TNPSC Current Affairs Question and Answer in Tamil 13th & 14th May 2020

Current Affairs in Tamil 13th  & 14th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 13th & 14th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 13th and 14th May 2020

1. சமீபத்தில் எந்த ஊரை சேர்ந்த மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

  1. தஞ்சாவூர்
  2. தம்மம்பட்டி
  3. அரும்பாவூர்
  4. மாமல்லபுரம்
Answer & Explanation
Answer:– அரும்பாவூர்

Explanation:

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்கு முன்னர் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள குளம், ஏரி போன்றவற்றில் விளைகிறது. இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.

இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படுகின்றன.

2. நெஞ்சக நோய்களை கண்டறிய நடமாடும் X – ray வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?

  1. கேரளா
  2. ஆந்திரா
  3. கர்நாடகா
  4. தமிழ்நாடு
Answer & Explanation
Answer:– தமிழ்நாடு

Explanation:

கரோனா பாதிப்பினால் ஏற்படும் நெஞ்சக நோய்களைக் கண்டறிவதற்காக நடமாடும் எக்ஸ்-ரே வாகனங்களை தமிழக அரசு துவங்கியுள்ளது.

நோயாளிகளின் வசிப்பிடங்களுக்கே சென்று எக்ஸ்-ரே பரிசோதனைகள் மேற்கொண்டு முடிவுகள் உடனடியாக தெரியப்படுத்தப்படும்.

முதல் கட்டமாக 14 வாகனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

TNPSC Group 1 Model Papers – Download

3.சமீபத்தில் பிரதமர் அறிவித்துள்ள சுயசார்பு பொருளாதார திட்டத்தின் மதிப்பு?

  1. ரூ.12 லட்சம் கோடி
  2. ரூ.17 லட்சம் கோடி
  3. ரூ.20 லட்சம் கோடி
  4. ரூ.22 லட்சம் கோடி
Answer & Explanation
Answer:– ரூ.20 லட்சம் கோடி

Explanation:

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் 

நாடு சுயசார்பை எட்ட ரூ.20 லட்சம் கோடியில் பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும்.

பொருளாதாரம், உள்கட் டமைப்பு, செயல்திட்டம், மக்கள் தொகை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படை யாகக் கொண்டு சுயசார்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

4. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப அழைத்து செல்ல, இந்திய ரயில்வே எந்த பெயரில் ரயில்களை இயங்கின?

  1. கோவிட் ஸ்பெஷல்
  2. ஷ்ராமிக் ஸ்பெஷல்
  3. பாயிண்ட் ரயில்வே
  4. அமிர்தா ஸ்பெஷல்
Answer & Explanation
Answer:– ஷ்ராமிக் ஸ்பெஷல்

Explanation:

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே “ஷ்ராமிக் சிறப்பு” (shramik special) சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 800 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்கள் மே 14 ம் தேதி நிலவரப்படி, இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த மாநிலத்தை அடைந்துள்ளனர்.




5. சமீபத்தில் எந்த நாடு தனது நாணயதிற்கு ‘டோமன்’ என்ற புதிய பெயரை சூட்ட உள்ளது?

  1. ஈரான்
  2. ஈராக்
  3. ஆப்கானிஸ்தான்
  4. இத்தாலி
Answer & Explanation
Answer:– ஈரான்

Explanation:

ஈரான் தனது நாணயத்தை தற்போதுள்ள ‘ரியால்’ லிருந்து ‘டோமன்’(Rial to Toman) என்று மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.

மதகுரு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பின் இந்த புதிய மசோதா நடைமுறைக்கு வரும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.

6. சமீபத்தில் அம்போ என்ற சூறாவளியால் பாதிப்படைந்துள்ள நாடு?

  1. கம்போடியா
  2. தாய்லாந்து
  3. வியட்நாம்
  4. பிலிப்பைன்ஸ்
Answer & Explanation
Answer:– பிலிப்பைன்ஸ்

Explanation:

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியின் சமர் தீவை அம்போ (Ambo) என்ற சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

7. 7-வது பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது?

  1. நியூசிலாந்து
  2. உருகுவே
  3. இந்தியா
  4. ஜோர்டான்
Answer & Explanation
Answer:– இந்தியா

Explanation:

2008 ஆம் ஆண்டுமுதல் 2-ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் 7-வது பதிப்பு பிப்ரவரி 17, 2021 -இல் இந்தியாவில் நடைபெறஉள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த போட்டி. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

8. சர்வதேச குடும்ப தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே-12
  2. மே-13
  3. மே-14
  4. மே-15
Answer & Explanation
Answer:– மே-15

Explanation:

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 20 இல் சர்வதேச குடும்ப தினம் மே 15 அன்று அனுசரிக்க வேண்டும் என முடிவு செய்தது.

குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது, குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் குடும்ப வன்முறைச் சட்டம் 2005 இல் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருப்பொருள்: Families in Development: Copenhagen & Beijing+25

15th & 16th Current Affairs – Click

More TNPSC Current Affairs



Leave a Comment