Current Affairs in Tamil 10th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 10th July 2018. Take the quiz and improve your knowledge.
1.தமிழ்நாடில் லோக் ஆயுக்தா மசோதா-2018 நிறைவேற்றப்பட்ட நாள்?
- 10-07-2018
- 08-07-2018
- 07-07-2018
- 09-07-2018
Answer & Explanation
Answer: 09-07-2018
Explantion:
18-வது மாநிலமாக தமிழகத்தில் லோக்ஆயுக்தா அறிமுகம். இதில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருப்பர். பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா விசாரிக்கும். லோக் ஆயுக்தா வரம்புக்குள் முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
2. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் தலைவர்?
- T.S.R சுப்பிரமணியன்
- கஸ்தூரி ரங்கன்
- சாந்தகுமாரி
- தேவ சகாயம்
Answer & Explanation
Answer: கஸ்தூரி ரங்கன்
Explantion:
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் அறிக்கை சமர்பிக்காததால் 3-வது முறையாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3. “Norther River Terrapin” என்பது ஒரு வகை?
- மீன்
- கடல் சிங்கம்
- ஆமை
- பாசி
Answer & Explanation
Answer: ஆமை
Explantion:
தேசிய வனவிலங்கு வாரியத்தின்(NBWL) நிலைக் குழு 4 உயிரினங்களை மத்திய அரசின் மிகவும் அருகி வரும் உயிரினங்கள் (Critically Endangered Species) பாதுகாப்பு திட்டத்தில் இணைத்துள்ளது.
- Norther River Terrapin (கிழக்கு இந்தியாவில் காணப்படும் ஆமை இனம்)
- Clouded Leopard (இமயமலை பகுதிகளில் காணப்படும் சிறுத்தை இனம்)
- Arabian Sea Humpback Whale (அரபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் காணப்படும் திமிங்கலம்)
- Red Panda (சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கொளில் காணப்படும் பாண்டா இனம்)
4. நியூ இந்தியாவின் தகவல்கள் / “Data for New India’’ பற்றிய சர்வதேச வட்டமேசை மாநாடு நடைபெறும் இடம்?
- புது டெல்லி
- கொல்கத்தா
- மும்பை
- ஹைதராபாத்
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explantion:
புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் Data for New India என்ற சர்வதேச வட்டமேசை மாநாட்டை புது டெல்லியில் 9-10 டெல்லியில் நடத்துகிறது. இந்தியாவில் புள்ளிவிவர முறையை மேம்படுத்தவும் புதுமையான கருத்துக்களை அடையாளம் காணவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
5. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த, நியமிக்கப்பட்டுள்ள 3 IAS அதிகாரிகளில் தவறானது?
- அமுதா
- சந்தொஷ் பாபு
- ராஜேந்திர ரத்னு
- நரசிம்மன்
Answer & Explanation
Answer: நரசிம்மன்
Explantion:
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த அமுதா, சந்தொஷ் பாபு, ராஜேந்திர ரத்னு என்ற மூன்று IAS அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
More TNPSC Current Affairs
Related