Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 4th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. காய்ச்சல் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கேமராக்களை பயன்படுத்தும் மாநிலம்?
தமிழ்நாடு
கேரளா
டெல்லி
குஜராத்
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
ஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காய்ச்சல் இருப்பவர்களை கண்டுபிடிக்க, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் தெர்மல் அன்ட் ஆப்டிக்கல் இமேஜிங் பேஸ் டிடெக்சன் கேமராக்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
2. சமீபத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள இந்திய மாநிலம்?
அசாம்
நாகாலாந்து
மணிப்பூர்
மேகாலையா
Answer & Explanation
Answer: அசாம்
Explanation:
அசாம் மாநிலத்தில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமான 306 கிராமங்களில் 2500 பன்றிகள் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சலின் முதல் நிகழ்வு இது என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
3. கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்க செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை கண்டுபிடித்துள்ள கல்வி நிறுவனம்?
IIT சென்னை
IIT மும்பை
IISc பெங்களூர்
TIFR பாம்பே
Answer & Explanation
Answer: IIT சென்னை
Explanation:
கொரோனா வைரஸ் பட்டவுடன் செயலிழக்க செய்யும் ரசாயனம் பூசிய பாதுகாப்பு உடையை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் கண்டுபிடிதுள்ளனர்.
4. கிஷான் சபா என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள துறை?
DRDO
ISRO
CSIR-CRRI
NCSTC
Answer & Explanation
Answer: CSIR-CRRI
Explanation:
விவசாயகளின் விளைபொருட்களை சங்கிலித்தொடராக இணைக்கவும் மற்றும் விளைபொருட்களின் போக்குவரத்தை மேலாண்மை செய்யவும் CSIR அமைப்பானது கிஷான் சபா(Kisan Sabha) அப்ளிகேசனை அறிமுகம் செய்துள்ளது.
CSIR-CRRI = Council of Scientific and Industrial Research-Central Road Research Institute
5. யாஷ்(YASH) என்ற விழிப்புணர்வு திட்டத்தைத் தொடங்கியுள்ள அமைப்பு?
DRDO
ISRO
CSIR-CRRI
NCSTC
Answer & Explanation
Answer: NCSTC
Explanation:
கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆரோக்கியம் பற்றி அடிப்படை விவரங்களை அறிந்துகொள்ளவும் NCSTC ‘அறிவியல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஆண்டு’ (YASH) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
YASH – Year of Awareness on Science & Health
NCSTC – National Council for Science & Technology Communication
6. சமீபத்தில் காலமான ஏ.கே. திரிபாதி பின்வரும் எந்த அமைப்புடன் தொடர்பானவர்?
லோக்பால்
லோக்ஆயுத்தா
நிதிஆயோக்
தேர்தல் ஆணையம்
Answer & Explanation
Answer: லோக்பால்
Explanation:
கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கி லோக்பால் உறுப்பினரான நீதிபதி ஏ.கே. திரிபாதி காலமானார்.
‘லோக்பால் அமைப்பு’ என்பது அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இதன் தலைவர் பினாகி சந்திரகோஷ் ஆவார்.
7. உலக தீயணைப்பு படையினர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
2 மே
3 மே
4 மே
5 மே
Answer & Explanation
Answer: மே 4
Explanation:
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர்.
1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
This site is very useful to me
Thanks for your support!!!