Current Affairs in Tamil 17th – 19th May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 17th to 19th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. சமீபத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் நவீன தரவு மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது?
- சிறுசேரி
- தரமணி
- ஆவடி
- பொன்னேரி
Answer & Explanation
Answer:– சிறுசேரி
Explanation:
Smart Data Center
தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (SmartData Centre) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
National Payments Corporation of India நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த நவீன தரவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
2. சமீபத்தில் தமிழக அரசு, கொரோனா தொற்றுக்கு எந்த ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது?
- ரெமிடிசி கோவிட்-19
- ஆர்சனிகம் ஆல்பம் 30
- ஆயுஷ் 82
- சஞ்ஜீவினி DHR-24
Answer & Explanation
Answer:– ஆர்சனிகம் ஆல்பம் 30
Explanation:
Arsenicam Album 30
மத்திய ஆயுஷ் அமைச்சகதின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு, கொரோனா தொற்றுக்கு ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆயுஷ் அமைச்சர் – ஸ்ரீபாத் நாயக்
3. மத்திய அரசு பாதுகாப்பு உபகரண உற்பத்தியில் எத்தனை சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்துள்ளது?
- 49
- 58
- 66
- 74
Answer & Explanation
Answer:– 74
Explanation:
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘ சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக, ஆயுத உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 49 சதவீதமாக இருந்த அன்னிய நேரடி முதலீடு 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
4. சமீபத்தில் மதிர் ஸ்மிருஸ்தி(Matir Smristi) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?
- குஜராத்
- மேற்கு வங்காளம்
- பஞ்சாப்
- கர்நாடகா
Answer & Explanation
Answer:– மேற்கு வங்காளம்
Explanation:
மேற்கு வங்க அரசு சில மாவட்டங்களில் உள்ள 50000 ஏக்கர் அளவிலான தரிசு நிலங்களை வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில் மாற்ற மதிர் ஸ்மிருஸ்தி(Matir Smristi) என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
5. சமீபத்தில் இந்தியாவில் செயல்பாட்டுக்கு வந்த 12000 குதிரைத்திறன் கொண்ட ரயில் இன்ஜின் பெயர்?
- வஜ்ரம்-27
- AAXZ – 20
- WAG-12
- வந்தே பாரத் – 20
Answer & Explanation
Answer:– WAG-12
Explanation:
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத்திறன் கொண்ட மிகவும் சக்திவாய்ந்த WAG-12 என்ற இன்ஜினை ரயில்வே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
இந்த என்ஜினுக்கு WAG12 என பெயரிடப்பட்டு 60027 என்ற எண் அளிக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ரயில் நிலையத்தில் இது செயல்பாட்டுக்குக் வந்துள்ளது.
இந்த ரயில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய ரயில் நிலையத்தில் இருந்து தேஹ்ரி-ஆன்-சோனே, கர்வா சாலை வழியாக பர்வாடிஹ் ரயில் நிலையத்துக்குச் செல்கிறது.
WAG-12 – ‘W‘ide/broad Gauge ‘A‘C Electric ‘G‘oods/freight, Class ‘12‘
பிகாரில் உள்ள மாதேபுரா மின்சார ரயில் என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலையில் (Electric Locomotive Factory, Madhepura) இந்த எஞ்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. சமீபத்தில் 73-வது உலக சுகாதார அமைப்பின் கூட்டம் எங்கு நடைபெற்றது?
- நியூடெல்லி
- நியூயார்க்
- ஜெனீவா
- மியூனிக்
Answer & Explanation
Answer:– ஜெனீவா
Explanation:
உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் ஜெனிவாவில் மே 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட 32 நாடுகளில் பிரதிநிதிகள் காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டனர்.
WHO பற்றி சில தகவல்.,
- நிறுவப்பட்ட நாள் – 7 ஏப்ரல் 1948
- தலைமையகம் – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
- பொது இயக்குநர் – டெட்ரோஸ் அதானோம்
- துணை பொது இயக்குநர் – சௌமியா சுவாமிநாதன்
7. உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- ஹிரோக்கி நகாடானி
- டெட்ரோஸ் அதானோம்
- ஹர்ஷ்வர்த்தன்
- பூனம் கேத்ரபால் சிங்
Answer & Explanation
Answer:– ஹர்ஷ்வர்த்தன்
Explanation:
WHO Executive Board
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த ஹர்சவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹர்சவர்தன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.
8. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தற்போதைய தலைவர்?
- பாஸ்கல் லாமி
- ராபர்டோ அஸிவீடோ
- மைக் மூர்
- சுபச்சாய் பானிட்ச்பக்தி
Answer & Explanation
Answer:– ராபர்டோ அஸிவீடோ
Explanation:
உலக வர்த்தக அமைப்பின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் பிரேசிலை சேர்ந்த ராபர்டோ அஸிவீடோ தனது பதவி காலம் முடிவதற்கு முன், ராஜினாமா செய்யப் போவதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
‘சீனாவுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது’ என, அமெரிக்க அரசு தெரிவித்து வரும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.
9. சமீபத்தில் பூமிக்கு அருகில் கடந்து செல்லும் ஸ்வான் என்பது ஒரு?
- குள்ளக்கோள்
- துணைக்கோள்
- வால்நட்சத்திரம்
- விண்கல்
Answer & Explanation
Answer:– வால்நட்சத்திரம்
Explanation:
11600ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான ஸ்வான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.
இதன் வால் சுமார் ஒரு கோடியே 77 லட்சம் கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது.
பனி மற்றும் தூசுக்களால் ஆன இந்த வால் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாக வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
10. உலக உயர் இரத்த அழுத்த தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- மே-15
- மே-16
- மே-17
- மே-18
Answer & Explanation
Answer:– மே-17
Explanation:
உலக சுகாதார நிறுவனம் உயர் இரத்த அழுத்தம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த 2005ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே-17 உலக உயர் இரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கருப்பொருள்: உங்கள் இரத்த அழுத்தத்தை அளவிடவும், அதைக் கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும்
15th-16th Current Affairs – Click
More TNPSC Current Affairs
Related