TNPSC Current Affairs Question and Answer in Tamil 7th May 2020

Current Affairs in Tamil 7th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 7th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 7th May 2020

1. தமிழ்நாடு அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது எவ்வளவாக உயர்த்தப் பட்டுள்ளது?

  1. 58
  2. 59
  3. 60
  4. 61
Answer & Explanation
Answer: 59

Explanation:

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி மே-7 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

மேலும் கடந்த ஆண்டு தெலுங்கானா அரசு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 அல்லது 61 ஆக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

2. சமீபத்தில் பெரும் விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ஆலையிலிருந்து கசிந்த வாயுவின் பெயர்?

  1. மீதில் ஐசோசயனேட்
  2. குளோரின்
  3. ஸ்டைரீன்
  4. அம்மோனியா
Answer & Explanation
Answer: ஸ்டைரீன்

Explanation:

சமீபத்தில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில்  இயங்கிவந்த எல்.ஜி பாலிமர் நிறுவனத்தில்  இருந்து ஸ்டைரீன் என்ற வாயு கசிந்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டைரீன்(Styrene) என்பது மிக எளிதில் ஆவியாகக் கூடிய திரவ நிலையில் சேமிக்கப்படும் வேதிப்பொருள் ஆகும். இது வினைல்பென்சீன் என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்டைரீன் நிறமற்றதாகவும் சில நேரங்களில் லேசான மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

இதன் மூலக்கூறு வாய்பாடு: C8H8

உணவு வைக்கும் பாத்திரங்கள், பார்சல்கள், மேஜை விரிப்புகள் போன்றவற்றுக்கான பிளாஸ்டிக் தயாரிப்பில் ஸ்டைரீன் பயன்படுத்தப்படுகிறது.

TNPSC Group 1 Model Papers – Download

3. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை விமானம் மூலம் திரும்ப அழைத்து வர இந்தியா மேற்கொண்டுள்ள ஆபரேஷன்?

  1. ஆபரேஷன் சஞ்சீவானி
  2. வந்தே பாரத் மிஷன்
  3. ஆபரேஷன் வெனிலா
  4. ஆபரேஷன் ஹெல்ப்
Answer & Explanation
Answer: வந்தே பாரத் மிஷன்

Explanation:

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சர்வதேச லாக்டவுன் அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களை திரும்ப அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” என்ற மிகப்பெரிய ஆபரேஷனை இந்தியா மேற்கொண்டுள்ளது.

இதற்காக, அரசாங்கம் மே 13 வரை 64 விமானங்களை இயக்க உள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்திய கடற்படை கப்பல் மூலம் மீட்டு வரும் நடவடிக்கை சமுத்திர சேது ( கடற்பாலம் ) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சஞ்சீவானி – More Details

ஆபரேஷன் வெனிலா – More Details

4. சமீபத்தில் “IDEAthon” என்ற திட்டத்தை துவங்கியுள்ள அமைச்சகம்?

  1. நிதி அமைச்சகம்
  2. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  3. ஜல் சக்தி அமைச்சகம்
  4. ஜவுளி அமைச்சகம்
Answer & Explanation
Answer: ஜல் சக்தி அமைச்சகம்

Explanation:

மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூய்மையான கங்கைக்கான தேசியத் திட்டமானது “IDEAthon” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இது கோவிட் – 19 நோய்த் தொற்று எவ்வாறு நதி மேலாண்மை உத்திகளை மாற்றியமைக்கும் என்பதை ஆராயும் “நதி மேலாண்மையின் எதிர்காலம்” என்பதின் மீது கவனம் செலுத்தும் திட்டமாகும்..

5. மருந்துகளை வீடுகளுக்கேச் சென்று வழங்கும் “தன்வந்தரி” என்ற ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம்?

  1. கேரளா
  2. தெலுங்கானா
  3. அசாம்
  4. குஜராத்
Answer & Explanation
Answer: அசாம்

Explanation:

மருந்துகளை வீடுகளுக்கேச் சென்று வழங்கும் “தன்வந்தரி” என்ற ஒரு புதிய திட்டத்தைத் அசாம் தொடங்கியுள்ளது.

மேலும் 200 ரூபாய்க்குக் கீழே உள்ள மருந்துகள் அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக இத்திட்டத்தின்படி வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.




6. சமீபத்தில் ஈராக்கின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர்?

  1. முஸ்தபா அல் காதிமி
  2. முகமது தவுபிக் அலாவி
  3. பர்ஹாம் சாலி
  4. அடில் அப்துல் மஹ்தி
Answer & Explanation
Answer: முஸ்தபா அல் காதிமி

Explanation:

ஈராக்கின் பிரதமராக பதவிவகித்து வந்த முகமது தவுபிக் அலாவிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து புதிய பிரதமராக முஸ்தபா அல் காதிமி சமீபத்தில் பதவியேற்றார்.

More TNPSC Current Affairs



Leave a Comment