TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th May 2020

Current Affairs in Tamil 5th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 5th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 5th May 2020

1. சமீபத்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொண்டவர்?

  1. நரேந்திர மோடி
  2. அமித்ஷா
  3. ராஜ்நாத் சிங்
  4. சுப்ரமண்யம் ஜெய்சங்கர்
Answer & Explanation
Answer: நரேந்திர மோடி

Explanation:

19வது அணி சேரா நாடுகளின் மாநாடு (NAM Summit) அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமையில் மே 4 அன்று நடைபெற்றது. இதில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றார்.

இம்மாநாட்டின் கருப்பொருள் “United against COVID-19

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டிலும், தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற 18-வது அணி சேரா நாடுகளின் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணி சேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும்.

TNPSC Group 2 Model Papers – Download

2. நியூயார்க் மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?

  1. கீதா கோபிநாத்
  2. சரிதா கோமதிரெட்டி
  3. மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட்
  4. அர்ச்சனா ராவ்
Answer & Explanation
Answer: சரிதா கோமதிரெட்டி

Explanation:

அமெரிக்கா வாழ் இந்திய பெண்ணான சரிதா கோமதிரெட்டி, நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளா்ர்.

மேலும்., சமீபகாலங்களில்…

  • கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அவர்களும்,
  • நியூயார்க் சிவில் நீதிமன்ற நீதிபதியாக அர்ச்சனா ராவும், இடைக்கால சிவில் நீதிமன்ற நீதிபதியாக தீபா அம்பேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3. சமீபத்தில் முக்கிய மந்திரி ஷஹாரி ரோஜ்கர் கேரண்டி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம்செய்துள்ள மாநிலம்?

  1. ஹரியாணா
  2. உத்திரகாண்ட
  3. பஞ்சாப்
  4. ஹிமாச்சல் பிரதேஷ்
Answer & Explanation
Answer: ஹிமாச்சல் பிரதேஷ்

Explanation:

Mukhya Mantri Shahari Rojgar Guarantee Yojna

கொரோனா தொற்றுநோய் பாதிப்பினால் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 120 நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிமாச்சல பிரதேச மாநில அரசு “முக்கிய மந்திரி ஷஹாரி ரோஜ்கர் கேரண்டி யோஜனா” எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

4. சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

  1. சன்னி ஆனந்த்
  2. முக்தார் கான்
  3. தார் யாசின்
  4. அரேதா பிராங்க்ளின்
Answer & Explanation
Answer: சன்னி ஆனந்த், முக்தார் கான் & தார் யாசின்

Explanation:

2020ம் ஆண்டிற்கான சிறந்த புகைப்பட நிருபருக்கான புலிட்சர் விருது காஷ்மீர் அசோசியேட் பிரஸ் புகைப்படக்காரர்களான சன்னி ஆனந்த், முக்தார் கான் மற்றும் தார் யாசின் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியபோது இந்தியா விதித்த ஊரடங்கு உத்தரவின் காலங்களை புகைப்படமாக பதிவு செய்ததற்காக இந்த விருதை பெற்றுள்ளனர்.

சிறந்த நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை கௌரவிக்கும் உலகளாவிய விருதாக புலிட்சர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.




5. ஆர்க்டிகா-எம் என்ற செயற்கைக்கோளை செலுத்த உள்ள நாடு?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ரஷ்யா
  4. இந்தியா
Answer & Explanation
Answer: ரஷ்யா

Explanation:

Arktika-M

ஆர்டிக் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கண்காணிக்க ரஷ்யா தனது முதல் ரிமோட் சென்சிங் மற்றும் அவசர தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஆர்க்டிகா-எம்’-ஐ டிசம்பர் 9, 2020 அன்று ஏவுவுள்ளது.

6. சமீபத்தில் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்வி நிறுவனத்தின் சர்வதேச கவுரவ உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தியர்?

  1. மீனாட்சி பானர்ஜி
  2. பிம்லா பூட்டி
  3. ஷோபனா நரசிம்மன்
  4. மஞ்சு சர்மா
Answer & Explanation
Answer: ஷோபனா நரசிம்மன்

Explanation:

American Academy of Arts and Science

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் கோட்பாட்டு பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் ஷோபனா நரசிம்மன், கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்வி நிறுவனத்தின் சர்வதேச கவுரவ உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

7. சமீபத்தில் பேராசிரியர் பி.பி.லால்- இந்தியா மறுகண்டுபிடிப்பு என்ற மின்னணு புத்தகத்தை வெளியிட்டவர்?

  1. பிரஹ்லாத் சிங் படேல்
  2. நரேந்திர சிங் தோமர்
  3. கிரேன் ரிஜிஜு
  4. தர்மேந்திர பிரதான்
Answer & Explanation
Answer: பிரஹ்லாத் சிங் படேல்

Explanation:

Prof. B. B. Lal- India Rediscovered

உத்திரப்பிரதேஷை சேர்ந்த மாபெரும் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பி.பி.லால் அவர்களின் நூற்றாண்டையொட்டி, “பேராசிரியர் பி.பி.லால்- இந்தியா மறுகண்டுபிடிப்பு”என்ற மின்னணு புத்தகத்தை புதுடெல்லியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் வெளியிட்டார்.

பி.பி.லால் பிறந்த தேதி: 2-5-1921

TNPSC Current Affairs in Tamil - April 2020

Some Important Links



Leave a Comment