Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 25th to 27th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
2. சமீபத்தில் ReStart எனும் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
ஆந்திரப்ரதேஷ்
தெலுங்கானா
கர்நாடகா
கேரளா
Answer & Explanation
Answer:– ஆந்திரப்ரதேஷ்
Explanation:
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1100 கோடி செலவில் ReStart என்னும் திட்டத்தை ஆந்திரப்ரதேஷ் அரசு அறிவித்துள்ளது.
3. சமீபத்தில் “விளையாட்டு”க்கு “தொழில்” அந்தஸ்தை வழங்கியுள்ள மாநிலம்?
மணிப்பூர்
மேகாலாயா
மிசோரம்
நாகலாந்து
Answer & Explanation
Answer:– மிசோரம்
Explanation:
இந்தியாவில் முதன்முறையாக மிசோரம் மாநில அரசு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், விளையாட்டு துறைகளில் அதிக முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும், “விளையாட்டு”க்கு “தொழில்” அந்தஸ்தை வழங்கியுள்ளது.
4. சமீபத்தில் NYIPLA-இன் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
சிவா அய்யாதுரை
அத்வைத் சுப்ரமணியன்
ஜோதி பாத்ரா
ராஜீவ் ஜோஷி
Answer & Explanation
Answer:– ராஜீவ் ஜோஷி
Explanation:
NYIPLA Inventor of the year Award 2020
நியூயார்க் அறிவுசார் சொத்துச் சட்ட சங்கத்தால், ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருதானது, ஐபிஎம் தாம்சன் வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வரும் இந்திய-அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராஜீவ் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
NYIPLA = New York Intellectual Property Law Association
5. சமீபத்தில் இந்திய அரசு எந்த நாட்டிற்கு INDIA என்ற பெயரில் இராணுவ போர் விளையாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளது?
காங்கோ
உகாண்டா
கென்யா
மொரீசியஸ்
Answer & Explanation
Answer:– உகாண்டா
Explanation:
Military War Game Center
உகாண்டா நாட்டு ராணுவத்திற்கு(UPDF), இந்திய ராணுவம் சுமார் 2 கோடி மதிப்பில் INDIA என்ற பெயரில் இராணுவ போர் விளையாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளது.
இதனை மே-24 அன்று உகாண்டா ஜனாதிபதி யோவரி முசவேனி திறந்துவைத்தார்.
6. நியூயார்க் பொருளாதார மீட்பு குழுவில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள்?
சித்தார்த்தா முகர்ஜி
சதிஷ் திரிபாதி
சந்தீப் ஜவஹர்
ஆபிரகாம் வெர்கீஸ்
Answer & Explanation
Answer:– சித்தார்த்தா முகர்ஜி & சதிஷ் திரிபாதி
Explanation:
அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்டுள்ள ‘Blue-Ribbon Commission’ – இல் புலிட்சர் பரிசு வென்ற இந்தியரான சித்தார்த்தா முகர்ஜி, சதிஷ் திரிபாதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் தலைவர், முன்னாள் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ எரிக் ஸ்மிட் என்பது குறிப்பிடத்தக்கது.
7. சமீபத்தில் காலமான பல்பீர் சிங் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
ஹாக்கி
கிரிக்கெட்
கைப்பந்து
கால்பந்து
Answer & Explanation
Answer:– ஹாக்கி
Explanation:
இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற போது அந்த அணியில் இடம்பெற்றிருந்த இந்திய ஹாக்கி வீரருமான பல்பீர் சிங் டோசன்ஜ் (Balbir Singh Dosanjh) சமீபத்தில் காலமானார்.
விளையாட்டு துறையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய முதல் நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான சென்னையை சேர்ந்த சண்முகம் சமீபத்தில் காலமானார்.
8. சமீபத்தில் மே 26-ம் தேதியை, தேசிய அறிவியல் நாளாக அறிவித்துள்ள நாடு?
சுவிட்சர்லாந்து
நார்வே
ஸ்வீடன்
பெல்ஜியம்
Answer & Explanation
Answer:– சுவிட்சர்லாந்து
Explanation:
அப்துல் கலாம் தங்கள் நாட்டிற்கு வருகை தந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு மே 26-ம் தேதி, அப்துல் காலம் அவர்கள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேசிய அறிவியல் தினம்:
சா். சி. வி. ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாடு உலகுக்கு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
9. உலக தைராய்டு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மே-23
மே-24
மே-25
மே-26
Answer & Explanation
Answer:– மே-25
Explanation:
தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே 25 ஆம் தேதி அன்று உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதே நாளில் சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினமும் அனுசரிக்கப்படுகிறது.