TNPSC Current Affairs Question and Answer in Tamil 12th to 14th March 2021

Current Affairs in Tamil 12th to 14th March 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 12th to 14th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



1. சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது அறிவிகப்பட்டுள்ள செல்லாத பணம் என்ற நாவலின் ஆசிரியர்?

  1. அண்ணாமலை
  2. கே.வி.ஜெயஸ்ரீ
  3. சக்தி சிதம்பரம்
  4. ஜனரஞ்சன்
Answer & Explanation

Answer: அண்ணாமலை

Explanation:

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது 20 நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது நாவலாசிரியரும் எழுத்தாளருமான இமையத்திற்கு, அவரது ‘செல்லாத பணம்’ எனும் நாவலுக்காக வழங்கப்பட உள்ளது.

மேலும் கன்னடத்தில் ‘ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக்விஜயம்’ பெருங்கவிதை நூலை எழுதிய முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி,

ஆங்கிலத்தில் ‘வென் காட் இஸ் எ டிராவலா்’ என்ற கவிதை நூலை எழுதிய அருந்ததி சுப்பிரமணியக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமையம் எழுதிய சில பிரபலமான நாவல்கள் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், எங் கதெ, செடல், செல்லாத பணம்.

எழுத்தாளா் இமையத்தின் இயற்பெயா் சி.வெ. அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

2. இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையம் எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?

  1. தெலுங்கானா
  2. கேரளா
  3. அசாம்
  4. குஜராத்
Answer & Explanation

Answer: தெலுங்கானா

Explanation:

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆற்றல் நிலையம் (India’s Largest Floating Solar Power Plant) , 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுடன் தெலுங்கானாவின் பெடாப்பள்ளி மாவட்டத்திலுள்ள ராமகுண்டம் (Ramagundam) எனுமிடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதனை தேசிய அனல் மின் நிலையம் நிறுவனம் (National Thermal Power Corporation Limited) உருவாக்குகிறது.

3. சமீபத்தில் அம்ருத் மகோத்சவம் என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழா எங்கு தொடங்கி வைக்கப்பட்டது?

  1. டெல்லி – செங்கோட்டை
  2. சபா்மதி ஆசிரமம்
  3. ஒற்றுமையின் சிலை
  4. முசாஃபிர்
Answer & Explanation

Answer: சபா்மதி ஆசிரமம் 

Explanation:

நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள சபா்மதி ஆசிரமத்திலிருந்து ‘சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்’ நிகழ்ச்சியை பிரதமா் மோடி மார்ச் 12 அன்று தொடங்கி வைத்தார்.

மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூரும் வகையில், 81 போ் கொண்ட குழு புறப்பட்டது.

4. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டதிற்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் மொபைல் செயலி?

  1. Mera Ration
  2. ONORC
  3. AePDS
  4. ePOS
Answer & Explanation

Answer: Mera Ration

Explanation:

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் பயனாளர்களுக்கு உதவும் வகையில் Mera Ration என்ற மொபைல் செயலியை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

5. ”அர்ஜீன் சகாயக் திட்டம்” என்பது பின்வரும் எந்தமாநிலத்தின் நீர்ப்பாசன திட்டம் ஆகும்?

  1. உத்தரப்பிரதேசம்
  2. மத்தியப்பிரதேசம்
  3. குஜராத்
  4. மேற்குவங்கம்
Answer & Explanation

Answer:

Explanation:

Arjuna Sahayak Irrigation Project

2600 கோடி மதிப்பில் ”அர்ஜீன் சகாயக் திட்டம்” என்ற நீர்ப்பாசன திட்டத்தை உத்தரப்பிரதேச அரசு தொடங்கியுள்ளது.

இத்திட்டமானது குறிப்பாக தாசன் (Dhasan) நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.

6. சமீபத்தில் பின்வரும் எந்த இந்தியருக்கு FIAF விருது அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. ரிஷி கபூர்
  2. அமிதாப் பச்சன்
  3. ராஜேஷ் கண்ணா
  4. சோனு சூட்
Answer & Explanation

Answer: அமிதாப் பச்சன்

Explanation:

International Federation of Film Archives என்ற சினிமா துறை சார்ந்த விருது பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

உலக திரைப்பட பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.





7. சமீபத்தில் இந்தியாவின் தலைமை புள்ளியியளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சிவாஜி
  2. பிமல் குமார் ராய்
  3. கிரண் பாண்ட்யா
  4. ஜி.பி. சமந்தா
Answer & Explanation

Answer: ஜி.பி. சமந்தா

Explanation:

 

8. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை?

  1. சார்லெட் எட்வர்ட்ஸ்
  2. மிதாலி ராஜ்
  3. பெலிண்டா கிளார்க்ஸ்
  4. கேரன் ரால்டன்
Answer & Explanation

Answer: மிதாலி ராஜ் 

Explanation:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்த உலகளவில் முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

மேலும், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் உலகளவில் 10000 ரன்களை கடந்த இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார்.

9. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மார்ச் 14
  2. மார்ச் 15
  3. மார்ச் 16
  4. மார்ச் 17
Answer & Explanation

Answer: மார்ச் 15

Explanation:

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1983 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 உலக நுகர்வோர் தினமகா அனுசரிக்கப்படுகிறது.

1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் சட்டம் பற்றி ஜான்.எப். கென்னடி ஆற்றிய உரையை நினைவு கூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

கருப்பொருள்: பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கையாளுதல் (Tackling Plastic Pollution)

More TNPSC Current Affairs



Leave a Comment