TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th May 2020

Current Affairs in Tamil 8th May 2020

Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 8th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.



TNPSC Current Affairs in Tamil 8th May 2020

1. கரோனா வைரஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு தினமணி நாளிதழ் வழங்கியுள்ள தமிழ்ப்பெயர்?

  1. தீநுண்மி
  2. நச்சுநிரல்
  3. நுண்தொற்றி
  4. நுண்சுநிரல்
Answer & Explanation
Answer: தீநுண்மி

Explanation:

கரோனா வைரஸ் கிருமியின் பெயரை முதன் முதலாக ‘தீநுண்மி’ என்ற கலைச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்திய தினமணி நாளிதழுக்கு தமிழ் வளா்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

TNPSC Group 1 Model Papers – Download

2. சமீபத்தில் பிரவாசி ரஹத் மித்ரா என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?

  1. உத்திரப்பிரதேசம்
  2. மத்தியப்பிரதேசம்
  3. குஜராத்
  4. அசாம்
Answer & Explanation
Answer: உத்திரப்பிரதேசம்

Explanation:

பிற மாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு திட்டங்களின்கீழ் சலுகைகளை பெறும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து மாநில வருவாய் துறையால் உருவாக்கப்பட்ட ‘பிரவாசி ரஹத் மித்ரா’ மொபைல் அப்ளிகேசனை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

3.பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் வாயிலாக மத்திய அரசு ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது?

  1. ரூ.32,600 கோடி
  2. ரூ.34,200கோடி
  3. ரூ.34,800 கோடி
  4. ரூ.36,800 கோடி
Answer & Explanation
Answer: ரூ.34,800 கோடி

Explanation:

கரோனா வைரஸ் பரவலால் அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.34,800 கோடி நிதி உதவி அளித்துள்ளது.

இந்தத் தொகையானது மார்ச் 26-ம் தேதி முதல் பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

4. மாலத்தீவில் சிக்கிய இந்தியர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பல்?

  1. ஐஎன்எஸ் ஜலஷ்வா
  2. ஐ.என்.எஸ் மகர்
  3. ஐ.என்.எஸ் ஷர்துல்
  4. ஐ.என்.எஸ் மர்மகோவா
Answer & Explanation
Answer: ஐ.என்.எஸ் ஜலஷ்வா & ஐ.என்.எஸ் மகர்

Explanation:

ஆபரேஷன் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக மாலத்தீவுகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் ஜலஷ்வா மற்றும் ஐஎன்எஸ் மகர் ஆகிய கப்பல்கள் மாலத்தீவுகளுக்கும், ஐஎன்எஸ் ஷர்துல் என்ற கப்பல் வளைகுடாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




5. சமீபத்தில் பொது கணக்குக் குழுவின் (PAC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மல்லிகார்ஜுன கார்கே
  2. முரளி மனோகர் ஜோசி
  3. ஆதிர் இரஞ்சன் சவுத்ரி
  4. நூருல் இசா அன்வார்
Answer & Explanation
Answer: ஆதிர் இரஞ்சன் சவுத்ரி

Explanation:

பொது கணக்குக் குழுவின் (PAC) தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் இரஞ்சன் சவுத்ரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Public Accounts Committee

பொது கணக்குக் குழு என்பது இந்திய நாடாளுமன்றத்தால், இந்திய அரசின் செலவுகளை தணிக்கை செய்ய அமைக்கப்படும் குழுவாகும்.

ஆண்டுதோறும் பொது கணக்குக் குழுவிற்கு மக்களவையிலிருந்து 15 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 7 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு ஆண்டு ஆகும். குழுவின் தலைவர் மக்களவை சபாநாயகரால் நியமிக்கப்படுகிறார்.

1967 ல் இருந்து குழுவின் தலைவராக எதிர்க் கட்சியிலிருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார். அமைச்சர் ஒருவர் இந்த குழுவில் உறுப்பினராக இருக்கமுடியாது.

பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றால், அவருக்கு பதில் இக்குழுவிற்கு புதிய உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

6. ‘பெலூடா’ என்ற பெயரில் கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறியும் சோதனை முறையை அறிமுகம் செய்துள்ள அமைப்பு?

  1. IIT ரூர்கி
  2. AIMS ரிஷிகேஷ்
  3. CSIR
  4. DRDO
Answer & Explanation
Answer: CSIR

Explanation:

கரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய உதவும் சோதனை முறையை  இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (CSIR) கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனை முறைக்கு பிரபல துப்பறியும் கதாபாத்திரமான பெலுடாவின் பெயரை வைத்துள்ளது

பெலுடா, இயக்குநர் சத்யஜித் ரே கதைகளில் வரும் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவை சேர்ந்த மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், கலிபோர்னியா பல் கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் இதுபோன்ற ஒரு பரி சோதனைக்கு, ‘டிடெக்டர் ஷெர் லாக்‘ என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

7. உலக செஞ்சிலுவை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 5th மே
  2. 6th மே
  3. 7th மே
  4. 8th மே
Answer & Explanation
Answer: மே 8

Explanation:

செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே 8-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

More TNPSC Current Affairs



3 thoughts on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 8th May 2020”

  1. Sir ungaloda CA ennoda mailbox kku vanthudichi sir romba thanks sir
    Then oru chinna request sir ungaloda CA la 7 or 6 questions thaan sir irukku athu innun oru kooduthala 10 nnu iruntha engalukku neraiya information kedaikkum sir ithunaala CA kkunnu othukkura time innum romba useful ah irukkum sir itha ennoda personal request ah eduthukkunga sir please

    Reply
    • இது lockdown டைம் என்பதால், பொதுவாக நடக்கக்கூடிய மாநாடு, விளையாட்டு, கருத்தரங்கு நடைபெறுவது இல்லை. So 6 to 7 வினாக்கள் தான் ஒருநாளைக்கு கிடைக்குது.
      உபயோகம் இல்லாத வினாக்கள் தான் அதிகமாக வருகிறது.
      நாங்களும் 10 வினாக்கள் பதிவிடத்தான் ஆசை படுகிறோம், என்ன பண்றது தற்போதைய நிலைமை அப்படி!!!!

      Reply

Leave a Comment