TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th and 11th March 2021

Current Affairs in Tamil 10th and 11th March 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 10th and 11th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



7th to 9th March | 12th & 13th March

1. பின்வரும் எந்த மாநிலம், முதன் முதலாக பாலின பட்ஜெட்டை(GENDER BUDGET) வெளியிட உள்ளது?

  1. கேரளா
  2. கர்நாடகா
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரா
Answer & Explanation

Answer: ஆந்திரா 

Explanation:

பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘பாலின பட்ஜெட்டை (GENDER BUDGET)’ 2021-2022 ஆம் ஆண்டின் நிதியாண்டில் வெளியிடவுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியா, 2005-06 ஆம் ஆண்டில் இருந்து, மத்திய பட்ஜெட்டுடன் பாலின பட்ஜெட்டை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மொத்த பட்ஜெட்டில் 4.72% பாலின பட்ஜெட்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு- 2020 இல், 153 நாடுகளில் இந்தியா 112 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பாலின பட்ஜெட் அதாவது ஆண்-பெண்ணுக்கு தனித்தனி பட்ஜெட் மற்றும் குழந்தைகளுக்கு தனி பட்ஜெட்டை கர்நாடகா அரசு தாக்கல் செய்ய இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது.

2. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழ்வாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிக்கப்பட்டது?

  1. மளிகைமேடு
  2. கீழடி
  3. மயிலாடும் பாறை
  4. கொடுமணல்
Answer & Explanation

Answer: கீழடி

Explanation:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது.

இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு செ.மீ விட்டமுள்ள இந்த மூடி குமிழ், தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது.

மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

3. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலதின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ளவர் ?

  1. தீரத் சிங் ராவத்
  2. திரிவேந்திர சிங் ராவத்
  3. சத்பால் மஹாராஜ்
  4. ரமேஷ் பொக்ரியால்
Answer & Explanation

Answer: தீரத் சிங் ராவத்

Explanation:

உத்தரகாண்ட் மாநில முதல்வராக பதவிவகித்து வந்த திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுள்ளார்.

4. மத்திய தொழில் பாதுகாப்பு படை தொடங்கப்பட்ட ஆண்டு?

  1. 1962
  2. 1963
  3. 1965
  4. 1969
Answer & Explanation

Answer: 1969

Explanation:

Central Industrial Security Force

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை சட்டம், 1968 இன் படி மத்திய தொழில் பாதுகாப்பு படை மார்ச் 10, 1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50வது எழுச்சி நாள் 2019 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ITBP) – 24 October 1962

சசசுத்திர சீமா பல் (SSB) – March 1963

எல்லை பாதுகாப்பு படை (BSF) – 1 December 1965

5. பின்வரும் எந்தநாடு QUAD கூட்டமைப்பில் இடம்பெறவில்லை?

  1. அமெரிக்கா
  2. ஆஸ்திரேலியா
  3. இங்கிலாந்து
  4. இந்தியா
Answer & Explanation

Answer: இங்கிலாந்து

Explanation:

Quadrilateral Security Dialogue

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் கூட்டமைப்பின் (QUAD) உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கும் முதலாவது உச்சிமாநாடு மார்ச்-12 அன்று காணொளி வாயிலாக நடைபெறுகிறது.

கடந்த 2004 – இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவுக்குப் பின் இந்த நான்கு நாடுகள் கூட்டமைப்பு (க்வாட்) உருவாக்கப்பட்டது. அதன் பின் 2007 இல் இந்த அமைப்பு முறைப்படுத்தப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ஆண்டுதோறும் மலபார் (Malabar) என்ற கடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

6. பின்வரும் எந்த இரு நாடுகள் இணைந்து நிஷார் (NISAR) என்ற செயற்கைக்கோளை உருவாக்குகின்றனர்?

  1. இந்தியா – அமெரிக்கா
  2. இந்தியா – ரஷ்யா
  3. இஸ்ரேல் – அமெரிக்கா
  4. நியூசிலாந்து – இங்கிலாந்து
Answer & Explanation

Answer: இந்தியா – அமெரிக்கா

Explanation:

NISAR (NASA-ISRO-Synthetic Aperture Radar)

இந்தியா மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து நிஷார் என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றன.

இதில் ‘எஸ் பேண்டு மற்றும் எல் பேண்டு’ ஆகிய இரண்டு ரேடார்கள் பொருத்தப்பட உள்ளன.

அதன் ஒருபகுதியாக இந்தியா ‘SAR ரேடார்’ சாதனத்தை உருவாக்கி பொருந்தியுள்ளது. இந்த செயற்கைகோள் அடுத்தகட்ட பணிகளுக்காக அதாவது எல் பேண்டு ரேடார் பொருத்துவதற்காக சமீபத்தில் அமெரிக்காவின் நாசாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளின் பணிகள் முழுவதும் முடிந்ததும், அடுத்த ஆண்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட உள்ளது.

