Current Affairs in Tamil 12th May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 12th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. GCC VIDMED என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநகராட்சி?
- சென்னை
- கோவை
- மதுரை
- திருநெல்வேலி
Answer & Explanation
Answer: சென்னை
Explanation:
சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் (Video Call) மூலம் சிகிச்சை அளிக்க GCC VIDMED புதிய செயலியை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
இதனை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் மே-12 அன்று அறிமுகப்படுத்தினார்.
இதை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம் (வீடியோ கால்) 24 மணிநேரமும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
GCC-கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன்
2. சமீபத்தில் மத்திய அரசு அறிமுகம்படுத்தியுள்ள கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டத்தின் பெயர்?
- இ-சஞ்சீவனிஓபிடி
- ஆயுஷ்24×7
- ஆயுஷ்IN24x7
- ஹெல்ப்DOC
Answer & Explanation
Answer: இ-சஞ்சீவனிஓபிடி
Explanation:
esanjeevani OPD
மத்திய அரசு இ-சஞ்சீவனிஓபிடி என்ற கட்டணமில்லா காணொளி மருத்துவ ஆலோசனை திட்டத்தை கடந்த மாதம் தொடங்கியது.
இந்த திட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் இணைந்துள்ளது.
அதாவது esanjeevaniopd.in என்ற இணைய முகவரியில் சென்று, மக்கள் வீட்டில் இருந்தே காணொளி மூலம் மருத்துவ ஆலோசனையை இலவசமாக பெறமுடியும்.
TNPSC Group 1 Model Papers – Download
3. சமீபத்தில் FIR Aapke Dwar Yojana என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- மத்தியப் பிரதேசம்
- உத்திரப் பிரதேசம்
- குஜராத்
- பஞ்சாப்
Answer & Explanation
Answer: மத்தியப் பிரதேசம்
Explanation:
சமீபத்தில் மத்தியப் பிரதேச காவல்துறை FIR Aapke Dwar Yojana (FIR at your doorstep) என்ற வீட்டிற்கே வந்த புகார்களை பதிவு செய்யும் (FIR) முறையை துவங்கியுள்ளது.
அதாவது அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், போலீசார் வீட்டிற்கே வந்து FIR பதிவு செய்வர்.
மத்தியப் பிரதேசம் பற்றி:
முதல்வர் – சிவராஜ் சிங் சவுகான்.
கவர்னர்– லால் ஜி டாண்டன்.
4. மத்திய ஆசிய பிராந்தியத்தில் இருந்து சிறந்த விமானநிலையமாக தேர்வாகியுள்ள விமான நிலையம்?
- சாங்கி விமான நிலையம்
- கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
- மியூனிக் விமான நிலையம்
- இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation
Answer: கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
Explanation:
Skytrax Award
பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த பிராந்திய விமான நிலையத்திற்கான இந்த ஆண்டின் ஸ்கைட்ராக்ஸ் (SKYTRAX) விருதை வென்றுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக உலகின் சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை லண்டனை சேர்ந்த Skytrax நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதல் மூன்று இடங்களை பிடித்தவை.,
- Singapore Changi Airport
- Tokyo Haneda Airport
- Hamad International Airport (Doha, Qatar)
5. சமீபத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அனிதா கர்வால்
- அனில் சஹஸ்ரபுதே
- டி. பி. சிங்
- மனோஜ் அஹுஜா
Answer & Explanation
Answer: மனோஜ் அஹுஜா
Explanation:
CBSE-இன் தலைவராக இருந்த அனிதா கர்வால், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (Department of Education and Literacy) செயலாளராக நியமிக்கப்பட்டத்தை தொடர்ந்து,
புதிய தலைவராக மனோஜ் அஹுஜா (Manoj Ahuja) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்.,
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கக தலைவர் (AICTE )- அனில் சஹஸ்ரபுதே
பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் (UGC) – டி. பி. சிங்
6. சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ள தீபா மாலிக் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- ஈட்டி எறிதல்
- குண்டு எறிதல்
- நீளம் தாண்டுதல்
- கோல்ப்
Answer & Explanation
Answer: குண்டு எறிதல்
Explanation:
2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபா மாலிக் தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்துள்ளார்.
ஹரியானவை சேர்ந்த இவர் இந்திய பாரா ஒலிம்பிக் சங்க தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்.,
இவர் 2019 ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது (மாற்றுத் திறனாளி) பெற்றவர், மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கும் 2019 ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுவழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் – நரிந்தர் துருவ் பாத்ரா
7. சர்வதேச செவிலியர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 9th மே
- 10th மே
- 11th மே
- 12th மே
Answer & Explanation
Answer: மே-12
Explanation:
நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே-12 ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள் – Nurses: A voice to lead- Nursing the World to Health.
காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டை செவிலியர்கள் ஆண்டாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திள்ளது குறிப்பிடத்தக்கது.
13th & 14th Current Affairs – Click
More TNPSC Current Affairs
Related