Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 6th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.
1. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை தமிழகம் அழைத்து வர நியமிக்கப்பட்டுள்ள தொடர்பு அதிகாரி?
இராதாகிருஷ்ணன்
செல்வ விநாயகம்
நரசிம்மன் சம்பத்
அதுல்யா மிஸ்ரா
Answer & Explanation
Answer: அதுல்யா மிஸ்ரா
Explanation:
பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
2. ‘சாக் ஹாவ்’ என்ற கருப்பு அரிசிற்கு புவிசார் குறியீடு பெற்ற்றுள்ள மாநிலம்?
கர்நாடகா
மேற்கு வங்கம்
மணிப்பூர்
பஞ்சாப்
Answer & Explanation
Answer: மணிப்பூர்
Explanation:
மணிப்பூர் மாநிலத்தில் விளையும் ‘சாக் ஹாவ்’ என்ற கருப்பு அரிசிற்கு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் காஷ்மீரின் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
3. சமீபத்தில் “Exit App” என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
மேற்கு வங்கம்
மஹாராஷ்டிரா
கேரளா
ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: மேற்கு வங்கம்
Explanation:
ஊரடங்கின் காரணமாக மேற்கு வங்கத்திலுள்ள வெளிமாநிலத்தவர்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வகையில் மேற்கு வங்க மாநில அரசு “Exit App”-ஐ அறிமுகம் செய்துள்ளது.
4. சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எந்த அதிபருக்கு விருது வழங்கினார்?
மூன் ஜே-இன்
கிம் ஜாங் உன்
ஷின்சோ அபே
யூரிகோ கொய்கே
Answer & Explanation
Answer: கிம் ஜாங் உன் (Kim Jong-un)
Explanation:
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியைத் தோற்கடித்த 75-வது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடகொரியாவில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தைப் பாதுகாத்து வருவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விருது வழங்கினார்.
5. ‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை கண்டுபிடித்துள்ள அமைப்பு?
டி.ஆர்.டி.ஓ
ஏர் இந்தியா
இஸ்ரோ
IIT மெட்ராஸ்
Answer & Explanation
Answer: டி.ஆர்.டி.ஓ
Explanation:
‘அல்ட்ரா வைலட்’ எனப்படும் புற ஊதா கதிர்கள் மூலம் கிருமி நீக்கம் செய்யும் கோபுரத்தை டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இதற்கு ‘யு.வி., பிளாஸ்டர்‘ என பெயரிட்டுள்ளனர்.
6. சமீபத்தில் பாகிஸ்தான் விமானப்படையின் பைலட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்து மத இளைஞர்?
முகேஷ் ரிஷி
ராகுல் தேவ்
விக்ரம் பட்
பிரதீப் ராவத்
Answer & Explanation
Answer: ராகுல் தேவ்
Explanation:
பாகிஸ்தான் விமானப்படையின் பைலட்டாக இந்துமதத்தை சேர்ந்த ராகுல் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் விமானப்படையின் பைலட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் இந்து இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
4th மே
5th மே
6th மே
7th மே
Answer & Explanation
Answer: மே 5
Explanation:
International Midwives Day – மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கருத்துரு= Midwives with women: celebrate, demonstrate, mobilize, unite – our time is NOW!