TNPSC Current Affairs Question and Answer in Tamil 15th & 16th May 2020

Current Affairs in Tamil 15th & 16th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 15th & 16th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 15th and 16th May 2020

1. சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு, உலக வங்கி எவ்வளவு தொகை கடன் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது?

  1. 10 கோடி டாலர்
  2. 100 கோடி டாலர்
  3. 25 கோடி டாலர்
  4. 250 கோடி டாலர்
Answer & Explanation
Answer:– 100 கோடி டாலர்

Explanation:

‘‘சமூக பாதுகாப்பு திட்டத்துக்காக இந்தியாவுக்கு 100 கோடி டாலர் (சுமார் ரூ.7,566 கோடி) கடன் உதவி அளிக்கப்படும்’’ என்று உலக வங்கி 15-5-2020 அன்று அறிவித்துள்ளது.

இந்த 100 கோடி டாலரில் 55 கோடி டாலர் சர்வதேச மேம்பாட்டு சங்கம் (ஐடிஏ) மூலமாகவும், 20 கோடி டாலர் சர்வதேச மறுசீரமைப்பு வங்கி மூலமாகவும் அளிக்கப்படுகிறது.

உலக வங்கியின் இயக்குநர்: ஜூனைத் அஹ்மத்

2. சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் பெயர்?

  1. அம்பான்
  2. ஃபாக்சாய்
  3. வாயு
  4. அம்போ
Answer & Explanation
Answer:– அம்பான்

Explanation:

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயலானது உருவாங்கியுள்ளது. இந்த புயலுக்கு “அம்பான்” (Amphan) என்று பெயரிடப்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கு 670 கிமீ தொலைவில் இந்த உம்பன் புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புயலுக்கு “அம்பான்” என பெயர் வைத்தது தாய்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 1 Model Papers – Download

3. உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020-இல் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 68
  2. 70
  3. 74
  4. 81
Answer & Explanation
Answer:– 74

Explanation:

Energy Transition index(ETI) – 2020

உலக பொருளாதார மன்றம்(WEF) வெளியிட்டுள்ள உலகளாவிய ஆற்றல் மாற்ற குறியீடு 2020-இல் இந்தியா 51.5% மதிப்பெண்களை பெற்று 74-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே ஸ்வீடன்(74.2%), சுவிட்சர்லாந்து(73.4%) மற்றும் பின்லாந்து(72.4%) நாடுகள் பிடித்துள்ளன.

4. சமீபத்தில் HOPE (Helping Out People Everywhere) எனும் வலைதளத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. உத்தரகண்ட்
  2. உத்திரப் பிரதேசம்
  3. மத்தியப் பிரதேசம்
  4. சிக்கிம்
Answer & Explanation
Answer:– உத்தரகண்ட்

Explanation:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் அளிக்கவும் உத்தரகண்ட் மாநில அரசு HOPE (Helping Out People Everywhere) எனும் வலைதளத்தை தொடங்கியுள்ளது.

இந்த திட்டமானது Mukhya Mantri Swarojgar Yojana என்ற திட்டத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

உத்தரகண்ட் பற்றி சில.,

  • முதல்வர்: திரிவேந்திர சிங் ராவத்
  • ஆளுநர்: பேபி ராணி மௌரியா




5. சமீபத்தில் ரொட்டி வங்கி என்ற பெயரில் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?

  1. பீகார்
  2. குஜராத்
  3. பஞ்சாப்
  4. உத்தரகண்ட்
Answer & Explanation
Answer:– உத்தரகண்ட்

Explanation:

பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் பொது சமையலறை திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள ‘ரொட்டி வங்கி’ மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற ரொட்டி வங்கிகள் ஏற்கனவே குஜராத், பீகார் மற்றும் பஞ்சாபில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

6. சமீபத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ‘சச்சேத்’ ரோந்து கப்பலை தாயாரித்த நிறுவனம்?

  1. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்
  2. எல் அண்டு டி கப்பல் கட்டும் தளம்
  3. கோவா கப்பல் கட்டும் தளம்
  4. கார்டன் ரீச் ஷிப் பில்டர்
Answer & Explanation
Answer:– கோவா கப்பல் கட்டும் தளம்

Explanation:

கோவா கப்பல் கட்டும் தளதில்(GSL) உருவாக்கப்பட்ட ‘சச்சேத் (ICGS Sachet)’ ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 15-05-2020 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா்.

சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன.

ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத முதல் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. ஸ்லோவாக்கியா
  2. ஸ்லோவேனியா
  3. சுவீடன்
  4. டென்மார்க்
Answer & Explanation
Answer:– ஸ்லோவேனியா

Explanation:

ஐரோப்பாவின் ஸ்லோவெனியா நாடு, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டதாக அறிவித்துள்ளது.

17th to 19th Current Affairs – Click

More TNPSC Current Affairs



Leave a Comment