanation
Answer: எஸ். ஒய். குரேஷி
Explanation:
முன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் “மக்கள் தொகை கட்டுக்கதை: இஸ்லாம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் அரசியல்” என்றபுத்தகத்தை எழுதியுள்ளார்
14. 2021 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள்?
Women in leadership: Achieving an equal future in a COVID-19 world
Each for Equal
I Am And I Will
Time is Now: Rural and urban activists transforming women’s lives
Answer & Explanation
Answer:Option A
Explanation:
1975-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமகா அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள்: Women in leadership: Achieving an equal future in a COVID-19 world
மேலும், நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு வரி செய்திகள்
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) மத்திய பிரதேச மாநிலத்தின் ஒருநாள் உள்துறை அமைச்சராக பெண் காவலர் மீனாட்சி வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கதைக் கைப்பற்றினார்.
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் சமீபத்தில் காலமானார்
plz help me all metrial sent me