Current Affairs in Tamil 1st May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 1st May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?
- கொடைக்கானல் தேயிலை
- கும்பகோணம் டிகிரி காபி
- கோவில்பட்டி கடலை மிட்டாய்
- மதுரை பன் பரோட்டா
Answer & Explanation
Answer: கோவில்பட்டி கடலை மிட்டாய்
Explanation:
தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருட்களின் அரசி என்றழைக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
2. கொரோனா பாதிப்பு இல்லாத 2வது மாவட்டமாக 30-4-2020 அறிவிக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டம்?
- தென்காசி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- விருதுநகர்
Answer & Explanation
Answer: தூத்துக்குடி
Explanation:
ஈரோட்டை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது தூத்துக்குடி. புதிதாக யாரும் பாதிக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. இந்தியா வானிலை மையம் வெளியிட்டுள்ள புயல் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் பெயர்கள்?
- வாயு
- முரசு
- நீர்
- சங்கு
Answer & Explanation
Answer: முரசு& நீர்
Explanation:
இந்தியா வானிலை மையம் வெளியிட்டுள்ள புயல் பெயர் பட்டியலில் முதன்முறையாக தமிழ்ப்பெயர் இடம்பெற்றுள்ளன.
அதில் முரசு என்ற பெயர் பட்டியலில் 28 வது இடத்திலும் நீர் என்ற பெயர் 93 வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்தப் பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சமீபத்தில் ஜப்பானின் ஆர்டர் ஆஃப் ரைசிங் சன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- தங்ஜம் தபாலி சிங்
- சுஜி யாகி
- நரேந்திர மோடி
- அஸ்வனி குமார்
Answer & Explanation
Answer: தங்ஜம் தபாலி சிங்
Explanation:
ஜப்பான் அரசாங்கத்தால் வழங்கப்படும் ‘ஆர்டர் ஆஃப் ரைசிங் சன்’(Order of Rising Sun) என்ற விருது, மணிப்பூரை சேர்ந்த மருத்துவர், தங்ஜம் தபாலி சிங் (Thangjam Dhabali Singh) அவர்களுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
5. சமீபத்தில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக பொறுப்பேற்றவர்?
- அதானு சக்ரவர்த்தி
- தருண் பஜாஜ்
- எஸ். கிருஷ்ணன்
- கே.குப்தா
Answer & Explanation
Answer: தருண் பஜாஜ்
Explanation:
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக (Economic Affairs Secretary) பதவிவகித்து வந்த அதானு சக்ரவர்த்தி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த தருண் பஜாஜ் (Tarun Bajaj), இன்று (மே-1) புதிய செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.
6. சுகாதார ஊழியர்களுக்காக #WeWillWin என்ற பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ள விளையாட்டு கூட்டமைப்பு?
- FIFA
- NBA
- UEFA
- BCCI
Answer & Explanation
Answer: FIFA
Explanation:
சுகாதார ஊழியர்களுக்காக #WeWillWin பிரச்சாரத்தை அறிமுகப்படுத்துகிறது ஃபிஃபா
FIFA launches #WeWillWin campaign for health workers
More TNPSC Current Affairs
Related
Sir ungaloda current affairs note enakku useful ah irukku sir itha download pantrathu epdinnu enakku theriyala sir neenga ennoda mail id kku PDF format la anuppuna enakku padikkirathukku romba useful ah irukkum sir please
வணக்கம் விக்னேஷ்.,
இப்போதைக்கு PDF வடிவில் பதிவிறக்கம் செய்யும் வசதி நமது இணையதளத்தில் கொடுக்கப்படவில்லை. உங்களை போன்று படிப்பவர்களுக்க்கா விரைவில் ஒருங்கிணைத்து அனுப்புகிறோம்.
மிக்க நன்றி சார்,
உங்களுடைய இந்த பணி எங்களைப் போல் உள்ள கிராமப்புற போட்டித் தேர்வாளர்களுக்கு ஒரு உந்துதலாக அமைகிண்றது