TNPSC Current Affairs Question and Answer in Tamil 20th May to 22nd May 2020

Current Affairs in Tamil 20th – 22nd May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 20th – 22nd May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 20th May to 22nd May

Maths Video  – Click Here

1. பாக்கெட்டுகளில் மட்டுமே சமையல் எண்ணெய் விற்பனை செய்யும் புதிய விதிமுறை எப்போது நடைமுறைக்கு வருகிறது?

  1. மே 30
  2. ஜூன் 01
  3. ஜூன் 30
  4. ஜூலை 01
Answer & Explanation
Answer:– ஜூன் 01

Explanation:

சமையல் எண்ணெய்களில் கலப்படத்தை தடுக்கும் பொருட்டு வரும் ஜூன் 1ம் தேதியிலிருந்து சமையல் எண்ணெயை பாக்கெட்டில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் சில்லறை விற்பனைக்கு 2006 முதலே தடை உள்ளது. உணவு பாதுகாப்புச் சட்டம் 2011-லும் உதிரி சமையல் எண்ணெய் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தை, ஆயில் கமிட்டி முடிவின் கீழ் ஜூன் 1ல் மீண்டும் செயல்படுத்தும் விதமாகவே அரசு உத்தரவிட்டுள்ளது.

2. சமீபத்தில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தவர்?

  1. எடப்பாடி க. பழனிசாமி
  2. சி.விஜயபாஸ்கர்
  3. ஜெ.ராதாகிருஷ்ணன்
  4. கோ.பிரகாஷ்
Answer & Explanation
Answer:– விஜயபாஸ்கர்

Explanation:

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 500 சுகாதார ஆய்வாளர்கள் வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இதில் முதற்கட்டமாக 165 சுகாதார ஆய்வாளர்கள் ராயபுரம் மண்டலத்தில் பணிகளை தொடங்கியுள்ளனர்.

TNPSC Group 1 Model Papers – Download

3. சமீபத்தில் ராஜிவ் காந்தி கிசான் நியாய் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?

  1. சட்டீஸ்கர்
  2. பஞ்சாப்
  3. ராஜஸ்தான்
  4. பாண்டிச்சேரி
Answer & Explanation
Answer:– சட்டீஸ்கர்

Explanation:

விவசாயிகள் குறைந்த பட்ச வருமானம் ஈட்டுவதை உறுதிப்படுத்தும் ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா எனப்படும் விவசாயிகள் நலத் திட்டத்தை சட்டீஸ்கர் மாநில அரசு துவங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சுமார் 19 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் உதவித் தொகை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

இதன்படி மாநிலத்தின் முக்கிய பயிரான நெல்லை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 10000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அத்துடன் கரும்புக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.93 என நிர்ணயிக்கப்பட்டு ஏக்கருக்கு ரூ.13000 நிதி உதவி வழங்கப்பட உள்ளது.

சட்டீஸ்கர் முதல்வர் – பூபேஷ் பாகல்

4. சமீபத்தில் சரண் படுகா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு?

  1. மத்தியப்பிரதேசம்
  2. உத்திரப்பிரதேசம்
  3. சத்தீஸ்கர்
  4. மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer:– மத்தியப்பிரதேசம்

Explanation:

தங்கள் மாநிலம் வழியாக செல்லும் புலம் பெயர் தொழிலார்களுக்கு காலணிகள் வழங்க சரண் படுகா என்ற திட்டத்தை மத்தியப்பிரதேச போலீசார் தொடங்கியுள்ளனர்.

சரண்-படுகா திட்டமானது, காடுகளில் கடுமையான இடங்களில் கால்கடுக்க நின்று இலைகள் பறிக்கும் தொழிலாளகளுக்கு காலணிகள் வழங்க சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

5. இந்தியா எஸ்- 400 ஏவுகணையை எந்த நாட்டிலிருந்து வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது?

  1. அமெரிக்கா
  2. ரஷ்யா
  3. இஸ்ரேல்
  4. ஜப்பான்
Answer & Explanation
Answer:– ரஷ்யா

Explanation:

நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்க கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ரஷ்யாவிடமிருந்து ராணுவத் தளவாடங்கள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என்று அமெரிக்கா அப்போது எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்தியா மீதான பொருளாதாரத் தடை குறித்த தீர்மானம் இன்னும் நிலுவையில்தான் உள்ளது என்றும், இந்திய அரசு ராணுவத் தளவாடங்கள் வாங்குவது குறித்து ராஜதந்திர ரீதியாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.




6. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட உள்ள  ‘ஹோப்’ என்ற விண்கலத்தை உருவாகியுள்ள நாடு?

  1. பாகிஸ்தான்
  2. பங்களாதேஷ்
  3. ஐக்கிய அரபு அமீரகம்
  4. ஈரான்
Answer & Explanation
Answer:– ஐக்கிய அரபு அமீரகம்

Explanation:

Al Amal

அரபு மொழியில் அல் அமல் (நம்பிக்கை) என்ற பொருள்படும் ‘ஹோப்’ என்ற விண்கலத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம்-துபாய் உருவாகியுள்ளது.

இந்த விண்கலம் மனிதர்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்கு வருகிற ஜூலை 15 அன்று அனுப்பப்பட உள்ளது.

இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு ஜப்பானின் டனகஷிமா ராக்கெட் ஏவுதளத்தில் (Tanegashima Space Center) இருந்து `ஹெச் 11 ஏ’ என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அமீரக விண்வெளி திட்டத்தில் செவ்வாய்கிரக பயணத்திட்டம் முக்கியமான ஒன்றாகும். அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் இந்த செவ்வாய் கிரக பயண திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில் இந்தியாவின் எந்த மாநில பகுதியை, நேபாள அரசு தனது வரைப்படத்தில் இணைத்துள்ளது?

  1. உத்தரகாண்ட்
  2. உத்தரப்பிரதேஷ்
  3. பீகார்
  4. சிக்கிம்
Answer & Explanation
Answer:– உத்தரகாண்ட்

Explanation:

இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

8. டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடம் வகிப்பவர்?

  1. ரோரி மெக்கல் ராய்
  2. கெராத் பெல்
  3. லெவிஸ் ஹாமில்டன்
  4. ரோஜர் ஃபெடரர்
Answer & Explanation
Answer:– லெவிஸ் ஹாமில்டன்

Explanation:

டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் முதலிடத்தை கால்பந்து வீரரான லெவிஸ் ஹாமில்டன் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை கோல்ப் வீரர் ரோரி மெக்கல் ராயும் மூன்றாம் இடத்தை கால் பந்து வீரர் கெராத் பெல்லும் பிடித்துள்ளனர்.

9. உலக பல்லுயிர் பெருக்க தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே-19
  2. மே-20
  3. மே-21
  4. மே-22
Answer & Explanation
Answer:– மே-22

Explanation:

International Day for Biodiversity

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும், தாவர இனங்களும் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் May-22 இல் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Our solutions are in nature

10. உலக அளவியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே-19
  2. மே-20
  3. மே-21
  4. மே-22
Answer & Explanation
Answer:– மே-20

Explanation:

World Metrology Day 2020

1875 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதியில் 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச எடை மற்றும் அளவுகள் அமைப்பை ஏற்படுத்தினர்.

அதனை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மே-20 உலக அளவியல் தினமாக அனுசரிக்கப்படுகிறது

கருப்பொருள்: உலகளாவிய வர்த்தகத்திற்கான அளவீடுகள்

17th-19th Current Affairs – Click

More TNPSC Current Affairs



Leave a Comment