TNPSC Current Affairs Question and Answer in Tamil 11th August 2018

Current Affairs in Tamil 11th August 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 11th August 2018. Take the quiz and improve your knowledge.




TNPSC Current Affairs 11th August 2018 | Manasi Joshi
1. சமீபத்தில் மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்படுள்ளவர்?

  1. சுஜதா மனோகர்
  2. ஆர். பானுமதி
  3. மஞ்சுளா செல்லூர்
  4. ரூமா பால்
Answer & Explanation
Answer: மஞ்சுளா செல்லூர்

Explanation:

மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் (Appellate Tribunal For Electricity) தலைவராக நீதிபதி “மஞ்சுளா செல்லூர்” (Manjula Chellur) நியமிக்கப்பட்டுள்ளார்

TNPSC Group 2 Model Question Papers – Download

2.  சமீபத்தில் எங்கு ‘தேசிய வனவிலங்கு மரபியல் வள வங்கி’ துவங்கப்பட்டுள்ளது?

  1. சென்னை
  2. ஹைதராபாத்
  3. பெங்களூர்
  4. பாட்னா
Answer & Explanation
Answer: ஹைதராபாத்

Explanation:

இந்தியாவில் முதன்முறையாக அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்புக்காக [Endangered Species ] தேசிய வனவிலங்கு மரபியல் வள வங்கி (National Wildlife Genetic Resource Bank (NWGRB) ஹைதராபாத்தில் துவங்கப்பட்டுள்ளது.

3. “The Book of Untold Stories” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. மாதுரி தீட்சித்
  2. மனிஷா கொய்ராலா
  3. உர்மிலா மடோண்ட்கர்
  4. கரீஷ்மா கபூர்
Answer & Explanation
Answer: மனிஷா கொய்ராலா

Explanation:

பிரபல பாலிவுட் நடிகை “மனிஷா கொய்ராலா” (Manisha Koirala) மார்பக புற்றுநோயிலிருந்து, தான்  மீண்டு வந்த அனுபவங்களை பற்றி “The Book of Untold Stories” என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

4. தொடர்ந்து எழுந்து வரும் ஊக்க மருந்து தொடர்பான பிரச்சனைகளை பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?

  1. சஞ்சய் மித்ரா
  2. முகுல் முத்கல்
  3. கே .எம்.அண்ணாமலை
  4. ஷ்யாம் பெனெகல்
Answer & Explanation
Answer: முகுல் முத்கல்

Explanation:

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், தொடர்ந்து எழுந்து வரும் ஊக்க மருந்து தொடர்பான பிரச்சனைகளை பற்றி ஆராய  ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி “முகுல் முத்கல்” (Mukul Mudgal) தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழுவின் சமீபத்திய பரிந்துரையின்படி ஊக்க மருந்து அளித்து உதவும் நபர்களுக்கு சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது.

5. தேசிய குடற்புழு நீக்க தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?

  1. 7th ஆகஸ்ட்
  2. 8th ஆகஸ்ட்
  3. 9th ஆகஸ்ட்
  4. 10th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 10th ஆகஸ்ட்

Explanation:

தேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day) ஆகஸ்ட் 10 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய இரண்டு தினங்களில் கொண்டாடப்படுகிறது.

6. சமீபத்தில் “முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் எங்கு துவங்கப்பட்டுள்ளது?

  1. பீகார்
  2. இமாச்சல்பிரதேஷ்
  3. ஜம்மு & காஷ்மீர்
  4. ராஜஸ்தான்
Answer & Explanation
Answer: பீகார்

Explanation:

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பெண் குழந்தைகள் பிறந்தது முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை பல்வேறு கட்டங்களில் 54 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டமான “முக்கிய மந்திரி கன்யா உத்தன் யோஜனா” என்ற திட்டம் பீகார் மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது.

மேலும், கிஷோரி ஸ்வஸ்தியா யோஜனா’ திட்டத்தின் கீழ் பெண்கள் இலவச நாப்கின் வாங்குவதற்காக வழங்கப்படும் நிதி ரூ. 150-இல் இருந்து ரூ.300-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

7.  18வது ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்ல உள்ளவர்?

  1. அபினவ் பிந்த்ரா
  2. பி.வி சிந்து
  3. தீபா கர்மாகர்
  4.  நீரஜ் சோப்ரா
Answer & Explanation
Answer: நீரஜ் சோப்ரா

Explanation:

ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 2 வரை இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடக்க உள்ள 18வது ஆசிய போட்டியின் (Asian Games 2018) தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் வீரர் “நீரஜ் சோப்ரா” இந்திய கொடியை (India’s flag-bearer) ஏந்திச் செல்ல உள்ளார்.

8. “மானசி ஜோஷி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கோல்ப்
  2. குத்துசண்டை
  3. பாட்மிட்டன்
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: பாட்மிட்டன்

Explanation:

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை மானசி ஜோஷி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 10th August 2018
TNPSC Current Affairs in Tamil – 9th August 2018
TNPSC Current Affairs in Tamil – 8th August 2018



Leave a Comment