Current Affairs in Tamil 12th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 12th July 2018. Take the quiz and improve your knowledge.
1. 15வது “பிரவாசி பாரதிய திவாஸ்” மாநாடு நடைபெறஉள்ள இடம்?
- பெங்களூர்
- வாரணாசி
- கொல்கத்தா
- சென்னை
Answer & Explanation
Answer: வாரணாசி
Explanation:
15-வது வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு [பிரவாசி பாரதிய திவாஸ் ] வாரணாசியில் நடைபெற உள்ளது.
2. 2018ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள்?
- Be counted: say what you need
- Investing in teenage girls
- Family planning is a human right
- Family Planning- Empowering People, Developing Nations
Answer & Explanation
Answer: Family planning is a human right
Explanation:
பெருகி வரும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் ஜூலை 11ஆம் நாள் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபை சார்பில் கடந்த 1989 ஜூலை 11-ம் தேதி முதல்முறையாக உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டது.
3. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அதிவேக ரயிலுக்குக் வழங்கப்பட்ட குறியீடு என்ன?
- Train 18
- Train 16
- Train 17
- Train 20
Answer & Explanation
Answer:Train 18
Explanation:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அதிவேக ரயிளுக்கு Train 18 குறியீடு வழங்கப்பட்டுள்ளது .
4. சமீபத்தில் இந்திய-கொரிய தொழில்நுட்ப பரிவத்தனை மையம் நிறுவப்பட்டுள்ள நகரம்?
- பெங்களூர்
- மும்பை
- கொல்கத்தா
- புது டெல்லி
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
இந்தியா கொரியா நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் மையம் (India-Korea Technology Exchange Centre) புது டெல்லியில் உள்ள தேசிய சிறு தொழில்கள் கழக(NSIC) வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
5. சமீபத்தில் Microsoft நிறுவனம் எந்த மாநிலத்துடன் மாணவர்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்துள்ளது?
- ஹரியானா
- ராஜஸ்தான்
- உத்திரபிரதேஷ்
- புதுச்சேரி
Answer & Explanation
Answer: ராஜஸ்தான்
Explanation:
ராஜஸ்தான் மாநில அரசு மாணவர்களுக்கு இலவச டிஜிட்டல் பயிற்சி அளிக்க Microsoft நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 9500 மாணவர்கள், 500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
6. சமீபத்தில் “அண்ணா உணவகம்” என்ற மானிய விலை உணவகத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
- குஜராத்
- கர்நாடகா
- கேரளா
- ஆந்திரப்பிரதேசம்
Answer & Explanation
Answer:ஆந்திர பிரதேசம்
Explanation:
ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்க ஆந்திரபிரதேச மாநில அரசானது முதல் கட்டமாக 38 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 100 இடங்களில் அண்ணா உணவகத்தைத் தொடங்கியுள்ளது. காலை, பிற்பகல், இரவு என 3 வேலைகளிலும் தலா 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
7.ஐ.நா சபையின் பாதுகாப்பு அவை (UNSC )ஆயுத மோதலின் போது குழந்தைகளை பாதுகாக்க எந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது?
- தீர்மானம் 2567
- தீர்மானம் 2657
- தீர்மானம் 2427
- தீர்மானம் 2367
Answer & Explanation
Answer:தீர்மானம் 2427
Explanation:
ஆயுத மோதலின் போது குழந்தைகள் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலவாழ்வு ஆகியவற்றுக்கு சட்டகட்டமைப்பை வழங்க ஐ.நா சபையின் பாதுகாப்பு அவை(UNSC) தீர்மானம் 2427 ஐ நிறைவேற்றியுள்ளது.
8.மனிதர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்குவதை முற்றிலும் ஒழிப்பதற்கான தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க – போட்டியை நடத்தஉள்ள மத்திய அமைச்சகம் எது?
- நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்
- கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
- குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம்
Answer & Explanation
Answer: வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
Explanation:
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமானது, போட்டிகள் மூலம் கழிவு நீர் அமைப்புகளை சுத்திகரிப்பு செய்வதற்கான தீர்வுகளை அடையாளம் காணவும் பொருத்தமான நுட்பங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை தொடங்கியுள்ளது.கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இப்போட்டியானது மாணவர்கள், கல்லூரிகள், ஆராச்சியாளர்கள் இடையே நடத்தப்பட உள்ளது.
More TNPSC Current Affairs
Related