7. பின்வரும் எந்த நபர் எழுதிய பகவத் கீதை புத்தகத்தின், மின் பதிப்பை சமீபத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார்?

  1. சித்பவானந்தர்
  2. ராமகிருஷ்ணர்
  3. தயானந்த சரஸ்வதி
  4. சுவாமி ஜனகானந்தா
Answer & Explanation

Answer: சித்பவானந்தர்

Explanation:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சுவாமி சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதை புத்தகத்தின், மின் பதிப்பை (e-book) பிரதமர் மோடி அவர்கள் இன்று (மார்ச் 12) வெளியிட்டார்.





8. DUSTLIK என்பது பின்வரும் எந்த இருநாடுகள் இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சி ஆகும்?

  1. பாகிஸ்தான் – சீனா
  2. அமெரிக்கா – ஐக்கிய அரபு அமீரகம்
  3. ஜப்பான் – தென்கொரியா
  4. இந்தியா – உஷ்பெகிஸ்தான்
Answer & Explanation

Answer: இந்தியா – உஷ்பெகிஸ்தான்

Explanation:

DUSTLIK II

”டஸ்ட்லிக்” (‘Dustlik’) என்ற பெயரில் இந்தியா மற்றும் உஷ்பெகிஸ்தான் இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியின் இரண்டாம் பதிப்பு, உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள ராணிகேட் என்ற இடத்தில் மார்ச் 10 தொடங்கி மார்ச் 19 வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டுப்பயிற்சியின் முதல் பதிப்பு 2019 ஆம் ஆண்டு உஷ்பெகிஸ்தானில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

9. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?

  1. ஜாக் ரோஜ்
  2. தாமஸ் பேச்
  3. நரிந்தர் துருவ் பாத்ரா
  4. அஹ்மத் அல்-ஃபஹத் அல்-சபா
Answer & Explanation

Answer: தாமஸ் பேச்

Explanation:

International Olympic Committee

ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பேச் (Thomas Bach) சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தாமஸ் பேச் 2025-ம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10. சமீபத்தில் பிபிசி-யின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. மேரி கோம்
  2. கொனேரு ஹம்பி
  3. பி.வி.சிந்து
  4. வினேஷ் போகாட்
Answer & Explanation

Answer: கொனேரு ஹம்பி

Explanation:

BBC-யின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது, செஸ் வீராங்கணை கொனேரு ஹம்பிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இவ்விருது பி.வி.சிந்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும்., அஞ்சு பாபிஜார்ஜ் – க்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், வளர்ந்து வரும் வீராங்கனை விருது மனு பாக்கருக்கும் (துப்பாக்கி சுடுதல்)  வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

11. ஐசிசி – யின் பிப்ரவரி மாத சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளவர் ?

  1. ரிஷப் பந்த்
  2. ஜோ ரூட்
  3. முகமது சிராஜ்
  4. ரவிச்சந்திரன் அஸ்வின்
Answer & Explanation

Answer: ரவிச்சந்திரன் அஸ்வின்  

Explanation:

ஐசிசி – யின் பிப்ரவரி மாத சிறந்த வீரர் விருது இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் -க்கும், பெண்கள் பிரிவில் இங்கிலாந்தின் டேமி பியூ மௌன்ட் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

12. 2021ஆம் ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 10 மார்ச்
  2. 11 மார்ச்
  3. 12 மார்ச்
  4. 13 மார்ச்
Answer & Explanation

Answer: 11 மார்ச்  

Explanation:

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது,

இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் மார்ச் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.

கருப்பொருள்: Living well with kidney disease

ஒரு வரி செய்திகள்

1. ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். கரஞ்ச் இந்திய கடற்படையில் இணைப்பு. இந்த நீர்மூழ்கி, பிரான்சின் கடற்படை பிரிவால் வடிவமைக்கப்பட்டு, மும்பை மசாகோன் கப்பல்கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது. (கடற்படை தளபதி – கரம்பீர் சிங்)

2. மேலும், அணு ஆற்றலில் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

3. மத்திய பிரதேச அரசு சமீபத்தில் மத சுதந்திர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

4. இந்தியாவின் சேட்டிலைட் மேன் என அழைக்கப்படுபவர் – ராமச்சந்திர ராவ்

5. பொது இடங்களில் புர்கா அணிய சுவிட்சர்லாந் அரசு தடை விதித்துள்ளது.

6. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த StoreDot என்ற நிறுவனம் 5 நிமிடங்களில் அதிவேகமாக சார்ஜாகும் லித்தியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர்.

More TNPSC Current Affairs



3 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th and 11th March 2021”

Leave a Comment