Current Affairs in Tamil 10th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 10th August 2018. Take the quiz and improve your knowledge.

1. சமீபத்தில், “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ள மாநிலம்?
- மத்தியபிரதேசம்
- உத்திர பிரதேசம்
- அசாம்
- குஜராத்
Answer & Explanation
Answer: உத்திர பிரதேசம்
Explanation:
அடுத்த 5 ஆண்டுகளில் 25 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” [One District One Product] என்ற திட்டதை உத்திர பிரதேச அரசு துவங்கியுள்ளது.
இத்திட்டத்தை லக்னோவில் குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மதிப்பு Rs. 25,000 கோடி என்பது குறிப்பிடதக்கது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. சமீபத்தில் ‛happiy.com‛ என்ற இணையதளம் எந்த மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
- கோவை
- திருப்பூர்
- ஈரோடு
- கரூர்
Answer & Explanation
Answer: திருப்பூர்
Explanation:
விவசாய விளைபொருட்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்ய ‛happiy.com‛ என்ற இணையதளம் திருப்பூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் விவசாயத்திற்கு தேவைப்படும் கருவிகள், உரம், பூசிகொல்லி மருந்துகள் என அனைத்துமே கிடைக்கும்.
3. “Untold Story of Broadcasting” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- கெளதம் சாட்டர்ஜி
- M.C சம்பத்
- விஜய் கோயல்
- விவேக் ஷர்மா
Answer & Explanation
Answer: கெளதம் சாட்டர்ஜி (Dr. Gautam Chatterjee)
Explanation:
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில், மத்திய கலாச்சார துறை அமைச்சர் Dr. மகேஷ் ஷர்மா மூன்று புத்தகங்களை வெளியிட்டார்
- ‘Jewellery’ by Dr. Gulab Kothari
- ‘Ghats of Banaras’ by Dr. Sachidanand Joshi
- ‘Untold Story of Broadcasting’ by Dr. Gautam Chatterjee
4. 11 வது “உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை 2018”-யில் இந்தியா வகிக்கும் இடம்?
- 81
- 66
- 60
- 57
Answer & Explanation
Answer: 57
Explanation:
Energizing the World with Innovation என்ற கருப்பொருளுடன்(Theme) வெளியிடப்பட்ட 11 வது “உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை 2018″யில் இந்தியா 57வது இடம் பிடித்துள்ளது. இப்பட்டியலை சர்வதேச அறிவுசார் சொத்துரிமை அமைப்பு(WIPO) வெளியிடுகிறது. WIPO- World Intellectual Property Organisation.
- சுவிச்சர்லாந்து
- நெதர்லாந்து
- ஸ்வீடன்
- இங்கிலாந்து
- சிங்கப்பூர் 5
- அமெரிக்கா
- பின்லாந்து
- டென்மார்க்
- ஜெர்மனி
கடந்த ஆண்டுகளில் இந்தியா வகித்த இடங்கள்
- 2015 – 87th
- 2016 – 66th
- 2017 – 60th
5. உலக உயிரி எரிபொருள் தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
- 7th ஆகஸ்ட்
- 8th ஆகஸ்ட்
- 9th ஆகஸ்ட்
- 10th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 10th ஆகஸ்ட்
Explanation:
புதுதில்லியில் நடைபெற்ற “உலக உயிரி எரிபொருள் தின” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி “உயிரி எரிபொருட்கள் குறித்த தேசிய கொள்கை 2018” என்னும் கையேட்டை வெளியிட்டார் மேலும் பரிவேஷ் (www.parivesh.nic.in) என்னும் இணையதள சேவையையும் தொடங்கி வைத்தார்.
PARIVESH -“Pro Active and Responsive facilitation by Interactive and Virtuous Environmental Single window Hub”
இத்தினத்தின் 2018 ஆண்டுக்கான கருப்பொருள்: உயிரி எரிபொருளுக்கு உகந்ததாக நமது கோளை உருவாக்குதல் (‘Making our Planet a Better place with Bio fuel’)
மேலும் சில.,
- ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி உலக சிங்க தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
6. சமீபத்தில் இந்திய ராணுவம் “Operation Sahyog”-ஐ எந்த மாநிலத்தில் நடத்தியது?
- கேரளா
- இமாச்சல்பிரதேஷ்
- ஜம்மு & காஷ்மீர்
- ராஜஸ்தான்
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
கடும் மழையில் சிக்கியுள்ள கேரள மக்களை காப்பாற்ற “Operation Sahyog” என்ற பெயரில் இந்திய ராணுவமும், “ஆப்ரேஷன் மடாட்” (Operation Madad) என்ற பெயரில் இந்திய கடற்படையும் மீட்புப்பணியை தொடங்கியுள்ளன.
7. சமீபத்தில் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
- பி.கே.தேவ்
- ஹரிவன்ஸ் நாராயண் சிங்
- முக்தர் அப்பாஸ்
- ஹரி பிரசாத்
Answer & Explanation
Answer: ஹரிவன்ஸ் நாராயண் சிங்
Explanation:
மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அந்த பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 9 அன்று நடந்தது. அதில் தே.ஜ கூட்டணி சார்பிலான ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் காங்கிரஸ் உறுப்பினர் ஹரி பிரசாத் ஆவார்.
மொத்தம் 244 உறுபினர்களை கொண்ட மாநிலங்களவையில், ஹரிவன்ஸ் நாராயண் சிங்க்கு 125 வாக்குகளும் ஹரி பிரசாத்க்கு 105 வாக்குகளும் கிடைத்தன.
- 13 வது மாநிலங்களவை துணை தலைவராக பதிவிவகிக்க உள்ளார்
- 41 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
- அரசியலமைப்பு விதி 89 மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிடுகிறது.
8. வியட்நாம் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- அஜய் ஜெயராம்
- இக்ராஷி
- பி.வி சிந்து
- ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ
Answer & Explanation
Answer: ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ
Explanation:
இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோ (தங்கம்), இந்தியாவின் அஜய் ஜெயராமை (வெள்ளி) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் இக்ராஷியை ஜெயராம் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related