TNPSC Current Affairs Question and Answer in Tamil 10th December 2018

Current Affairs in Tamil 10th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 10th December 2018. Take the quiz and improve your knowledge.



1.  சமீபத்தில், இராணு இலக்கிய திருவிழா நடைபெற்ற இடம்?

  1. சண்டிகர்
  2. ஜெய்பூர்
  3. கொல்கத்தா
  4. கொச்சின்
Answer & Explanation
Answer: சண்டிகர்

Explanation:

இந்திய ராணுவம் மற்றும் பஞ்சாப், ஹரியானா அரசுகள் இணைந்து “இராணு இலக்கிய திருவிழா” (Military Literature Festival [MLF]) ஒன்றை சண்டிகரில் நடத்தியுள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வென்றவர்?

  1. பசவ ராஜேஸ்வரி
  2. கனிமொழி
  3. சுஷ்மா ஸ்வராஜ்
  4. சுமித்ரா மகாஜன்
Answer & Explanation
Answer: கனிமொழி

Explanation:

மாநிலங்களவையின் 2018ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது, திமுக மாநிலங்களவை உறுபினரான திருமதி கனிமொழி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள இடம்?

  1. விசாகப்பட்டினம்
  2. கொச்சின்
  3. கொல்கத்தா
  4. புதுச்சேரி
Answer & Explanation
Answer: புதுச்சேரி

Explanation:

இந்தியாவின் முதல் நீருக்கு அடியிலான அருங்காட்சியகம் புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த அருங்காட்சியகம், இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கடலூர் (INS Guddalore)-இல் அமைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

4.  INDRA Navy-2018 என்ற பெயரில் இந்தியா, ரஷ்யாயுடன் இணைந்து எந்த இடத்தில் கடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளது ?

  1. விசாகப்பட்டினம்
  2. போர்ட் பிளையர்
  3. பீட்டர்ஸ்பர்க்
  4. கலினின்கிராட்
Answer & Explanation
Answer: விசாகப்பட்டினம்

Explanation:

இந்திய – ரஷ்ய கடற்படை இணைந்து INDRA Navy-2018 என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் கடற்பயிற்சி மேற்கொள்ள உள்ளன. 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சியின் 10வது பதிப்பு இது ஆகும்.

5.  சமீபத்தில், எந்த நாட்டின் பயணிகளுக்கு இந்தியாவிற்கு வந்த பிறகு விசா பெறும் வசதியை இந்திய அரசு வழங்கியுள்ளது?

  1. தென்கொரியா
  2. சிங்கப்பூர்
  3. மலேசியா
  4.  சவூதி அரேபியா
Answer & Explanation
Answer: தென்கொரியா

Explanation:

ஜப்பானை தொடர்ந்து தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்களுக்கு, இந்தியாவிற்கு வந்த பிறகு விசா பெறும் வசதியை இந்திய அரசு வழங்கியுள்ளது.

6. ஆந்திர மாநில அரசின் நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க முன்வந்துள்ள அமைப்பு?

  1. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
  2. ஆசிய அபிவிருத்தி வங்கி
  3. உலக வங்கி
  4. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Answer & Explanation
Answer: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

Explanation:

ஆந்திர மாநில அரசின் நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

7. 2018ஆம் ஆண்டுக்கான திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப் பட்டதை வென்றவர்?

  1. பிர் கவுர் தில்லன்
  2. சினேகா கோட்
  3. சம்யுக்தா பிரேம்
  4. லுப்னா கான்
Answer & Explanation
Answer: சம்யுக்தா பிரேம்

Explanation:

திருமணம் ஆனவர்களுக்கான அழகி போட்டியான “திருமதி இந்தியா யுனிவர்ஸ் குளோப்” (Mrs India Universe Globe) போட்டியின் பட்டதை கோவையை சேர்ந்த சம்யுக்தா பிரேம் வென்றுள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சர்வதேச போடியில் கலந்துகொள்ள உள்ளார்.

8. சமீபத்தில், நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் ?

  1. டெல்லி
  2. திருச்சூர்
  3. புனே
  4. மொஹாலி
Answer & Explanation
Answer: மொஹாலி

Explanation:

மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்புத் துறை ஆகியவற்றின் ஆதரவுடன், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம், மொஹாலியில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளி வளாகத்தில் 2018 டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும். ஒருங்கிணைந்த, நீடித்த வளர்ச்சி மற்றும் நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

9. “Khelo India Youth Games” நடைபெற உள்ள இடம்?

  1. மும்பை
  2. டெல்லி
  3. புனே
  4. கொல்கத்தா
Answer & Explanation
Answer: புனே

Explanation:

2018ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் “Khelo India Youth Games”-இன் இரண்டாவது பதிப்பு 2019ஆம் ஆண்டு புனையில் நடைபெற உள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான போட்டி கடந்த ஜனவரியில் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

10. சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 6th டிசம்பர்
  2. 7th டிசம்பர்
  3. 8th டிசம்பர்
  4. 9th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 9

Explanation:

ஊழலற்ற சமுதாயத்தை படைக்க ஐ.நா.-ஆல் 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day) என்ற ஒன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Corruption: An Impediment to sustainable Development Goals”

More TNPSC Current Affairs



Leave a Comment