Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 12th August 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில் ‘தட்கல் சேவா’ என்னும் திட்டத்தை துவக்கியுள்ள மாநிலம்?
பஞ்சாப்
உத்திரப் பிரதேசம்
ராஜஸ்தான்
பீகார்
Answer & Explanation
Answer: பஞ்சாப்
Explanation:
பஞ்சாப் அரசாங்கம் பத்திர பதிவு (Property registration) செய்வதற்காக ‘தட்கல் சேவா'(Tatkal Sewa) என்னும் திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டதின் நோக்கம், காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணிநேரத்தில், சொத்துக்களுக்கு ‘தட்கல்’ (உடனடி) பதிவிற்கான உரிமை கோரலாம்.
2. சமீபத்தில் எங்கு “நேபாளம்-இந்தியா இலக்கிய விழா 2018” நடைபெற்றது?
கோஹிமா / Kohima
காத்மாண்டு / Kathmandu
பிர்குன்ஜ் / Birgunj
திஸ்பூர் / Dispur
Answer & Explanation
Answer: பிர்குன்ஜ்
Explanation:
“நேபாளம்-இந்தியா இலக்கிய விழா 2018” நேபாள நாட்டின் பிர்குன்ஜ் நகரத்தில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது [ Nepal-India Literature Festival 2018 held in Birgunj, Nepal]
3. “Devil’s Advocate: The Untold Story” என்ற புத்தகத்தை எழுதியவர்?
கன்யாயா குமார்
ராஜ்தீப் சர்தேசாய்
பிரணாப் முகர்ஜி
கரண் தாப்பர்
Answer & Explanation
Answer: கரண் தாப்பர்
4. BBC வெளியிட்ட, உலகை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் பெண்?
சஞ்சய் மித்ரா
மேரி கியூரி
மதர் தெரேசா
இந்திராகாந்தி
Answer & Explanation
Answer: மேரி கியூரி
Explanation:
BBC வெளியிட்ட, உலகை மாற்றியமைத்த பெண்கள் பட்டியலில் நோபல்பரிசு வென்ற மேரி கியூரி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மதர் தெரேசா 20 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. சர்வதேச இளைஞர்கள் தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
9th ஆகஸ்ட்
10th ஆகஸ்ட்
11th ஆகஸ்ட்
12th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 12th ஆகஸ்ட்
Explanation:
இளைஞர்களின் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனை களைந்து அவர்களின் சக்தியை நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே நோக்கமாக கொண்ட சர்வதேச இளைஞர்கள் தினம் 1998ஆம் ஆண்டு முதல் ஆகஸ்டு 12 அனுசரிகப்டுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: “Safe Spaces For Youth”
ஜனவரி 12 தேசிய இளைஞர்கள் தினமாக அனுசரிகப்படுவது குறிப்பிடத்தக்கது.
6. தென்மேற்கு ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் துணை தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்?
ஸ்ரீ பிரபுல் எம். படேல்
சுப்ரதா தத்தா
பி. லக்ஷ்மன்
உஷாநாத் பானர்ஜி
Answer & Explanation
Answer: சுப்ரதா தத்தா
Explanation:
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் (All India Football Federation (AIFF) மூத்த தலைவர் சுப்ரதா தத்தா புதிதாக உருவாக்கப்பட்ட தென்மேற்கு ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் (South West Asian Football Federation (SWAFF) துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
7. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
புனே
நவி மும்பை
பெரிய மும்பை
திருப்பதி
Answer & Explanation
Answer: புனே
Explanation:
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் புனே முதலிடம் பிடித்துள்ளது இதில் சென்னைக்கு 14ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலும் தலைநகர் டெல்லி 65ஆவது இடமும் பிடித்துள்ளது. முதல் 10 இடங்களில் தமிழக நகரங்கள் எதுவும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8. “ஹிட்டாஷே பக்ஷி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
கோல்ப்
குத்துசண்டை
பாட்மிட்டன்
கிரிக்கெட்
Answer & Explanation
Answer: கோல்ப்
Explanation:
ஹாங்காங் ஜூனியர் ஓபன் சாம்பியன்ஷிப் 2018 [Golf] போட்டியின் பெண்கள் (13-14) பிரிவில் இந்தியாவை சேர்ந்த ஹிட்டாஷே பக்ஷி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.