Current Affairs in Tamil 9th May 2020
Hello, TNPSC Aspirants, Here we provide Current Affairs question and answer in Tamil for 9th May 2020. Take the quiz and improve your Current Affairs Knowledge.

1. ஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?
- பிமல் ஜலான்
- சுரேஷ் டெண்டுல்கர்
- சி.ரங்கராஜன்
- எஸ். கணேசன்
Answer & Explanation
Answer: சி.ரங்கராஜன்
Explanation:
ஊரடங்கிற்கு பின் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழு மூன்று மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 1 Model Papers – Download
2. சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக எங்கு தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது?
- சென்னை
- புதுக்கோட்டை
- ஈரோடு
- தூத்துக்குடி
Answer & Explanation
Answer: தூத்துக்குடி
Explanation:
5 ரூபாய் நாணயத்தை செலுத்தி முகக் கவசம் பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி முகக்கவசம் விற்பனை இயந்திரம் சமீபத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.
3. சமீபத்தில் கைலாஷ்-மானசரோவர் யாத்ரா இணைப்பு சாலை-யை காணொளி மூலம் திறந்து வைத்தவர்?
- நரேந்திர மோடி
- நிதின் கட்கரி
- ராஜ்நாத் சிங்
- பியூஷ் கோயல்
Answer & Explanation
Answer: ராஜ்நாத் சிங்
Explanation:
கைலாஷ்-மானசரோவர் செல்வதற்கான லிப்புலேக் கணவாயை இணைக்கும் 80 கி.மீ நீளமுள்ள இணைப்பு சாலையை காணொளி மூலம் பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்த சாலையானது தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரை அமைக்கப்பட்டுள்ளது.
4. சமீபத்தில் இந்தியா, எந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை அறிவிப்பை வெளியிட்டது?
- கில்ஜித்
- பல்டிஸ்தான்
- முசபராபாத்
- ஆசாத் காஷ்மீர்
Answer & Explanation
Answer: கில்ஜித், பல்டிஸ்தான் & முசபராபாத்
Explanation:
கில்ஜித், பல்டிஸ்தான் பகுதிகளில் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்புக்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து. அந்தப் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா அறிவித்தது.
அதன் ஒருபகுதியாக, முதல்முறையாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு வானிலை முன்னறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித், பல்டிஸ்தான், முசபராபாத் ஆகிய பகுதிகளுக்கு வானிலை முன்னறிவிப்பையும் நேற்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
5. சமீபத்தில் எந்த நாடு “லாங் மார்ச் 5பி” என்னும் ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது?
- வடகொரியா
- தென்கொரியா
- ஜப்பான்
- சீனா
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
சமீபத்தில் சீனாவின் வென்சாங் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட லாங் மார்ச் -5 பி என்ற ராக்கெட் ஏவப்பட்டது.
6. உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர்?
- டேவிட் நபரோ
- சானியா நிஷ்டர்
- மார்கரெட் சான்
- லாரி கோஸ்டின்
Answer & Explanation
Answer: டேவிட் நபரோ
Explanation:
லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உலக சுகாதார பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் டேவிட் நபரோ, உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதராகவும் செயலாற்றி வருகிறார்.
7. சர்வதேச தாலசீமியா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 5th மே
- 6th மே
- 7th மே
- 8th மே
Answer & Explanation
Answer: மே 8
Explanation:
ஒவ்வொரு ஆண்டும் மே 08 ஆம் தேதி உலகம் முழுவதும் உலக தாலசீமியா நோய் (இரத்த அழிவுச் சோகை) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் தாலசீமியா ஆகும்.
கருப்பொருள்: The dawning of a new era for thalassemia: Time for a global effort to make novel therapies accessible and affordable to patients
More TNPSC Current Affairs
Related
Thanks sir
Ithukku munnadi naa anuppuna Comment ah mind pannunga sir please ippo mudincha g4la 159 mark potten sir vela kedaikkala athukku kaaranam CA thaan sir ithunala enakku mark poiduchi sir ithu epdi padikkirathunnu theriyaama padichathaala ennaala sariya mark edukka mudiyala sir please mind sir
Ok Sure நண்பா…