TNPSC Current Affairs Question and Answer in Tamil 15th and 16th March 2021

Current Affairs in Tamil 15th and 16th March 2021

Hello, TNPSC Aspirants, Here we provide the Current Affairs question and answer in Tamil for 15th and 16th March 2021. Take the quiz and improve your Current Affairs Knowledge.



1. அமெரிக்க தூதகரத்தின் சர்வதேச துணிச்சலான பெண்மணிக்கான விருது யாருக்கு வழங்ப்பட்டுள்ளது?

  1. ரனிதா ஞானராஜா
  2. கௌசல்யா சங்கர்
  3. சுபேதா
  4. சீதா லட்சுமி
Answer & Explanation

Answer: கௌசல்யா சங்கர்

Explanation:

International Woman of Courage

சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் தமிழகத்தைச் சேர்ந்த சாதி எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆர்வலர் கௌசல்யா சங்கர் அவர்களுக்கு மார்ச் 11 அன்று சர்வதேச தைரியமான பெண் (IWOC) விருது வழங்கி கௌரவித்துள்ளது.

2. யானை – மனிதர் இடையேயான தாக்குலை குறைக்க RE-HAB என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கர்நாடகா
  3. கேரளா
  4. கோவா
Answer & Explanation

Answer: கர்நாடகா

Explanation:

Reducing Elephant – Human Attacks using Bees (RE-HAB)

யானைகள் – மனிதர்கள் இடையேயான மோதல் சம்பவத்தை குறைக்க, தேனீ கூண்டுகளை, வேலியாக பயன்படுத்தும் புதுமையான திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் தொடங்கியுள்ளது.

இத்திட்டம் முதல்முறையாக கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தின் செலூர் கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார்.

3. உலக அளவில் ராணுவ தளவாடங்கள் அதிகம் இறக்குமதி செய்யும் நாடு?

  1. இந்தியா
  2. பிரான்ஸ்
  3. சவுதி அரேபியா
  4. சீனா
Answer & Explanation

Answer: சவுதி அரேபியா

Explanation:

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிக ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் சவுதி அரேபியா தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும்,

இந்தியா இரண்டாவது இடத்தில் இருபாதகவும் தெரிவித்துள்ளது.

4. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சரஸ்வதி
  2. ராஜேஷ் குமார்
  3. தர்மசீலன்
  4. அன்பழகன்
Answer & Explanation

Answer: அன்பழகன்

Explanation:

விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக அன்பழகனை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அன்பழகன் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

5. சமீபத்தில், பின்வரும் எந்த நகரில் இந்திய எரிசக்தி மையம் துவங்கப்பட்டுள்ளது?

  1. மாஸ்கோ
  2. நியூயார்க்
  3. மும்பை
  4. லண்டன்
Answer & Explanation

Answer: மாஸ்கோ 

Explanation:

India Energy Office

இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடேயே எரிசக்தி துறையில் பரஸ்பர முதலீட்டை ஈர்க்க, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்திய எரிசக்தி மையத்தை துவங்கியுள்ளது.

6. காப்பீட்டுத் துறையில் எத்தனை சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது?

  1. 49%
  2. 60%
  3. 74%
  4. 80%
Answer & Explanation

Answer: 74 %

Explanation:

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.





7. தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டம் 1971 -இன் படி எத்தனை வாரங்கள் வரையிலான கருவை கலைக்க முடியும்?

  1. 20 வாரங்கள்
  2. 22 வாரங்கள்
  3. 24 வாரங்கள்
  4. 26 வாரங்கள்
Answer & Explanation

Answer: 20 வாரங்கள்

Explanation:

கருக்கலைப்புச் சட்டம் 1971 -இல் திருத்தம் கொண்டுவருவதற்க்கான சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டுள்ளது.

தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டம், 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க அனுமதிக்கிறது.

ஆனால், புதிய சட்ட திருத்தம், தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத் தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்க வழிவகை செய்கிறது.

8. The Frontier Gandhi: My Life and Struggle என்ற புத்தகம் பின்வரும் எந்த நபரின் வாழ்கை பற்றியது?

  1. பால் கங்காதர் திலக்
  2. கான் அப்துல் கப்பார் கான்
  3. மகாத்மா காந்தி
  4. ராஜ்மோகன் காந்தி
Answer & Explanation

Answer: கான் அப்துல் கப்பார் கான்

Explanation:

எல்லை காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கப்பார் கான் அவர்கள் 1983 ஆம் ஆண்டு பஷ்தோ மொழியில் எழுதிய The Frontier Gandhi: My Life and Struggle என்ற புத்தகதின் ஆங்கில பதிப்பு  சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் ஆங்கில பதிப்பை எழுதியவர் Imitiaz Ahmad Sahibzada

9. “பவானி தேவி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர் ?

  1. குத்துசண்டை
  2. சிலம்பம்
  3. கோல்ப்
  4. வாள்வீச்சு
Answer & Explanation

Answer: வாள்வீச்சு

Explanation:

8 முறை தேசிய சாம்பியனான தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வாள்வீச்சு போட்டியாளா் என்ற சாதனையை அவா் படைத்துள்ளாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் – கிரண் ரிஜிஜு

10. தேசிய தடுப்பூசி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மார்ச் 14
  2. அக்டோபர் 24
  3. மார்ச் 24
  4. ஏப்ரல் 03
Answer & Explanation

Answer: மார்ச் 14 

Explanation:

இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது.

உலகப் போலியோ தினம் – அக்டோபர் 24

உலக நோய்த்தடுப்பு வாரம் (World Immunization Week) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரம் அனுசரிப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஒருவரி செய்திகள்

டி – 20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்துள்ளார்.

More TNPSC Current Affairs



Leave a Comment