TNPSC Current Affairs Question and Answer in Tamil 11th December 2018

Current Affairs in Tamil 11th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 11th December 2018. Take the quiz and improve your knowledge.



1. சமீபத்தில் யாருக்கு தமிழ் இசை சங்கத்தின் “இசை பேரறிஞர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது?

  1. எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன்
  2. பத்மா மூர்த்தி
  3. சிவராமன்
  4. டி.என்.கிருஷ்ணன்
Answer & Explanation
Answer: சிவராமன்

Explanation:

உமையாள்புரத்தை சேர்ந்த மிருதங்க வித்துவான் கா.சிவராமனுக்கு இந்த ஆண்டுக்கான “இசை பேரறிஞர் விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. “பண் இசை பேரறிஞர் விருது” வெங்கடேசன் என்பவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. குருமூர்த்தி
  2. உர்ஜித் பட்டேல்
  3. அஸ்வனி மகாஜன்
  4. சக்திகாந் தாஸ்
Answer & Explanation
Answer: சக்திகாந் தாஸ்

Explanation:

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 25 ஆவது ஆளுநராக சக்திகாந் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. சமீபத்தில் எந்த நாட்டின் தூதரகம் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

  1. கஜகஸ்தான்
  2. ஆப்கானிஸ்தான்
  3. இஸ்ரேல்
  4. ஜெருசேலம்
Answer & Explanation
Answer: கஜகஸ்தான்

4. இந்தியாவின் முதல் முறையாக நான்கு சர்வதேச விமானநிலையங்களை  கொண்ட மாநிலம் ?

  1. தமிழ்நாடு
  2. கேரளா
  3. கர்நாடகா
  4. மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோழிக்கோடை தொடர்ந்து கண்ணூரில் புதியதாக ஒரு சர்வதேச விமானநிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு சர்வதேச விமானநிலையங்களை  கொண்ட ஒரே மாநிலம் கேரளா என்ற பெருமையை பெற்றுள்ளது.

5.  சமீபத்தில், சந்திரனின் தொலை தூர பகுதியில் தரைஇறங்கும் விதமாக சீனா செயல்படுத்தியுள்ள விண்வெளி திட்டம்?

  1. Chang’e-4
  2. Lunar 4
  3. Yinghuo‑1
  4. Tianzhou 1
Answer & Explanation
Answer: Chang’e-4

Explanation:

சந்திரனின் தொலை தூர பகுதியான வான் கார்மன் மையப்பகுதியில் இறங்கி ஆராய்ச்சி செய்ய சீனா Chang’e-4 என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

6. சமீபத்தில் “மிஸ்டர் சூப்பர்நேஷனல்” பட்டத்தை வென்ற இந்தியர்?

  1. விதித் சந்தோஷ்
  2. பூஷண் பாண்டே
  3. ஜெகத் சிங் கிஷோர்
  4. பிரதாமேஷ் மௌலிங்கர்
Answer & Explanation
Answer: பிரதாமேஷ் மௌலிங்கர்

Explanation:

போலந்தில் “மிஸ்டர் சூப்பர்நேஷனல்” பட்டத்திற்காக நடைபெற்ற போட்டியில் கோவாவை சேர்ந்த பிரதாமேஷ் மௌலிங்கர் வெற்றி பெற்று பட்டத்தை பெற்றுள்ளார். இந்த பட்டத்தை பெறும் முதல் இந்தியர் / ஆசியா-வை சேர்ந்தவர் இவர் என்பது குறுப்பிடத்தக்கது.

7. பின்வரும் எந்த மாவட்ட நீதிமன்றம், மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை ஏற்கும் நீதிமன்றம்?

  1. மும்பை
  2. புனே
  3. கொல்கத்தா
  4. சென்னை
Answer & Explanation
Answer: புனே

Explanation:

இந்தியாவில் முதல்முறையாக புனே மாவட்ட நீதிமன்றம் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை (e-payments service) ஏற்கும் நீதிமன்றம் ஆகும்

8. சமீபத்தில், சர்வதேச நிதி நடவடிக்கைக்கான அமைப்பில் இணைந்துள்ள நாடு?

  1. ஈரான்
  2. ஜெருசேலம்
  3. இஸ்ரேல்
  4. பூட்டான்
Answer & Explanation
Answer: இஸ்ரேல்

Explanation:

சர்வதேச நிதி நடவடிக்கைக்கான அமைப்பின் (Financial Action Task Force (FATF)) 38வது உறுப்பினராக இஸ்ரேல் இணைந்துள்ளது.

9. “சுபாங்கர் ஷர்மா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கோல்ப்
  2. ஹாக்கி
  3. கிரிக்கெட்
  4. பாட்மிட்டன்
Answer & Explanation
Answer: கோல்ப்

Explanation:

Asian Tour Order Of Merit போட்டியில் வென்றதன் மூலம் இளம் வயதில் பட்டம் வென்ற 5வது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

10. உலக மனித உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 8th டிசம்பர்
  2. 9th டிசம்பர்
  3. 10th டிசம்பர்
  4. 11th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 10

Explanation:

ஐ.நா. பொதுச்சபை 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் அனைத்துலக மனித உரிமைகள் என்கிற பிரகடனத்தை வெளியிட்டது. 1950ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது

2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Stand up for Human Rights”

சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினமும் இந்த நாளில் தான் அனுசரிக்கப்படுகிறது

More TNPSC Current Affairs



Leave a Comment