Current Affairs in Tamil 11th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 11th July 2018. Take the quiz and improve your knowledge.
1.உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள்?
- 10-07-2018
- 11-07-2018
- 08-07-2018
- 09-07-2018
Answer & Explanation
Answer: 11-07-2018
Explantion:
உலக மக்கள் தொகை 1987ஆம் ஆண்டில் 500 கோடியானதை முன்னிட்டு ஐ.நா.சபை ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.
கூடுதல் தகவல்கள்:-
- இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – Family planning is a human right
- தேசிய மக்கள்தொகை தினம் – பிப்ரவரி 09
- முதன் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1872 (மேயோ பிரபு காலத்தில்)
- முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த வருடம் 1881 ( ரிப்பன் பிரபு காலத்தில்)
- மக்கள் தொகை பெரும்பிளவு ஆண்டு 1921
2. சமீபத்தில் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியுள்ள மாநிலம்?
- குஜராத்
- மேற்கு வங்கம்
- மகாராஷ்டிரா
- கேரளா
Answer & Explanation
Answer: குஜராத்
Explantion:
குஜராத் அரசு மாநிலத்தில் வாழும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கியுள்ளது . மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவை அடுத்து யூதர்களுக்கு மத சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கிய மூன்றாவது மாநிலமாக குஜராத் உள்ளது
3. உலக வங்கியின் “2017 ம் ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையின்” படி பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் ?
- 3 வது
- 4 வது
- 5 வது
- 6 வது
Answer & Explanation
Answer: 6வது
Explantion:
2017 ம் ஆண்டிற்கான பொருளாதார புள்ளி விபர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 6 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2.597 ட்ரில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
4. 17வது ‘உலக சமஸ்கிருத மாநாடு’ (World Sanskrit Conference) நடைபெறும் நாடு ?
- இந்தியா
- இங்கிலாந்து
- கனடா
- சிங்கப்பூர்
Answer & Explanation
Answer: கனடா
Explantion:
17வது ‘உலக சமஸ்கிருத மாநாடு’ (World Sanskrit Conference) கனடா நாட்டின் “வான்க்குவார்” (Vancouver) நகரில் தொடங்கியுள்ளது
5. தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் (Ease of doing business) முதலிடம் வகிக்கும் மாநிலம்?
- தெலுங்கானா
- ஆந்திரா
- குஜராத்
- கர்நாடகம்
Answer & Explanation
Answer: ஆந்திரா
Explantion:
தொழிற்சாலை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை(DIPP) வெளியிட்டுள்ள தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் (Ease of doing business) ஆந்திரா முதலிடத்தையும், தெலுங்கானா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இப்பட்டியலில் தமிழ்நாடு 15வது இடத்தை பிடித்துள்ளது
6. சமீபத்தில் இந்தியா–தென்கொரியா இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன?
- 11
- 10
- 9
- 8
Answer & Explanation
Answer: 11
Explantion:
இந்தியா–தென்கொரியா இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் 4 நாள் அரசுமுறைப் பயணமாக தனது மனைவி கிம் சுங் சூக்குடன் கடந்த 8–ந்தேதி இந்தியா வந்தார். மேலும் அவர் முன்னிலையில் இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட முழுமையான பொருளாதார கூட்டுறவு, ராணுவம், வர்த்தகம், அறிவியல், உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சிறு, குறு தொழில் முனைவோர் ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் உள்ளிட்ட 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
7. சமீபத்தில் ‘ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி’ என்னும் திட்டம் எந்த மாநிலத்தில் துவங்கப்பட்டுள்ளது?
- கர்நாடகா
- மகாராஷ்டிரா
- ஜார்கண்ட்
- குஜராத்
Answer & Explanation
Answer: மகாராஷ்டிரா
Explantion:
அதிக மின் இழப்பை தவிர்க்கும் வகையில் ‘ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி / One farmer one Transformer’ என்னும் திட்டம் மகாராஷ்டிராவில் துவங்கப்பட்டுள்ளது.
8. உலக நகரங்கள் மாநாடு நடைபெறும் இடம்?
- மலேசியா
- சிங்கப்பூர்
- தைவான்
- தாய்லாந்து
Answer & Explanation
Answer: சிங்கப்பூர்
Explantion:
6வது உலக நகரங்கள் மாநாடு(World Cites Summit) சிங்கப்பூரில் ஜூலை 8 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள் – “Liveable & Sustainable Cities: Embracing the Future through Innovation and Collaboration”
More TNPSC Current Affairs
Related