Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 16th March 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. சமீபத்தில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக 38-ஆவது மாவட்டம் உருவாக்கப்பட்டது?
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
கடலூர்
திருவாரூர்
Answer & Explanation
Answer: நாகப்பட்டினம்
Explanation:
நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் மார்ச் 24 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் அறிவித்தார்.
2. தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு யாருடைய பெயர் சூட்டப்பட உள்ளது?
ஜெ.ஜெயலலிதா
எம்.ஜி.ஆர்
முத்துலட்சுமி ரெட்டி
சரோஜினி நாயுடு
Answer & Explanation
Answer: ஜெ.ஜெயலலிதா
Explanation:
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்த ஜெயலலிதாவைச் சிறப்பிக்கும் வகையில்,
தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு, அவ்வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
3. இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்றினை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்த முதல் நிறுவனம் எது?
KingsLab
PureLabs
MyLabs
ISRO
Answer & Explanation
Answer: MyLabs
Explanation:
புனே-வை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Mylab Discovery Solution Pvt Ltd என்ற நிறுவனம் கொரானா வைரஸ் தொற்றினை கண்டறியும் கருவியை (COVID-19 Test Kit) கண்டறிந்துள்ளது.
4. சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக பதவிபிரமாணம் எடுத்துக்கொண்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி?
தீபக் மிஸ்ரா
ரஞ்சன் கோகாய்
ஜெகதீஷ் சிங் கெஹர்
எச். எல். தத்து
Answer & Explanation
Answer: ரஞ்சன் கோகாய்
Explanation:
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபா எம்.பி.யாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் நியமித்துள்ளார்.
இவர் உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. இந்தியாவில் எந்த நகரில் கொரானா வைரஸ் நோய்க்கென பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்போவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது?
டெல்லி
மும்பை
கொல்கத்தா
கொச்சின்
Answer & Explanation
Answer: மும்பை
Explanation:
மும்பை மாநகராட்சியுடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் மும்பையில் இரண்டு வார காலத்துக்குள் 100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனையைக் (Sir HN Reliance Foundation Hospital) கட்டு திட்டமிட்டுள்ளது.
6. கொரானா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இந்தியாவில் மக்கள் ஊரடங்கு எனப்படும் ஜனதா curfew கடைப்பிடிக்கப்பட்ட நாள்?
20 மார்ச்
21 மார்ச்
22 மார்ச்
23 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 22
7. முதல் மெய்நிகர் ஜி20 மாநாடு எப்பொழுது நடைபெறுகிறது?
25 மார்ச்
26 மார்ச்
27 மார்ச்
28 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 26
Explanation:
கொரோனா வைரஸை தடுப்பது தொடர்பான உலகளாவிய பதிலை முன்னெடுப்பதற்காக சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் தலைமையில் ஜி-20 நாடுகளின் முதலாவது மெய்நிகர் மாநாடு மார்ச் 26 அன்று நடைபெற்றது.
இதில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் காணொலி மூலம் கலந்துரையாடினர்.
மேலும், இந்த ஆண்டுக்கான வழக்கமான ஜி-20 மாநாடு வரும் நவம்பர் 21-22 தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜி-20 மாநாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 370 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.
8. உலக பொருளாதார சுதந்திர பட்டியல் குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?
80
102
120
127
Answer & Explanation
Answer: 120
Explanation:
சமீபத்தில் Heritage Foundation வெளியிட்ட 26வது World Index of Economic Freedom-இல் பட்டியலிடப்பட்ட 186 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் நியூசிலாந்து நாடுகள் பிடித்துள்ளன.
9. உலக மகிழ்ச்சி குறியீடு 2020 பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன?
123
133
144
151
Answer & Explanation
Answer: 144
Explanation:
10. சமீபத்தில் கரூர் வைஸ்யா வங்கி அறிமுகம் செய்துள்ள Pre-paid card-இன் பெயர்?
Enkasu
MyMoney
Mun-Panam
KVB-MM
Answer & Explanation
Answer: Enkasu
11. 2020-ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
Hillel Furstenberg
Gregory Margulis
Yakov Sinai
Hee Oh
Answer & Explanation
Answer: a&b
Explanation:
கணித துறையில் சிறந்து விளங்குவோருக்கு 2003ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசு Hillel Furstenberg மற்றும் Gregory Margulis ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
12. சமீபத்தில் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ள இந்தியர்?
மோகன் சிங் குன்ஜால்
நவாங் கோம்பு
அபர்ணா குமார்
சத்யரூப் சித்தாந்தா
Answer & Explanation
Answer: சத்யரூப் சித்தாந்தா
Explanation:
உலகின் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான எரிமலைகளில் ஏறி சாதனை படைத்ததற்காக சத்யரூப் சித்தாந்தா லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (Limca Book of Records) இடம்பெற்றுள்ளார்.
13. தேசிய தடுப்பூசி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
16 மார்ச்
17 மார்ச்
18 மார்ச்
19 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 16
Explanation:
இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது.
14. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
19 மார்ச்
20 மார்ச்
21 மார்ச்
22 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 20
Explanation:
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2010 ஆம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியின் மாநில பறவை “சிட்டுக்குருவி” என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: I LOVE Sparrow
15. உலக காடுகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
17 மார்ச்
18 மார்ச்
19 மார்ச்
20 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 21
Explanation:
கருப்பொருள்: Forests and Biodiversity
16. உலக நீர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
17 மார்ச்
18 மார்ச்
19 மார்ச்
20 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 22
Explanation:
நன்னீரின் முக்கியம் பற்றி விழிப்புணர்வை மக்கள் மத்தில் ஏற்படுத்த ஆண்டுதோறும் ஐ.நா-வினால் மார்ச் 22 உலக நீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள்: Water and Climate Change
17. உலக வானியல் தினம் (World Meteorological Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
22 மார்ச்
23 மார்ச்
24 மார்ச்
25 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 23
Explanation:
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Climate and Water
18. உலக காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
22 மார்ச்
23 மார்ச்
24 மார்ச்
25 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 24
Explanation:
காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் மார்ச் 24 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: It’s Time
19. உலக ஊதா தினம் (Epilepsy Awareness Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
25 மார்ச்
26 மார்ச்
27 மார்ச்
28 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 26
Explanation:
உலக ஊதா தினம் என அழைக்கப்படும் கால்-கை வலிப்பு விழிப்புணர்வு நாள் (Epilepsy Awareness Day) 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
20. Legacy Of Learning என்ற புத்தகத்தி்ன் ஆசிரியர் யார்?
சவிதா சப்ரா
மல்லிகா சீனிவாசன்
அருணா ஜெயந்தி
ப்ரீதா ரெட்டி
Answer & Explanation
Answer: சவிதா சப்ரா (Savita Chhabra)
21. Invincible – A Tribute to Manohar Parrikar என்ற புத்தகத்தி்ன் ஆசிரியர் யார்?