TNPSC Current Affairs Question and Answer in Tamil 12th March 2020

Current Affairs in Tamil 12th March 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 12th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.




TNPSC Current Affairs in Tamil 12th March 2020

1. திவ்யா கால சக்தி என்ற கலாச்சார நிகழிச்சி தமிழகத்தின் எப்பகுதியில் நடைபெற்றது?

  1. சென்னை
  2. திருச்சி
  3. கோவை
  4. மதுரை
Answer & Explanation
Answer: சென்னை

Explanation:

முதல் முறையாக தமிழ்நாட்டில் Divya Kala Shakti என்ற மாற்றுத் திறனாளிகள் கலாச்சார நிகழிச்சி சென்னையில் மார்ச் 12 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தென்னிந்தியாவில் இருந்து 98 திவ்யாங்ஜங்கள் (மாற்றுத் திறனாளிகள்) கலந்து கொண்டனர்.

TNPSC Group 1 Model Papers – Download

2. இந்தியாவிலேயே அதிகமான சூரிய கூரைகளை (Solar Rooftop) நிறுவியுள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. குஜராத்
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

உள்நாட்டு சூரிய கூரை நிறுவலுக்கான பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரா பிடித்துள்ளது.

3. 2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற உள்ளது?

  1. ஜம்மு & காஷ்மீர்
  2. லடாக்
  3. தமிழ்நாடு
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: லடாக்

Explanation:

6வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் வரும் ஜூன் 21 அன்று லடாக் தலைநகரம் லே (Leh) – இல் நடைபெற உள்ளது.

2015ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.




4. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த சிகரமான கோஸ்ஷியஸ்கோ -வில் ஏறி சாதனை படைத்துள்ள இந்திய பெண்?

  1. பாவனா டெஹரியா
  2. அருணிமா சின்ஹா
  3. சிவாங்கி பதக்
  4. அன்சுஜாம்சென்பா
Answer & Explanation
Answer: பாவனா டெஹரியா

Explanation:

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பாவனா டெஹரியா, 2,228 மீட்டா் உயரம் கொண்ட ஆஸ்திரேலியாவின் மிக உயா்ந்த சிகரமான கோஸ்சியஸ்கோ -வில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியையும் அதைத் தொடா்ந்து கடந்த ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி ஆப்பிரிக்காவின் மிக உயா்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ மலையின் உச்சியையும் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. சமீபத்தில் DigiPivot என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்ப நிறுவனம்?

  1. ட்விட்டர்
  2. ஃபேஷ்புக்
  3. கூகிள்
  4. மைக்ரோ சாப்ட்
Answer & Explanation
Answer: கூகிள் இந்தியா

Explanation:

கூகிள் இந்தியா பெண்களின் திறனை மேம்படுத்த DigiPivot திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய திறன்களை வளர்க்கும் பொருட்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அவ்தார்(Avtar) என்ற வேலைவாய்ப்பு இணையதளம் & மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த மாதம் We Think Digital என்ற பெயரில் பெண்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவு பயிற்சி வழங்கும் திட்டத்தை ஃபேஷ்புக் (Facebook) நிறுவனம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

6. Business Line பத்திரிக்கையின் 2020ஆம் ஆண்டுக்கான சேஞ்ச்மேக்கர் விருது (Changemaker of the year) யாருக்கு வழங்கப்பட்டது?

  1. டூட்டி சந்த்
  2. ஹிமா தாஸ்
  3. P.V சிந்து
  4. ஸ்வப்னா பார்மன்
Answer & Explanation
Answer: டூட்டி சந்த் (Dutee Chand)

Explanation:

ஒடிசாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு Business Line பத்திரிக்கையின் 2020ஆம் ஆண்டுக்கான சேஞ்ச்மேக்கர் விருது (Changemaker of the year) சமீபத்தில் வழங்கப்பட்டது.

7. உலக சிறுநீரக தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 10 மார்ச்
  2. 11 மார்ச்
  3. 12 மார்ச்
  4. 13 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 12

Explanation:

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் மார்ச் 12 அன்று அனுசரிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: Kidney Health for Everyone Everywhere

8. The 12 Commandments Of Being A Woman என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

  1. சன்யா மல்ஹோத்ரா
  2. யாமினி கௌதம்
  3. தாஹிரா காஷ்யப்
  4. நுஷ்ரத் பருச்சா
Answer & Explanation
Answer: தாஹிரா காஷ்யப் (Tahira Kashyap)

More TNPSC Current Affairs



2 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 12th March 2020”

Leave a Comment