Current Affairs in Tamil 12th December 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 12th December 2018. Take the quiz and improve your knowledge.
1. தமிழக அரசின் சுற்றுலாவை துறையை மேம்படுத்த 31 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க முன்வந்துள்ள அமைப்பு?
- ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
- ஆசிய அபிவிருத்தி வங்கி
- உலக வங்கி
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Answer & Explanation
Answer: ஆசிய அபிவிருத்தி வங்கி
Explanation:
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான 31 மில்லியன் டாலர் கடன் உதவி ஒப்பந்தத்தில் மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (Asian Development Bank (ADB)) டிசம்பர் 11 அன்று கையெழுத்திட்டுள்ளன.
இந்த கடன் தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கான கட்டமைப்பை மேம்படுத்தவும், மாநிலத்தின் இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க உதவும். மேலும், இத்திட்டத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, தமிழ்நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும்.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள “ENSURE” என்ற இணையதள சேவையை நிர்வகிக்க உள்ள துறை?
- கால்நடைகள் மற்றும் மீன்வளத்துறை
- மத்திய நீர்வளத் துறை
- பள்ளி கல்வி துறை
- மோட்டார் வாகனங்கள் துறை
Answer & Explanation
Answer: கால்நடைகள் மற்றும் மீன்வளத்துறை
Explanation:
கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு திட்டங்களுக்கான மாநியங்களை “நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக” (Direct Benefit Transfer) நபார்டு (NABARD)- வங்கியால் “ENSURE” என்ற இணையதள சேவை உருவாக்கியுள்ளது. இதனை மத்திய கால்நடைகள் மற்றும் மீன்வளத்துறை செயல்படுத்த உள்ளது.
3. சைபர் பாதுகாப்பு கல்விக்காக 2018-ஆம் ஆண்டின் DSCI எக்ஸலன்ஸ் விருதை வென்ற IIT?
- ஐ.ஐ.டி கொல்கத்தா
- ஐ.ஐ.டி மும்பை
- ஐ.ஐ.டி சென்னை
- ஐ.ஐ.டி கரக்பூர்
Answer & Explanation
Answer: ஐ.ஐ.டி கரக்பூர்
சிறந்த சைபர் பாதுகாப்பு கல்வி வழங்கியதற்காக ஐ.ஐ.டி கரக்பூர்க்கு “இந்தியாவின் தரவு பாதுகாப்பு கவுன்சிலின் (DSCI)” எக்ஸலன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
4. தேசிய ஓய்வு ஊதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு தற்போதுள்ள 10 சதவிகத்தில் இருந்து எத்தனை சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது ?
- 12%
- 14%
- 16%
- 18%
Answer & Explanation
Answer: 14%
5. சமீபத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் 24 வது மாவட்டமாக உருவாக்கப்பட்ட மாவட்டம்?
- சீய் ஜோங்
- பக்கே-கேசாங்
- லேபா ரடா
- ஷி யோமி
Answer & Explanation
Answer: லேபா ரடா
Explanation:
கடந்த ஆகஸ்ட் 29 அன்று புதியதாக மூன்று மாவட்டங்களை உருவாக்க அருணாசலப் பிரதேசத அரசு மசோதா தாக்கல் செய்தது, அதன்படி சமீபத்தில் 23வது மாவட்டமாக ஷி யோமியும் 24வது மாவட்டமாக லேபா ரடா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 25வது மாவட்டமாக பக்கே-கேசாங்கை விரைவில் அறிவிக்க உள்ளது.
6. சமீபத்தில் ஆசியாவிலேயே முதல் முறையாக AdventureNext-18-ஐ நடத்தியுள்ள மாநிலம்?
- உத்திரபிரதேஷ்
- மத்தியபிரதேஷ்
- மகாராஷ்டிரா
- கேரளா
Answer & Explanation
Answer: மத்தியபிரதேஷ்
Explanation:
மத்தியபிரதேச சுற்றுலாத்துறை ஆசியாவிலேயே முதல் முறையாக AdventureNext-18-ஐ நடத்தியுள்ளது.
இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்ச்சியின் கருப்பொருள்: ‘Pulse of Tomorrow’.
7. பள்ளிக் குழந்தைகளுக்கான ”கலா உத்சவ்” என்ற தேசிய கலைப் போட்டிகள் நடைபெற்ற இடம்?
- மும்பை
- டெல்லி
- கொல்கத்தா
- சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
கல்வியில் கலை பற்றிய அறிவை வளர்ப்பதற்காகவும், பள்ளி மாணவர்களின் கலைசார்ந்த திறன்களை மேம்படுத்துவதற்காகவும் 2015ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ”கலா உத்சவ்” என்ற தேசிய கலைப் போட்டிகள் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறுகிறது.
8. 115வது “ஆல் இந்தியா அகா கான் கோல்ட் கோப்பை ஹாக்கி போட்டியில்” சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- SAIL ஹாக்கி அகாடமி
- ரயில்வே ஹாக்கி அகாடமி
- மஹாராஜா ரஞ்சித் சிங் ஹாக்கி அகாடமி
- இராணுவம் XI டானப்பூர் ஹாக்கி அகாடமி
Answer & Explanation
Answer: SAIL ஹாக்கி அகாடமி
Explanation:
115வது “ஆல் இந்தியா அகா கான் கோல்ட் கோப்பை ஹாக்கி போட்டியின்” இறுதி போட்டியில் Army XI Danapur ஹாக்கி அகாடமியை SAIL ஹாக்கி அகாடமி தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
9. சமீபத்தில் 4வது பங்குதாரர்கள் கருத்தரங்கு ( Partners’ Forum 2018 ) நடைபெற்ற இடம்?
- புனே
- கொல்கத்தா
- மும்பை
- புது தில்லி
Answer & Explanation
Answer: புது தில்லி
Explanation:
குழந்தைகள் மற்றும் பேறுகால உயிரிழப்புகளை குறைக்கவும், வளர் இளம் பருவத்தினர், குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை விரைவுப்படுத்தும் நோக்கில், Partners’ Forum எனப்படும் சர்வதேச சுகாதார ஒத்துழைப்பு அமைப்பு செப்டம்பர் 2005-ல் தொடங்கப்பட்டது.
இதற்கு முந்தைய விவாத அரங்குகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (2014), இந்தியாவின் புதுதில்லி (2010) மற்றும் தான்ஸானியாவின் தர் ஏஸ் சலாம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்தியா இரண்டாவது முறையாக இந்த பங்குதாரர்கள் விவாத அரங்கை நடதுகிறது.
10. சர்வதேச மலைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 8th டிசம்பர்
- 9th டிசம்பர்
- 10th டிசம்பர்
- 11th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 11
Explanation:
International Mountain Day
2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Mountains Matter”
More TNPSC Current Affairs
Related