Current Affairs in Tamil 3rd May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 3rd May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. கொரோனா பணியில் ஈடுபடுபவர்களை கொளரவிக்கும் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் தோன்றிய இந்திய கடற்படை கப்பல்கள்?
- ராணா & கோமதி
- குக்ரி & கிர்பன்
- சயாத்திரி & கட்மத்
- த்ரிஷுல் & பிரம்மபுத்ரா
Answer & Explanation
Answer: சயாத்திரி & கட்மத்
Explanation:
இந்திய கடற்படை கப்பல்கள் சயாத்திரி மற்றும் கட்மத் ஆகியவை சென்னை மெரினா கடற்கரை பகுதியிலிருந்து வெளிச்சம் பாய்ச்சும் துப்பாக்கி (very pistol) மூலம் 9 சுற்றுகள் சுட்டு கொரோனோ பணியிலிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் இந்தியாவிற்கு 7-டன் மெட்ரிக் மருந்து பொருட்களை வழங்கியுள்ள நாடு?
- இஸ்ரேல்
- கியூபா
- அமெரிக்கா
- யு.ஏ.இ
Answer & Explanation
Answer: யு.ஏ.இ
Explanation:
யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக அரபு நாடு, சுமார் 7 மெட்ரிக் டன் மருந்து பொருட்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கான யு.ஏ.இ. தூதர் – அஹமது அப்துல் ரஹ்மான்
3. சமீபத்தில் ஜெகனண்ணா வித்யா தீவெனா என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- ஆந்திரப்ரதேஷ்
- தெலுங்கானா
- கர்நாடகா
- அசாம்
Answer & Explanation
Answer: ஆந்திரப்ரதேஷ்
Explanation:
ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகனண்ணா வித்யா தீவெனா என்னும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்களை 100% திருப்பி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
4. சமீபத்தில், மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- குஜராத்
- தெலுங்கானா
- மஹாராஷ்டிரா
- ஜார்க்கண்ட்
Answer & Explanation
Answer: மஹாராஷ்டிரா
Explanation:
மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தை மஹாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.
மாநில மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர் தற்போது மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ளனர் மீதமுள்ள 15 சதவீதம் பேருக்கும் இந்த இலவச சுகாதார காப்பீடு திட்டத்தில் இணைத்து 100% மக்களுக்கும் இலவச சுகாதார இன்சூரன்ஸ் வழங்கப்பட உள்ளது.
மே-1 மஹாராஷ்டிரா மாநில தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
5. உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில், இந்தியா வகிக்கும் இடம்?
- 1st
- 2nd
- 3rd
- 4th
Answer & Explanation
Answer: 3rd
Explanation:
Stockholm International Peace Research Institute என்கிற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலகளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. More Info
6. அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள நாடு?
- அமெரிக்கா
- வடகொரியா
- ரஷ்யா
- சீனா
Answer & Explanation
Answer: ரஷ்யா
Explanation:
அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணையை வடிவமைத்துள்ள ரஷ்யா. ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இது 60-மைல் வேகத்தில் பயணிக்க கூடியது. கோபால்ட்-60 என்ற செயற்கை கதிரியக்கத்தால் கடல் மற்றும் கரையின் பெரிய பகுதிகளை மாசுபடுத்தும் வல்லமை கொண்டது.
7. உலக பத்திரிகை சுதந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- மே 3
- மே 2
- மே-1
- ஏப்ரல் 30
Answer & Explanation
Answer: மே 3
Explanation:
பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே 3ம் தேதி, சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Journalism without Fear or Favour
More TNPSC Current Affairs
Current Affairs Revision

Related