TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th March 2020

Current Affairs in Tamil 10th March 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 10th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 10th March 2020

1. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

  1. 1960 மார்ச் 10
  2. 1970 மார்ச் 10
  3. 1960 மார்ச் 11
  4. 1970 மார்ச் 11
Answer & Explanation
Answer: 1970 மார்ச் 10

Explanation:

பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் நாடகமான “மனோன்மணியம்” என்பதிலிருந்து “நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் பாடலின் இரண்டு பத்திகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக 1970 ஆம் ஆண்டு மார்ச் 10 ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் எந்த மாநிலத்தை சேர்ந்த வேளாண் பல்கலைக்கழகம் ‘சஹ்யாத்ரி மேகா’ என்ற ஒரு புதிய நெல் வகையை உருவாக்கியுள்ளது?

  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. ஆந்திரா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: கர்நாடகா

Explanation:

கர்நாடகாவின் சிவமொகாவில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை அறிவியல் பல்கலைக் கழகத்தினர் (University of Agricultural and Horticultural Sciences – UAHS) ‘சஹ்யாத்ரி மேகா’ என்ற ஒரு புதிய சிவப்பு வகை நெல் வகையை உருவாக்கியுள்ளனர்.

3. எளிதாக தொழில் செய்வதற்கான நாடுகள் பட்டியல் 2019 -இல் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 63
  2. 77
  3. 92
  4. 102
Answer & Explanation
Answer: 63

Explanation:

உலக வங்கி வெளியிட்டுள்ள எளிமையாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திலிருந்து 63-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

4. நாப்கின் நிறுவனங்கள், நாப்கின்களுடன் பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்தும் பைகளை வழங்குவது எப்போது முதல் கட்டாயமாக்கப்படுகிறது?

  1. ஏப்ரல் 2020
  2. ஜூன் 2020
  3. ஜனவரி 2021
  4. ஏப்ரல் 2021
Answer & Explanation
Answer: ஜனவரி 2021

Explanation:

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாப்கின்களுடன் பயன்படுத்திய நாப்கின்களை அப்புறப்படுத்த மக்கக் கூடிய பைகளை வழங்கவேண்டும் என்று நாப்கின் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் – பிரகாஷ் ஜவடேகர்




5. சமீபத்தில் பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் (NPDRR) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ராஜ்நாத் சிங்
  2. நிர்மலா சீதாராமன்
  3. நரேந்திர மோடி
  4. அமித் ஷா
Answer & Explanation
Answer: அமித் ஷா

Explanation:

NPDRR -National Platform for Disaster Risk Reduction

6.கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்த பஞ்சாப் அரசு அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி?

  1. NO 2 COVA
  2. COVA Punjab
  3. COVID-19 Punjab
  4. Karo NO
Answer & Explanation
Answer: COVA Punjab

Explanation:

கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்தவும், கொரானா பற்றிய அரசின் நிலைப்பாடுகளை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தவும் பஞ்சாப் அரசு COVA Punjab என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • பஞ்சாப் முதல்வர்: அமரீந்தர் சிங்
  • பஞ்சாப் கவர்னர்: வி.பி. சிங் பட்னோர்

7. ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
Answer & Explanation
Answer: 2

Explanation:

சமீபத்தில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கைப்படி ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை முறையே சவுதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் சீனா நாடுகள் பிடித்துள்ளன.

8. சமீபத்தில் பிபிசி-யின் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. மேரி கோம்
  2. மானசி ஜோஷி
  3. பி.வி.சிந்து
  4. வினேஷ் போகாட்
Answer & Explanation
Answer: பி.வி.சிந்து

Explanation:

BBC-யின் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பி.வி.சிந்துக்கு வழங்கப்பட்டது.

மேலும் பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

More TNPSC Current Affairs



Leave a Comment