TNPSC Current Affairs Question and Answer in Tamil 2nd May 2020

Current Affairs in Tamil 2nd May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 2nd May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 2nd May 2020

1. சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஜே.ராதாகிருஷ்ணன்
  2. கண்மதியன்
  3. மு.முத்துக்குமரன்
  4. தேவன் பிரகாசம்
Answer & Explanation
Answer: ஜே.ராதாகிருஷ்ணன்

Explanation:

சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. குழந்தைசாமி
  2. திருமூர்த்தி
  3. செல்வ விநாயகம்
  4. கோவிந்தராஜன்
Answer & Explanation
Answer: செல்வ விநாயகம்

Explanation:

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநராக பதவி வகித்து வந்த குழந்தைசாமி ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய இயக்குநராக செல்வ விநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. Vilokana என்ற ஆய்வு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு?

  1. IISc
  2. IIITM-K
  3. IIT – ரூர்கி
  4. IIT – மெட்ராஸ்
Answer & Explanation
Answer: IIITM-K

Explanation:

காற்றில் கோவிட்-19 வைரஸ் எங்குள்ளது என்று கண்டறிவதற்காக Vilokana என்ற ஆய்வு இயந்திரத்தை, திருவனந்தபுரத்தை சேர்ந்த  IIITM-K என்ற கல்வி  நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Vilokana என்பதற்கு சமஸ்கிருதத்தில் வெளியில் தேடு என்பதாகும்.

IIITM-K :- Indian Institute of Information Technology and Management-Kerala

மேலும், சமீபத்தில் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை X – Ray மூலம் கண்டறியும் தொழில்நுட்பத்தை IIT-ரூர்கி கண்டிப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4. செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் நாசாவின் முதல் ஹெலிகாப்டரின் பெயர்?

  1. இன்ஜெனியூயிட்டி
  2. பொ்சிவியரன்ஸ்
  3. விலோகனா
  4. வைக்கிங்
Answer & Explanation
Answer: இன்ஜெனியூயிட்டி

Explanation:

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த இன்ஜெனியூயிட்டி (Ingenuity) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் செல்ல உள்ள ரோவருக்கு அலெக்சாண்டா் மேத்தா் பரிந்துரைத்த ‘பொ்சிவியரன்ஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.




5. சமீபத்தில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (OECD) தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மைக்கேல் கியுடா
  2. மனிஷா சிங்
  3. ஸ்மிருதி மந்தனா
  4. சோபி எக்லஸ்டோன்
Answer & Explanation
Answer: மனிஷா சிங்

Explanation:

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான மனிஷா சிங் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் (Organization for Economic Cooperation & Development) தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. பெட் கோப்பை ஹார்ட் விருது-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர்?

  1. சானியா மிர்சா
  2. அமிதாப்பச்சன்
  3. விராட்கோலி
  4. மிதாலி ராஜ்
Answer & Explanation
Answer: சானியா மிர்சா

Explanation:

பெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு (Fed Cup Heart Award) முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை சானியா மிர்சாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சானியா மிர்சாவின் பெயர், இந்தோனேஷியாவின் பிரிஸ்கா நுக்ரோகோவுடன் இணைந்து பெட் கோப்பை இதய விருதுக்கு ஆசியா-ஓசியானியா மண்டலத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

7. Shivaji in South Block: The Unwritten History of a Proud People என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. குமார் கேத்கர்
  2. கிரிஷ் குபேர்
  3. நிகில் வாக்லே
  4. ரவீஷ்குமார்
Answer & Explanation
Answer: கிரிஷ் குபேர் (Girish Kuber)

More TNPSC Current Affairs

Current Affairs Revision

TNPSC Current Affairs Question and Answer 1st May



Leave a Comment