TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th & 11th May 2020

Current Affairs in Tamil 10th & 11th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 10th & 11th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 10th and 11th May 2020

1. சமீபத்தில் மதிய உணவு ரேஷன் திட்டத்தை அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம்?

  1. மத்தியப் பிரதேசம்
  2. உத்திரப் பிரதேசம்
  3. குஜராத்
  4. பஞ்சாப்
Answer & Explanation
Answer: மத்தியப் பிரதேசம்

Explanation:

”மதிய உணவு ரேஷன் திட்டத்தை” (Mid-Day Meal ration) அமல் படுத்தியுள்ள இந்தியாவின் முதல் மாநிலம் எனும் பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் பெற்றோரின் வங்கி கணக்கில் அவர்களுக்கான மதிய உணவிற்கான செலவுத் தொகை மாநில அரசினால் அனுப்பி வைக்கப்பட்டது.

சமச்சீர் புத்தகங்கள்Download

2. NSafe என்ற மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது முககவசத்தை உருவாக்கியுள்ள அமைப்பு?

  1. IIT டெல்லி
  2. AIMS ரிஷிகேஷ்
  3. IIT சென்னை
  4. VIT வேலூர்
Answer & Explanation
Answer: IIT டெல்லி

Explanation:

NSafe என்ற பெயரில் திரும்ப திரும்ப பயன்படுத்தக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி முககவசத்தை (antimicrobial mask) IIT டெல்லி – யை சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

டெல்லி பற்றி:

  • முதல்வர் (முதல்வர்) – அரவிந்த் கெஜிவால்.
  • ஆளுநர்- அனில் பைஜால்

3. கோவிட் கவாச் எலைஷா என்ற வைரஸ் தொற்றால் ஏற்படும் எதிர் புரதத்தைக் (Antibody) கண்டறியும் பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ள அமைப்பு?

  1. தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் – பூனே
  2. இம்ராட் ஆராய்ச்சி மையம்
  3. IISc பெங்களூர்
  4. TIFR பாம்பே
Answer & Explanation
Answer: தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் – பூனே

Explanation:

கோவிட்-19 தொற்று குறித்த ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக “கோவிட் கவாச் எலிசா” (COVID KAVACH ELISA) என்ற ஐஜிஜி எலிசா (Ig G -ELISA) பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே புனே-வில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Virology) உருவாக்கியுள்ளது.




4. சமீபத்தில் பெட் கோப்பை ஹார்ட் விருது பின்வரும் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. சாய்னா நேவால்
  2. அங்கிதா ரெய்னா
  3. சானியா மிர்சா
  4. ருஷ்மி சக்ரவர்த்தி
Answer & Explanation
Answer: சானியா மிர்சா

Explanation:

Fed Cup Heart Award

ஆண்களுக்கு டேவிஸ் கோப்பை போல மகளிர் டென்னிஸில் ஃபெட் கோப்பை போட்டி (Fed Cup) நடைபெறும்.

1963 முதல் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தன்னுடைய நாட்டுக்காகச் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளுக்கு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ஐடிஎஃப்) சார்பாக 2009 முதல் ஹார்ட் விருது வழங்கப்பட்டுவருகிறது.

இந்த ஆண்டு ஆசிய-ஓசியானா மண்டலத்திலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சாக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்காக வழங்கப்பட்ட இரண்டாயிரம் டாலர் பரிசுத்தொகையை தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு சானியா வழங்கியுள்ளார்.

மற்ற மண்டலங்களில் வென்றவர்கள்.,

  • ஐரோப்பா / ஆப்பிரிக்கா மண்டலம் – அனெட் கொன்டாவிட்
  • அமெரிக்க மண்டலம் – பெர்னாண்டா கான்ட்ரெராஸ் கோம்ஸ்

5. The Room Where It Happened: A White House Memoir என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. டொனால்டு டிரம்ப்
  2. நிக்கி ஹேலி
  3. மைக் பென்ஸ்
  4. ஜான் போல்டன்
Answer & Explanation
Answer: ஜான் போல்டன்

Explanation:

அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் The Room Where It Happened: A White House Memoir என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

6. உலக இடம்பெயர்ந்த பறவை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 7-மே
  2. 8-மே
  3. 9-மே
  4. 10-மே
Answer & Explanation
Answer: மே-9

Explanation:

World Migratory Bird Day

ஐக்கியநாடுகள் சபையினால் 2006-முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் அக்டோபர் மாதங்களின் 2வது சனிக்கிழமை உலக இடம்பெயர்ந்த பறவை தினமாக / உலக வலசை போதல் தினம் () அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மே-9 மற்றும் அக்டோபர்-10 ஆகிய தேதிகளில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

கருப்பொருள்: Birds Connect Our World

7. தேசிய தொழில்நுட்ப தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 10-மே
  2. 11-மே
  3. 12-மே
  4. 13-மே
Answer & Explanation
Answer: மே-11

Explanation:

1998-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் தலைமையில் இந்தியா முதல் முறையாக ஆப்ரேஷன் சக்தி என்ற பெயரில் அணு ஆயுத சோதனை (Shakti-1) நடத்தியது.

அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கருப்பொருள்: Focusing on Rebooting the economy through Science and Technology

12th May Current AffairsClick

More TNPSC Current Affairs



1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th & 11th May 2020”

Leave a Comment