Current Affairs in Tamil 23rd & 24th May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 23rd & 24th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

Maths Video – Click Here
1. சமீபத்தில் தமிழகத்தின் எப்பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளன?
- வடபொன்பரப்பி
- மணலூர்
- அன்னவாசல்
- இலுப்பூர்
Answer & Explanation
Answer:– மணலூர்
Explanation:
கீழடி, கொந்தகை, அகரத்தைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மணலூரில் 2 ஏக்கர் பரப்பளவில், முதல் முறையாக அகழாய்வு பணிகள் மே-23 அன்று தொடங்கியது.
கீழடி தொழிற்சாலைகள் பகுதியாகவும் கொந்தகை ஈமக்காடு பகுதியாகவும் உள்ளன. அகரம், மணலூர் வாழ்விட பகுதியாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
2. ஜூன்-1 அன்று திறக்கப்பட உள்ள சிலப்பதிகாரப் பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
- மதுரை
- குன்னூர்
- எடப்பாடி
- சென்னை
Answer & Explanation
Answer:– மதுரை
Explanation:
கண்ணகி, கடச்சனேந்தலில்(கடை சிலம்பு ஏந்தல்) இருந்து மதுரைக்கு நடந்து சென்றதாக சிலப்பதிகாரம் குறிப்பிடும் இடமான தற்போது உள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சிலப்பதிகாரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 1 Model Papers – Download
3. சமீபத்தில் மீ அன்னபூர்ணா (Mee Annapurna) என்ற திட்டம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது?
- கர்நாடகா
- குஜராத்
- கேரளா
- மஹாராஷ்டிரா
Answer & Explanation
Answer:– மஹாராஷ்டிரா
Explanation:
மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சமூகத்தின் நலனுக்காக இத்திட்டம் Integrated Risk Insurance என்ற காப்பீடு இடைத்தரகர் நிறுவனத்தினால் துவங்கப்பட்டுள்ளது.
4. சமீபத்தில் வங்கி தோழி (BC Sakhi Yojana) என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- உத்தரபிரதேசம்
- மத்தியபிரதேசம்
- குஜராத்
- மஹாராஷ்டிரா
Answer & Explanation
Answer:– உத்தரபிரதேசம்
Explanation:
Banking Correspondent Sakhi Yojana
கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வங்கிகளில் நிலவும் நெரிசலை குறைக்கவும் உத்தரபிரதேச அரசு ரூ.480 கோடி மதிப்பில் வங்கி தோழி என்ற திட்டத்தை துவங்கியுள்ளது.
வங்கித்தோழி என்ற இந்த புதிய பணியில் 58 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்பட உள்ளனர், மேலும் இவர்களுக்கு மாதம் 4000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
5. உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- கய் சோர்மன்
- ரகுராம் ராஜன்
- கீதா சர்மா
- ஆபாஸ் ஜா
Answer & Explanation
Answer:– ஆபாஸ் ஜா
Explanation:
பிகாரை சோ்ந்த ஆபாஸ் ஜா, உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெற்காசியப் பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆபாஸ் ஜா, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான புதுமையான வழிமுறைகளைக் கண்டறிந்து வழங்குவாா்.
6. உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை?
- செரீனா வில்லியம்ஸ்
- நவோமி ஒசாகா
- மரியா ஷரபோவா
- மார்டினா ஹிங்கிஸ்
Answer & Explanation
Answer:– நவோமி ஒசாகா
Explanation:
ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை பட்டியிலில் முதலிடத்தை 22வயதான ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா பெற்றுள்ளார்.
1990ம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. அதன்படி எந்த ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஒரே ஆண்டில் ரூ 284 கோடி சம்பாதித்ததில்லை. இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்
7. Wuhan Diary: Dispatches from a Quarantined City என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- மைக்கேல் பெர்ரி
- ஃபங்க் ஃபங்க்
- அன்னே டைலர்
- ஜொனாதன் ஃபிரான்சன்
Answer & Explanation
Answer:– ஃபங்க் ஃபங்க் (Fang Fang)
Explanation:
சீன பெண் எழுத்தாளரான ஃபங்க் ஃபங்க் (Fang Fang) இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
8. உலக ஆமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- மே-21
- மே-22
- மே-23
- மே-24
Answer & Explanation
Answer:– மே-23
Explanation:
World Turtle Day
ஆமைகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக ஆமைகள் தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே-23 அமெரிக்க ஆமை மீட்பு (ATR) அமைப்பினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Adopt, Don’t Shop
20th-22nd Current Affairs – Click
More TNPSC Current Affairs
Related