TNPSC Current Affairs Question and Answer in Tamil 28th to 31st May 2020

Current Affairs in Tamil 28th – 31st May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 28th – 31st May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 28th May to 31st May 2020

Maths Video  – Click Here

1. சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. திருமூர்த்தி
  2. சையத் அக்பருதீன்
  3. தீபக் மிட்டல்
  4. பெரியசாமி குமரன்
Answer & Explanation
Answer:– பெரியசாமி குமரன்

Explanation:

கத்தார் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்த பெரியசாமி குமரன் ( Periasamy Kumaran ) சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக ( High Commissioner of India to The Republic Of Singapore) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

,மேலும்., கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் – தீபக் மிட்டல்

2. பள்ளி மாணவர்களுக்காக டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. ஆந்திரப் பிரதேசம்
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer:– தமிழ்நாடு

Explanation:

தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.

TNPSC Group 1 Model Papers – Download

3. சமீபத்தில் ‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. உத்தரகண்ட்
  2. உத்திரப் பிரதேசம்
  3. மத்தியப் பிரதேசம்
  4. சிக்கிம்
Answer & Explanation
Answer:– மத்தியப் பிரதேசம்

Explanation:

‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற பெயரில் ஊரடங்கினால் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த தனது மாநிலத்தை சேர்ந்த திறன் தொழிலாளர்களுக்கு (Skilled Workers) வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ளது.

மேலும் சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்திருந்த ஸ்வாமித்வா (SVAMITVA – Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தையும் சேர்த்து செயல்படுத்த உள்ளது.

4. சமீபத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(NABARD) தலைவராக பதிவியேற்றவர்?

  1. ஹர்ஷ்குமார் பன்வாலா
  2. ஜி.ஆர்.சிந்தாலா
  3. எம்.ராமகிருஷ்ணய்யா
  4. ஜே.கே.மோகபத்ரா
Answer & Explanation
Answer:– ஜி.ஆர்.சிந்தாலா

Explanation:

ஜூலை 12, 1982 அன்று தொடங்கப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

5. 2020ஆம் ஆண்டுக்கான WHO-இன் புகையிலை இல்லா தின விருது எந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. SEEDS
  2. Childline India
  3. GOONJ
  4. KATHA
Answer & Explanation
Answer:– SEEDS

Explanation:

பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பான் மசாலா, குட்கா, இ-சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை தடை செய்ய சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம் (Socio-Economic and Educational Development Society (SEEDS)) மேற்கொண்ட முயற்சிகளுக்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை இல்லா தின விருது-2020 -ஐ வழங்கியுள்ளது.

உலக புகையிலையில்லா தினம் (World No-Tobacco Day) மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து – TobaccoExposed




6. சமீபத்தில் சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ஸ்வேதா கோஸ்வாமி
  2. சோனாஹரியா மின்ஸ்
  3. அனுபிரியா மதுமிதா லக்ரா
  4. ஸ்ரீதன்யா சுரேஷ்
Answer & Explanation
Answer:– சோனாஹரியா மின்ஸ்

Explanation:

சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “சோனாஹரியா மின்ஸ்” (Sonajharia Minz) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை  பெற்றுள்ளார்.

  • முதல் பழங்குடியின பெண் பைலட் – அனுபிரியா மதுமிதா லக்ரா
  • சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பழங்குடியினப் பெண் – ஸ்ரீதன்யா சுரேஷ்

7. சமீபத்தில் ஐக்கிய நாடுகளின், இராணுவ பாலின வழக்கறிஞர் விருது பின்வரும் எந்த இந்தியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. தீபா மாலிக்
  2. கனாவே லால்ஜி
  3. விவேக் அலாவத்
  4. சுமன் கவானி
Answer & Explanation
Answer:– சுமன் கவானி

Explanation:

தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் (யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்) பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியும், பெண் அமைதி காக்கும் மேஜர் சுமன் கவானி, ஐக்கிய நாடுகளின் மதிப்புமிக்க இராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு (2019) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8. ‘அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

  1. ஐஎன்எஸ்-கங்கா
  2. ஐஎன்எஸ்-கர்ணா
  3. ஐஎன்எஸ்-கலிங்கா
  4. ஐஎன்எஸ்-சிக்ரா
Answer & Explanation
Answer:– ஐஎன்எஸ் கலிங்கா

Explanation:

அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்காவை (Missile Park ‘Agneeprastha’) , ஐஎன்எஸ் கலிங்காவில் (INS Kalinga) அமைப்பதற்காக 29-5-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

1981 முதல் இன்று வரையிலான ஐஎன்எஸ் கலிங்காவின் ஏவுகணை வரலாற்றிணை காட்சிப்படுத்துவதை ‘’ அக்னிபிரஸ்தா’’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

9.புதிய வளர்ச்சி வங்கி( New Development Bank ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. அனில் கிஷோரா
  2. கே.வி காமத்
  3. மார்கோஸ் ட்ரோஜோ
  4. மசாட்சுகு அசகாவா
Answer & Explanation
Answer:– மார்கோஸ் ட்ரோஜோ

Explanation:

கடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தலைவராக இருந்து வந்த கே.வி காமத் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ,பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கோஸ் ட்ரோஜோ (Marcos Troyjo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை 7 அன்று பதவியேற்கவுள்ளார்.

மேலும்., துணைத்தலைவராக இந்தியாவை சேர்ந்த அனில் கிஷோராவும் (Anil Kishora) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

10. The Ickabog என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. எம்மா வாட்சன்
  2. ஜே.கே.ரவுலிங்
  3. ஸ்டீபன் கிங்
  4. ரிக் ரியார்டன்
Answer & Explanation
Answer:– ஜே.கே.ரவுலிங்

Explanation:

ஹாரி பாட்டர் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் ( J.K. Rowling ) ‘தி இக்கா பாக்’ ( The Ickabog) என்ற தனது புது புத்தகத்தை குழந்தைகளுக்காக இலவசமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.

11. உலக பசி தினம் (World Hunger Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே-27
  2. மே-28
  3. மே-29
  4. மே-30
Answer & Explanation
Answer:– மே-28

Explanation:

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்– பசி ஒரு உலகளாவிய பிரச்சனை, உலகளவிலான பொறுப்புணர்வு தேவை (Hunger: A Global Issue Needs a Global Response)

மேலும் மே-28 இல் அனுசரிக்கப்படும் சில முக்கிய தினங்கள்:-

  • மாதவிடாய் கால சுகாதார தினம் – கருப்பொருள்: Periods in Pandemic
  • பெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச செயல்பாட்டு தினம்- கருப்பொருள்: Women’s Health Matters

12. சர்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே-27
  2. மே-28
  3. மே-29
  4. மே-30
Answer & Explanation
Answer:– மே-29

25th to 27th Current Affairs – Click

More TNPSC Current Affairs



Leave a Comment