Current Affairs in Tamil 14th March 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 14th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. வெளிநாட்டுப் பறவைகளைக் கண்காணிக்கும் வகையில் நோய் புலனாய்வு ஆய்வகம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
- திருநெல்வேலி
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- ராமநாதபுரம்
Answer & Explanation
Answer: ராமநாதபுரம்
Explanation:
பறவைகள் மூலம் மனிதா்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை அடுத்து, வெளிநாட்டுப் பறவைகளையும் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில் நோய் புலனாய்வு ஆய்வகமானது வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்து செல்லும் ராமநாதபுரம், அரியலூா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அமைக்கபட உள்ளன.
முதல் கட்டமாக ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் செலவில் நோய் புலனாய்வு ஆய்வகம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்த நாள்?
- 12-03-2020
- 13-03-2020
- 14-03-2020
- 15-03-2020
Answer & Explanation
Answer: 14-03-2020
மேலும்.,
கரனோ வைரஸை உலக சுகாதார நிறுவனம் எப்போது பெருந்தொற்று நொய் (pandemic) என மார்ச் 11 அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
3. விலங்குகள் பாதுகாப்பு பட்டியல்(API) 2020 -இல் இந்தியா வகிக்கும் தரம்?
- A+
- B
- B+
- C
Answer & Explanation
Answer: ‘ C ‘
Explanation:
உலக விலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு குறியீட்டு 2020 (Animal Protection Index) -இல் இந்தியா ‘C’ தரத்தை பிடித்துள்ளது.
ஸ்பெயின், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ போன்ற வேறு சில நாடுகளும் குறியீட்டில் ‘சி’ தரத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
4. விங்ஸ் இந்தியா 2020 என்ற விமான போக்குவரத்து கண்காட்சி நடைபெறும் இடம்?
- டெல்லி
- கொல்கத்தா
- ஹைதராபாத்
- சென்னை
Answer & Explanation
Answer: ஹைதராபாத்
Explanation:
இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (FICCI), சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆகியவை இணைந்து ஹைதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2020 (Wings India 2020) என்ற பெயரில் உள்நாட்டு விமான போக்குவரத்து கண்காட்சியை மார்ச் 12 முதல் 15 வரை நடத்துகின்றன.
5. சமீபத்தில் எந்த வங்கி, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க தேவையில்லை என அறிவித்துள்ளது?
- YES பேங்க்
- SBI
- இந்தியன் வங்கி
- கனரா வங்கி
Answer & Explanation
Answer: SBI
Explanation:
எஸ்.பி.ஐ. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளது.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் ஊரகப்பகுதி எனில் ரூ.1,000 மற்றும் நகர்ப்பகுதிகளில் ரூ.2,000, பெரு நகரங்களில் ரூ.3,000 இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் கிரீஸ் நாட்டின் அதிபராக பதவியேற்றுக்கொண்டவர்?
- கிரியாகோஸ் மிட்சோதாகிஸ்
- கேத்ரினா சாகெல்லரோபவ்லு
- மரியா யூதிமியோ
- அண்ணா டயமண்டோபலோ
Answer & Explanation
Answer: கேத்ரினா சாகெல்லரோபவ்லு
Explanation:
கிரீஸ் நாட்டின் அதிபராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேத்ரினா சாகெல்லரோபவ்லு (Katerina Sakellaropoulou) மார்ச் 13 அன்று பதவியேற்றுக்கொண்டார்.
கிரீஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர்: கிரியாகோஸ் மிட்சோதாகிஸ்
7. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- சவுராஷ்டிரா
- பெங்கால்
- கர்நாடகா
- குஜராத்
Answer & Explanation
Answer: சவுராஷ்டிரா
Explanation:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சவுராஷ்டிரா அணி பெங்கால் அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா அணி குஜராத் அணியுடனும், பெங்கால் அணி கர்நாடகா அணியுடனும் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.
8. பை (“π”) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- மார்ச் 14
- ஏப்ரல் 14
- மார்ச் 15
- ஏப்ரல் 15
Answer & Explanation
Answer: மார்ச் 14
Explanation:
அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14ஐ குறிக்கும். இது பையின் மதிப்பான 3.14 என்பதை குறிப்பதாகும்.
எனவே மார்ச் 14 பை (“π”) தினமாக அனுசரிக்கப்படுகிறது.
9. Messiah Modi: A Great tale of expectations என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- கூமி கபூர்
- தவ்லீன் சிங்
- மது கிஷ்வர்
- சுவாதி சதுர்வேதி
Answer & Explanation
Answer: தவ்லீன் சிங் (Tavleen Singh)
Explanation:
மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தவ்லீன் சிங் Messiah Modi: A Great tale of expectations என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
More TNPSC Current Affairs
Related