Current Affairs in Tamil 8th March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 8th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரைத் தேர்வுசெய்வதற்கான தேடுதல் குழுவின் தலைவரா நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பன்வாரிலால் புரோஹித்
- பி.ராமசாமி
- எம். ஜெகதீஸ் குமார்
- பி. எஸ் திருவாசகம்
Answer & Explanation
Answer: எம். ஜெகதீஸ் குமார்
TNPSC Group 1 Model Papers – Download
2. பாகீரதா திட்டம் பின்வரும் எந்த மாநிலத்துடன் தொடர்பானது?
- ஆந்திரப்ரதேஷ்
- தெலுங்கானா
- உத்தரகாண்ட்
- மத்தியப்பிரதேசம்
Answer & Explanation
Answer: தெலுங்கானா
Explanation:
ஒவ்வொரு கிராமத்துக்கும் நகரத்துக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க பாகீரதா என்ற திட்டத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் பாகீரதி என்ற நதி உத்தரகாண்ட் மாநிலத்தில் பாய்வது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில் SAREX-2020 என்ற இந்திய கடலோர காவல்படை பயிற்சி எங்கு நடைபெற்றது?
- கோவா
- திருவனந்தபுரம்
- தூத்துக்குடி
- கொல்கத்தா
Answer & Explanation
Answer: கோவா
Explanation:
கோவா மாநிலம் பனாஜியில், இந்திய கடலோர காவல்படை சார்பில், SAREX-2020 (Search and Rescue Exercise) என்ற பெயரில் தேசிய அளவில் தேடல் மற்றும் மீட்பு பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
4. சமீபத்தில் எத்தனை பேருக்கு இந்திய அரசின் நாரி சக்தி புரஸ்கர் விருது வழங்கப்பட்டது?
- 5
- 7
- 10
- 15
Answer & Explanation
Answer: 15
Explanation:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 15 பெண்களுக்கு இந்திய அரசு சார்பில் நாரி சக்தி புரஸ்கர் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்கள்:
- மான் கவுர் – 103 வயது நிரம்பிய தடகள வீராங்கனை
- மோகனா சிங், பாவனா காந்த் & அவனி சதுர்வேதி – இந்திய விமானப் படையின் முதலாவது மகளிர் போர் விமானிகள்
- படாலா பூதேவி & பினா தேவி – விவசாயிகள்
- ஆரிஃபா ஜான் – கைவினைஞர்
- சாமி முர்மு – சுற்றுச்சூழல் ஆர்வலர்
- நில்சா வாங்மோ – தொழில்அதிபர்
- ராஷ்மி உர்த்வர்திசி – தானியங்கி ஆராய்ச்சி நிபுணர்
- கலாவதி தேவி – பெண் கொத்தனார்
- இரட்டையர்கள் தாஷி மற்றும் நுங்ஷி மாலிக் – மலையேற்ற வீராங்கனைகள்
- கௌசிகி சக்ரோபர்த்தி – பாடகி
- கார்த்தாயினி அம்மா – 2018 இல் எழுத்தறிவுத் தேர்வில் முதலிடம் பிடித்த 98 வயதானர்.
5. டைம் இதழின் 1976 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- இந்திரா காந்தி
- அம்ரித் கவுர்
- அன்னை தெரசா
- சரோஜினி நாயுடு
Answer & Explanation
Answer: இந்திரா காந்தி
Explanation:
டைம் இதழின் இந்த நூற்றாண்டுக்கான 100 சிறந்த பெண்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் சுதந்திரப் போராளியான அமிர்த கவுர் இடம் பெற்றுள்ளனர்.
1947 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக அம்ரித் கவுரும், 1976 ஆம் ஆண்டிற்கான பெண்மணியாக இந்திரா காந்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
6. சமீபத்தில் போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த தேசிய மாநாடு எங்கு நடைபெற்றது?
- புது டெல்லி
- மும்பை
- கொல்கத்தா
- சென்னை
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
இந்தியப் போட்டி ஆணையமானது (Competition Commission of India – CCI) புது தில்லியில் போட்டிச் சட்டத்தின் பொருளாதாரம் குறித்த 5வது தேசிய மாநாட்டை சமீபத்தில் நடத்தியுள்ளது.
7. சமீபத்தில் இந்திய பெருங்கடல் ஆணையத்தின் 5வது பார்வையாளராக இணைந்துள்ள நாடு?
- இந்தியா
- இலங்கை
- பாகிஸ்தான்
- இந்தோனேசியா
Answer & Explanation
Answer: இந்தியா
Explanation:
மால்டா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் OIF (லா ஃபிராங்கோபோனியின் சர்வதேச அமைப்பு) ஆகியவற்றை தொடர்ந்து இந்தியா, இந்திய பெருங்கடல் ஆணையத்தின் ஐந்தாவது பார்வையாளர் நாடாக இணைந்துள்ளது.
இந்த ஆணையமானது 1982 ஆம் ஆண்டில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உருவாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
8. சர்வதேச மகளிர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 6th மார்ச்
- 7th மார்ச்
- 8th மார்ச்
- 9th மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 8
Explanation:
1975-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமகா அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Each for Equal
மேலும், நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related